Published:Updated:

ரீல் VS ரியல்

ரீல் VS ரியல்
பிரீமியம் ஸ்டோரி
ரீல் VS ரியல்

ரீல் VS ரியல்

ரீல் VS ரியல்

ரீல் VS ரியல்

Published:Updated:
ரீல் VS ரியல்
பிரீமியம் ஸ்டோரி
ரீல் VS ரியல்
ரீல் VS ரியல்

த்திரிகையாளர்னதும் `முதல்வன்’ படத்துல வர்ற அர்ஜுன் மாதிரி, கோட் சூட் போட்டுகிட்டு, முதல்வரையே டென்ஷன் பண்றமாதிரி கேள்வி கேட்டுகிட்டு, சர்க்காரோட நேரடித் தொடர்புல இருக்கிற ஆளா இருப்பாங்கங்கிற மாதிரிதான் உங்க மனசு ஒரு உருவம் கொடுக்குது. ஆனா, நிஜத்துல நான் அப்படி இருக்கமாட்டேன். நான் மட்டுமல்ல, எந்தப் பத்திரிகையாளரும் அப்படி இருக்கமாட்டாங்க. நம்ம தமிழ்சினிமா இப்படி வேற யார், யாரை எப்படியெல்லாம் அபத்தமா, யதார்த்தமில்லாம காட்சிப்படுத்தியிருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குவோமா மக்களே...

ரீல் VS ரியல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டோகிராபர்கள் - அருண் டைட்டன்

“போ
ட்டோகிராபர்கள்னாலே தாடி, குடுமியெல்லாம் வளர்த்துக்கிட்டு, மரத்துல படுத்துத் தூங்கி எழுந்திருக்கிறதெல்லாம் நிஜத்துலேயும் நடக்கும். சொல்லப்போனால், அதைவிட இன்னும் அதிகமாவே நடக்கும். அதுக்காக, கல்யாண வீட்டுக்கு போட்டோ எடுக்கப்போற இடத்துல ஒரு பொண்ணைப் பார்த்து லவ் பண்ற மாதிரி காட்டுறதெல்லாம் வாய்ப்பே இல்ல. அடுத்த க்ளையன்ட் வரமாட்டாங்க. அப்புறம், பைக்ல வீலிங் பண்ணிகிட்டே போட்டோ எடுக்குறது படத்துல மட்டும்தான் நடக்கும். அப்படியெல்லாம் எடுத்தால் பயங்கரமா ஷேக் ஆகும்! ஒரு அடி நீளத்துக்கு லென்ஸ் வெச்சிகிட்டு மூணு அடி தூரத்துல நின்னு போட்டோ எடுத்துட்டிருப்பார் போட்டோகிராபர். அந்த லென்ஸை அவ்வளவு பக்கத்துல வெச்சு எடுக்கவே முடியாது. பார்க்க அழகா இருக்குன்னு எடுத்து, நிஜ போட்டோகிராபர்களைப் பதறவிடுறாங்க. நார்மல் கேமராவைவிட சிசிடிவி கேமராவைத்தான் நம்ம தமிழ் சினிமா பாடாய்ப்படுத்துது. எங்கேயோ நடந்துபோற ஒரு கேரக்டரை ஜூம் பண்ணி ஜூம் பண்ணி, அவர் மரு வெச்சிருக்காரு, நரைச்ச முடிக்காரர், ஆறடி உயரத்துல இருக்காருன்னு எல்லாம் கண்டுபிடிப்பாங்க!”

ரீல் VS ரியல்
ரீல் VS ரியல்

மதுரைக்காரர்கள் - சேட்ட சேது

“எ
ங்க ஊர்க்காரய்ங்க எப்பவோ டிராக், ஷார்ட்ஸுக்கு மாறிட்டாய்ங்க. ஆனா, மதுரைக்காரய்ங்கனாலே கைலியோட காட்டுற இந்தத் தமிழ்சினிமாதான் எப்போ மாறும்னு தெரியலை. மதுரைப் படம்னாலே நாற்பது, ஐம்பது பேர் கெடா மீசையோட புல்லட்ல சுத்துறது, புலிப்பல் செயின்லாம் மாட்டிக்கிட்டு நடமாடும் நகைக்கடை மாதிரி சுத்துவாங்கங்கிறதுலாம் ரொம்பவே ஓவர் பாஸு. பின்ன, மதுரையோட வட்டாரவழக்கையே சிதைச்சுடுச்சு தமிழ் சினிமா. ஒரு படத்துல ஒவ்வொரு வார்த்தையையும் ஒன்பது கிலோமீட்டருக்கு இழுத்து இழுத்துப் பேசுவாய்ங்க. அப்படிலாம் நிஜத்துல பேசிட்டிருந்தீங்கன்னா, “மாப்ள, நீ பேசிட்டு இரு. எனக்குப் பசிக்குது புரோட்டா சாப்பிட்டுவாரேன்”னு கிளம்பிடுவாய்ங்க. அதேமாதிரி, நாக்கைத் துருத்துறதெல்லாம் ஒவ்வொருத்தரின் மேனரிசம். அது என்னமோ மதுரை மாவட்ட எல்லைக்குள்ளே பிறந்த எல்லோருமே அப்படிப் பண்ணுவாங்கன்னு காட்டுறதெல்லாம், தவறு தவறு! அது என்ன நாக்கா, நல்லபாம்பா ஆளாளுக்குக் காட்டி பயமுறுத்துறதுக்கு! அப்புறம், ஹீரோயினை வில்லன் மீனாட்சி அம்மன் கோயில் கிட்டக்க துரத்திட்டு இருப்பாரு, கட் பண்ணுனா ஹீரோயின் தெப்பக்குளம் பக்கம் ஓடிட்டிருக்கும். அங்கிருந்து கட் பண்ணுனா, அழகர் கோயில் அடிவாரத்துல ஃபுல் மேக்கப்ல ஓடிட்டிருக்கும். இதெல்லாம், `சின்னதம்பி’ படத்துல கவுண்டமணியோட மாமனார் சொல்ற மாதிரி ‘நடைமுறைக்கு சாத்தியமே இல்லாதது.’ மதுரைக்குள்ளே கும்பல் கும்பலா அருவாள், கத்தியோட உலவுற ஆட்களை நானும் ரொம்பநாளா தேடிட்டிருக்கேன். இன்னும் கிடைக்கலை!”

ரீல் VS ரியல்
ரீல் VS ரியல்

எழுத்தாளர்கள் - பாமரன்

ரீல் VS ரியல்“எ
ழுத்தாளர்னாலே ஜிப்பாவும் ஜோல்னா பையும் மாட்டிக்கிட்டு, கையில் பேனாவோடு கன்னத்துல கை வெச்சு விட்டத்தை வெறிச்சுப் பார்த்து உட்கார்ந்திருப்பாங்க. சினிமா இதுவரை எதைத்தான் யதார்த்தமா காட்டியிருக்கு, எழுத்தாளர்களை மட்டும் யதார்த்தமா காட்டுறதுக்கு? ஒரு எழுத்தாளர்கூட கண்ணாடி போடாம இருக்கமாட்டான். ஒருவேளை, எழுத்தாளர்களுக்கு எதைப் பற்றியும் சரியான பார்வையில்லைன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களோ என்னவோ! க்ளிப் வெச்ச பரீட்சை அட்டையில ஏ4 பேப்பரை செருகி வெச்சுக்கிட்டு, பேனாவுல எழுதிட்டு இருப்பாங்க. நானெல்லாம் கையெழுத்து போட மட்டும்தான் பேனாவையே எடுக்கிறேன். எழுத்தாளர்ங்கிறவன் மக்களோட மக்களா இருக்கிறவன். அவனை என்னவோ வேற்றுகிரகவாசி மாதிரி காட்டிட்டிருப்பாங்க. எல்லா எழுத்தாளர்கள் வீட்லேயும் ஒரு நாயைக் காட்டுவாங்க. நாய்க்கும் எழுத்தாளர்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம்னே தெரியலைங்க!”

ரீல் VS ரியல்

பாக்ஸர்கள் - ஒலிம்பிக் தேவராஜ்

“அ
வ்வளவு நாள், பாக்ஸிங்னா என்னன்னே தெரியாத ஹீரோ திடீர்னு ஒருநாள் பாக்ஸராக உருமாறி எதிராளிகளைத் தூக்கிப்போட்டு வெளுப்பார். இதெல்லாம் சாத்தியமே இல்லை. ரொம்ப சின்ன வயசுல இருந்து பாக்ஸிங் கத்துக்கிட்டாதான், தைரியமா பாக்ஸிங் ரிங் உள்ளே ஏறி நிற்கவே முடியும். இல்லைன்னா பயத்துல வயிறுதான் கலங்கும். அதேமாதிரி, பயிற்சி எடுக்கிறேன்னு காரை விட்டு கையில ஏத்துறது, உருட்டுக்கட்டையால வயித்துல அடிக்கிற மாதிரியெல்லாம் சினிமாவுல காட்டுவாங்க. உருட்டுக் கட்டையால அல்லையில் அடிச்சா, எலும்பு உடைஞ்சுடும். காரைக் கையில ஏத்தினா கை எலும்பு நொறுங்கிடும். அப்புறம் எப்படி சண்டை போடுறதாம்! பாக்ஸிங்கே தெரியாத ஒருத்தன் ரிங்ல ஏறி அடிக்கக் கையைச் சுழட்டினா, பாக்ஸர்ஸ் ஈஸியா பன்ச்களை `மிஸ்’ வாங்குவாங்க. அடிக்குறவன், கையை சுழட்டின வேகத்துக்கு அவனே கீழே விழுந்து மூஞ்சி, முதுகெல்லாம் அடிவாங்கி நாக் அவுட் ஆகிடுவான். அதைவிட முக்கியமா, க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஆவேசமாகி மெளத் கார்டை எல்லாம் த்தூன்னு துப்பிட்டு, வெறிகொண்டு முஷ்டியை முறுக்கிக் குத்துவார். அப்படி, நிஜ மேட்ச்ல மெளத் கார்டு கீழே விழுந்தால் மேட்சை தற்காலிகமா நிறுத்திடுவாங்க! என்னத்த சொல்ல..!”

ரீல் VS ரியல்
ரீல் VS ரியல்

ஐ.டி தொழிலாளர்கள்  - விநாயக முருகன்

“கொ
ஞ்சநாள் முன்னாடி வரை, ஊருக்குள்ளே நடக்குற எல்லாப் பிரச்னைகளுக்கும் ஐ.டிகாரங்கதான் காரணம்னு தமிழ்நாடே நம்பிட்டிருந்தது. காரணம், தமிழ் சினிமா. ஐ.டிகாரர்கள் எல்லாம் லட்சமா, கோடியா சம்பாதிக்குற மாதிரி காட்டும்போதெல்லாம் காண்டாகுது. அதிகபட்சம் ஒரு ஐ.டி ஆள் சொந்தமா வீடு, கார் வெச்சிருப்பான், அவ்ளோதான். அதுவும் ஈ.எம்.ஐ-யில் வாங்கினதா இருக்கும். 40-50% ஐ.டி. ஊழியர்கள் வீக்கெண்டிலும் வேலை பார்ப்பாங்க. சினிமாவுல காட்டுற மாதிரி சனிக்கிழமை நைட் பார்ட்டியெல்லாம் பரவலா நடக்கவே நடக்காது. ஐ.டி. பொண்ணுங்கனாலே லிபரலா இருப்பாங்க, டிரெஸ்லாம் வேற லெவல்ல இருக்கும்னு காட்டுறதெல்லாம் கொடுமை. ஐ.டி. நிறுவனங்களிலும் டிரெஸ்கோடு இருக்கு. அல்ப கிளுகிளுப்புகளுக்காக ஐ.டி. பொண்ணுங்களை ரொம்ப மட்டமா காட்சிப்படுத்துது சினிமா.”

ரீல் VS ரியல்
ரீல் VS ரியல்

வடசென்னைக்காரர்கள் - சாய்தீனா

“டா
க்டர்னா சிவப்பா இருப்பாங்க, இன்ஜினீயர்னா அயர்ன் பண்ணிய சட்டை போட்டிருப்பாங்கிற மாதிரி வடசென்னைக்காரர்கள்னா கறுப்பா, அழுக்கா இருப்பாங்கன்ற எண்ணம் மக்கள் கிட்டேயும் இருக்கு. சினிமாக்காரர்கள்கிட்டேயும் இருக்கு. இது எங்கிருந்து ஆரம்பிச்சுதுன்னு தெரியலை! கொய்ம்பு, கீது, கீரன்ற வார்த்தைகள்லாம் வழக்கொழிஞ்சு போயாச்சு. ஆனா, இன்னமும் சினிமாவுல அப்படித்தான் வடசென்னைக்காரர்கள் பேசுறதா காட்டிட்டிருக்காங்க. போறபோக்குல கெட்டவார்த்தைல பேசுற ஜனம் இல்ல நாங்க. எங்க வூட்டு புள்ளைங்கல்லாம் அப்படிப் பேசவே பேசாது. நாங்க சாப்பிடுற மாதிரி ஃப்ரெஷ்ஷான சாப்பாடு யாரும் சாப்பிட மாட்டாங்க, நாங்க அடிக்குற பெர்ஃப்யூம்லாம் பல பேர் பார்த்திருக்கவே மாட்டாங்க. ஆனா, சென்னைன்னாலே அழுக்கா, குப்பையா காட்டுறதுக்குப் பின்னாடி பெரிய அரசியல் இருக்கு! எங்க வடசென்னை, புண்ணியபூமி தலைவா! வடசென்னையைப் பத்திப் படம் எடுக்கிற பலபேர் வடசென்னைக்குள்ளே வந்து பார்க்கிறதே இல்லை. அதான் பிரச்னை! வடசென்னை என்னமோ ரௌடிகளின் சரணாலயம்ங்கிற மாதிரி காட்சிப்படுத்துறது மாறணும்.”

ரீல் VS ரியல்
ரீல் VS ரியல்
ரீல் VS ரியல்

ஆட்டோக்காரர்கள் - ஆட்டோ அண்ணாதுரை

“ஹீ
ரோக்கள் ஆட்டோ ஓட்டுற படங்கள்ல எல்லாம் ஆட்டோக்காரர்களை தேவதூதர்கள் ரேஞ்சுக்குக் காட்சிப்படுத்துவாங்க. மற்றபடி, எல்லாப் படங்களிலும் ஆட்டோக்களை ஆட்களைக் கடத்துறதுக்குத்தான் யூஸ் பண்ணிட்டிருக்காங்க. ஒருகாலத்தில் ஆம்னி இருந்த இடத்தில் இப்போ ஆட்டோதான் இருக்கு, அவ்வளவுதான். அப்புறம் ஒரு விஷயம், ஹீரோ ஆட்டோ ஓட்டுறார் இல்லையா... அவரும் ஒரு காலத்துல பெரிய ரௌடியா இருப்பார். பிறகு, திருந்திதான் ஆட்டோ ஓட்டிக்கிட்டிருப்பார். படத்துல ஒரு பொண்ணு, நைட் தன்னந்தனியா ஆட்டோவுல போற மாதிரி சீன் வந்தாலே, ஏதோ பிரச்னை நடக்கப்போகுதுன்னு மக்களை பயப்பட வெச்சதுதான் இந்த சினிமா, ஆட்டோக் காரர்களைக் காட்டியிருக்கிற விதம்!”

ப.சூரியராஜ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism