Published:Updated:

பாரு... பாரு... நல்லா பாரு!

பாரு... பாரு... நல்லா பாரு!
பிரீமியம் ஸ்டோரி
பாரு... பாரு... நல்லா பாரு!

பாரு... பாரு... நல்லா பாரு!

பாரு... பாரு... நல்லா பாரு!

பாரு... பாரு... நல்லா பாரு!

Published:Updated:
பாரு... பாரு... நல்லா பாரு!
பிரீமியம் ஸ்டோரி
பாரு... பாரு... நல்லா பாரு!

50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 10 கோடியை புரமோஷனுக்கு மட்டுமே செலவு செய்கிற திமிங்கல சினிமாக்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பத்து லட்சம் செலவழித்து விளம்பரப்படுத்தவும் வழியின்றி, பெட்டிக்குள் உறங்கும் சிறு பட்ஜெட் படங்கள். சமூகவலைதளங்களில் மக்கள் விளம்பரங்களின் வழி கவனம்பெறும் மாற்று சினிமாக்களும் உண்டு. 

பாரு... பாரு... நல்லா பாரு!

இன்று விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை. ஒரு சினிமாவுக்கான விளம்பரம், படப்பிடிப்புக்கு முன்பே திட்டமிடப்படுகிறது. போஸ்டர்களில் தொடங்கி, ஆன்லைன் வைரல்கள் வரை சினிமா விளம்பரங்களின் முகங்கள் மாறிவிட்டன.

தமிழ் சினிமாவின் ஆரம்பகாலம் முதல், ஆன்ட்ராய்டு காலம் வரை சினிமா விளம்பரங்கள் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றன... அறிந்துகொள்ளும் ஆவலோடு ‘காளிதாஸ்’ காலத்துக்கே கிளம்பினோம்...

நடிகர், நடிகை படங்கள் இருக்காது!

திரையுலகின் மூத்த ஆளுமையான கலைஞானம் ஆரம்பகால விளம்பரங்களைப்பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரு... பாரு... நல்லா பாரு!

‘`1935-க்கு மேலேதான் சினிமா, கிராமங்களுக்கு வந்துச்சு. அதுக்கப்புறம்தான், விதவிதமான விளம்பரங்கள் வர ஆரம்பிச்சது. மூணுக்கு மூணு அடியில் சதுரமா ஒரு ஓலைத் தட்டி ரெடி பண்ணி, அதை மூங்கில் குச்சியில் கம்பி போட்டுக் கட்டிடுவாங்க. அதோட ரெண்டு பக்கத்துலேயும் சினிமா போஸ்டரை ஒட்டிடுவாங்க. போஸ்டர்னா அதுல நடிகர், நடிகைகள் படமெல்லாம் இருக்காது; ‘இன்று முதல் இந்த இடத்தில் இந்தப் படம்’னு தகவல்கள் மட்டுமே இருக்கும். இந்தத் தட்டி போஸ்டரை 10, 12 வயசுப் பசங்க நாலு பேர் மாத்தி மாத்தி தோள் மேலே வெச்சுக்கிட்டு, 15, 20 கிராமங்களுக்குக்கூட கால்நடையாவே போவாங்க.

பாரு... பாரு... நல்லா பாரு!முன்னாடி போறவர் கையில் பல வண்ணங்களில் சினிமா நோட்டீஸ்கள் இருக்கும். அதையெல்லாம், போஸ்டரை வேடிக்கை பார்த்துட்டு கூடவே ஓடி வர்ற சின்னப் பசங்ககிட்ட கொடுத்திட்டே போவார். அதிலும் நடிகர், நடிகைகளோட போட்டோ எதுவும் இருக்காது, தகவல்கள் மட்டுமே. சரி, வாசிக்கத் தெரிஞ்சவங்களுக்கு சினிமா நோட்டீஸ். வாசிக்கத் தெரியாதவங்களுக்கு? வாய்தான் விளம்பரம்! தட்டியைத் தோள் மேலே தூக்கிட்டு முன்னாடி போறவர், ‘கோபாலா...’ன்னு ஒரு குரல் கொடுப்பார். பின்னாடி வர்ற மூணு பேரும், ‘ஏன் சார்...’னு மறுகுரல் கொடுப்பாங்க.

‘எங்க போறோம்..?’
‘சினிமா பார்க்க!’
‘என்ன சினிமா..?’

‘ஆரியமாலா!’ன்னு கோரஸா கத்துவாங்க. இப்படி, அந்த நாலு பேரோட சத்தம்தான் கழனியில் வேலைபார்க்கிற ஆம்பளை, பொம்பளை எல்லோருக்கும் அந்தப் படத்தைக் கொண்டு போய் சேர்க்கிற விளம்பரம்’’ என்றார் படுசுவாரஸ்யமாக. 

பாரு... பாரு... நல்லா பாரு!

1936-க்குப் பிறகு, ஒரு படத்தின் இடைவேளையின்போதே, ‘அடுத்த புதன்கிழமை முதல் இந்தப் படம்’ என்று ஸ்லைடு போட ஆரம்பித்திருக்கிறார்கள். 1940-களில், மதுரை போன்ற முக்கியமான ஊர்களில் பெரிய பெரிய போஸ்டர்களை ஒட்டுகிற வழக்கமும் இருந்திருக்கிறது. படங்கள் கறுப்பு -வெள்ளையாக இருந்தாலும் போஸ்டர்கள் கலரில் வந்தது, ரசிக்கவைத்த முரண்.

‘சந்திரலேகா’வின் விளம்பர சரித்திரம்!

‘`1948-ல் தமிழிலும், பிறகு இந்தியிலும் வெளிவந்த, எஸ்.எஸ்.வாசன் தயாரித்த ‘சந்திரலேகா’வுக்குச் செய்யப்பட்ட விளம்பரங்கள்தான், இந்திய சினிமா விளம்பரங்களின் பென்ச் மார்க். மும்பையில் ‘சந்திரலேகா’ வெளியானபோது, கிட்டத்தட்ட தென்னை மர உயரத்துக்கு பேனர் வைக்கப்பட்டது. இதன் பிறகுதான் வட இந்திய சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா பேனர் எந்தளவுக்கு பப்ளிக்கை ஈர்க்கும் என்று தெரிந்துகொண்டார்கள்’’ என்று அந்தப் பேரனுபவத்தின் சாட்சியைக் கண்களில் தேக்கிச் சொல்கிறார், தயாரிப்பாளர் தனஞ்செயன். 

வீதியெங்கும் பறந்த வண்ண நோட்டீஸ்கள்!

வருடங்கள் ஓட ஓட சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, கூடவே விளம்பரங்களும்... சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி, சாவித்திரி என்று நட்சத்திரங்கள் ஜொலிக்க ஆரம்பித்த நேரம். இந்தக் காலகட்டத்து சினிமா விளம்பரங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார் நடிகர் ராஜேஷ்.

பாரு... பாரு... நல்லா பாரு!

‘`மாட்டு வண்டி விளம்பரம்தான் வீட்டுக்குள்ள இருக்கிற ஜனங்ககிட்டயும் படங்களைக் கொண்டுபோய்ச் சேர்த்துச்சு. மாட்டு வண்டியில ரெண்டு பக்கமும் சினிமா போஸ்டரை ஒட்டிக்கிட்டு ஊருக்குள்ள வருவாங்க. ஸ்பீக்கர் கிடையாது. பெருசா டிரம் மாதிரி வெச்சுக்கிட்டு அதுல ‘டொம் டொம்’னு சத்தம் எழுப்பிக்கிட்டு, ‘டூரிங் கொட்டாயில  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் நடிச்ச ‘பதிபக்தி’ படம் போடப் போறோம்ம்ம்’னு சொல்லிக்கிட்டே கை நிறைய கலர் கலரா சினிமா நோட்டீஸை அள்ளித் தெருவெல்லாம் வீசிக்கிட்டே போவாங்க. சின்னப் பிள்ளைங்க தெருவெல்லாம் கிடக்கிற சினிமா நோட்டீஸை அள்ளிக்கிட்டு வீட்டுக்குப் போவோம்.’’ என்று சிரிக்கிற ராஜேஷ், அந்தக் காலத்தில் போஸ்டர் விளம்பரங்களுக்கு ஏன் அதிகம் செலவழிப்பதில்லை என்ற காரணத்தையும் சொன்னார்.

பாரு... பாரு... நல்லா பாரு!

‘`டூரிங் டாக்கீஸுக்கு ஆறு மாசம்தான் லைசென்ஸ் தருவாங்க. அப்புறம் அந்தக் கொட்டகையைப் பிரிச்சுட்டு அடுத்தடுத்த ஊர்களுக்குப் போயிட்டே இருப்பாங்க. இப்படி டூர் போற மாதிரி ஊர் ஊரா போறதாலதான் அதுக்குப் பேர் டூரிங் டாக்கீஸ். 3, 4 நாள் ஓடுற படத்துக்கு அதிகமா போஸ்டர்ஸ் அடிச்சா, கையில லாபமே நிக்காது. டிக்கெட்டே நாலணா, எட்டணாதான். அதனால, ரெண்டு போஸ்டர் வாங்கிட்டு வந்து மாட்டு வண்டி மேலே ஒட்டிக்கிட்டு, 10, 15 கிராமங்களுக்குப் போயி நோட்டீஸ் கொடுத்துட்டு வந்திடுவாங்க, அவ்வளவுதான்’’ என்கிறார்.

விளம்பர ஆடுகள்!

1964-ல் எம்.ஜி.ஆரின் ‘வேட்டைக்காரன்’ பட விளம்பரத்துக்காக, சித்ரா டாக்கீஸ் வாசலில் புலியைக் கட்டிப்போட்டிருக்கிறார் அதன் தயாரிப்பாளர் தேவர். ஆனால், மேயர் கட்டளையிட்டதால் அன்று மாலையே கார்ப்பரேஷனிலிருந்து வந்து புலியை அப்புறப்படுத்திவிட்டார்களாம். இதே வருடம் வெளியான ‘கர்ணன்’ பட விளம்பரத்துக்காக சாந்தி தியேட்டர் வாசலில் 35,000 ரூபாய் செலவில், கோயில் கட்டி பூஜை எல்லாம் செய்திருக்கிறார்கள். 1978-ல் வந்த ‘வருவான் வடிவேலன்’ படத்துக்கும் இதே பாணியில் தியேட்டர் வாசலில் முருகன் சிலை வைக்க, படம் பார்க்க வந்த பெண்கள் முருகனைக் கும்பிட்டுவிட்டு விபூதி நெற்றியுடன் பக்திமயமாக சினிமா பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 77-ல் வந்த ‘ஆட்டுக்கார அலமேலு’வில் நடித்த ராமு ஆடு, படம் திரையிட்ட தியேட்டர்களுக்கெல்லாம் புரொமோஷனுக்காகப் பயணப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் ராமுவைக் கட்டி, புல்லைப் போட்டு வைத்திருக்கிறார்கள். ‘பட்டிக்காடா பட்டணமா’ பட விளம்பரத்துக்கு, படத்தில் வந்த அதே கொண்டை கெட்டப்புடன் தியேட்டர்களுக்குச் சென்றிருக்கிறார் சிவாஜி. ‘ஒளிவிளக்கு’ பட புரொமோஷனுக்கு ஒரு காரில், டிரைவர் பார்க்க மட்டும் இடம் விட்டுவிட்டு, கார் முழுக்க படத்தின் கட் அவுட்டால் கவர் செய்து வலம் வரச் செய்திருக்கிறார்கள். ‘ராஜ ராஜ சோழ’னுக்குத் தஞ்சைப் பெரிய கோயில் செட், ‘திருவிளையாட’லுக்குக் கைலாயம் செட், ‘சிவந்த மண்’ணுக்கு ஹெலிகாப்டர் செட், அப்படியே 78-க்கு வந்தால் ‘கிழக்கே போகும் ரயிலு’க்காக தியேட்டர் வாசலில் ரயில் செட் போட்டிருக்கிறார்கள்.

பாரு... பாரு... நல்லா பாரு!

பளபள பேனர்களின் காலம்!

அடுத்து, கண்ணைப் பறிக்கும் பள பள பேனர்களும் கட் அவுட்டுகளும் தமிழ் சினிமாவை விளம்பரப்படுத்த ஆரம்பித்தன. ஆர்ட்டிஸ்ட் ஜீவானந்தனும், ஜே.பி. கிருஷ்ணாவும் அதைப் பற்றிப் பகிர்ந்தார்கள்.

‘`படம் வர்றதுக்கு முன்னாடியே பேனர் விளம்பரங்கள் வந்துடும். ஒரு காலத்துல சாந்தி தியேட்டரில் ஆரம்பிச்சு சஃபையர் தியேட்டர் வரைக்கும் பேனர்கள் ராஜ்ஜியம்தான். பேனர் செய்றதுக்கு 8 இன்ச்சில் ஒரு படத்தைக் கொடுப்பாங்க. அதை மேஜிக் லேன்டன் புரொஜக்டர் வழியா பெரிசு பண்ணுவோம். அது பெரிய பேனர்ல பிரமாண்டமா தெரியும். அதை லைன் டிராயிங் போட்டு, கலர்கள் கொடுத்து நடிகர், நடிகையோட சாயலை பெயின்ட்டிங்கில் கொண்டு வருவோம். முகத்துக்குப் பச்சை, நீலம்னு கொடுத்து வண்ணங்களோடு விளையாடுவோம். அதே வண்ணத்தில் சமிக்கி கலர் கொடுப்போம். தூரத்தில் இருந்து பார்த்தாலும் பேனர் சும்மா பளபளன்னு ஜொலிக்கும். அதுக்குத்தான் அவ்வளவு மெனக்கெடுவோம்.

பாரு... பாரு... நல்லா பாரு!

கட் அவுட்டில், ஒரு கதாநாயகனைக் கை, கால்னு தனித்தனியா செய்து சேர்ப்போம். கட் அவுட் பெருசா வைக்க வைக்க,  ஜனங்க வந்து பார்க்க ஆரம்பிப்பாங்க. கார்பென்ட்டர், பேக் கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட், எழுத்து ஆர்ட்டிஸ்ட், ஓவியர்கள்னு பல பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த தொழில்கள், பேனரும் கட் அவுட்டும். 90 வரைக்கும் ஓஹோன்னு இருந்த விளம்பர முறை இதுதான்’’ என்கிறார்கள் ஜீவானந்தனும் கிருஷ்ணாவும்.

டிஜிட்டல் யுகம்!

2000-த்தின் ஆரம்பத்தில் ஃப்ளெக்ஸ் வந்ததும் பேனரும் கட் அவுட்டும் சினிமாவிலிருந்து காணாமற்போயின. இதற்கடுத்து வந்த ப்ரின்ட் டெக்னாலஜியில், 20 நிமிடங்களில் ஒரு பிரமாண்ட ஃப்ளெக்ஸை உருவாக்க முடிந்தது. இதோ, இப்போது டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம். படம் வெளியாவதற்கு முன்னால் கதாநாயகன் என்ன லுக்கில் வருகிறார் என்று விளம்பரப்படுத்தினால், அது ஃபர்ஸ்ட் லுக். அது நகரும்படி வெளியிட்டால், மோஷன் போஸ்டர். 25 - 30 செகண்டில் ‘வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்’ என்று ரஜினி பேசுவது, டீசர். இதைவிடக் கொஞ்சம் நீளமாகக் கதையின் சின்னப் பகுதியைச் சொல்வது, டிரெய்லர். ‘சைத்தான்’ படத்தின் மூன்று நிமிடக் காட்சிகளை வெளியிட்டது போன்ற வகையறாக்கள், ஸ்னீக் பீக். படத்தின் பாடல்களை வெளியிடுவது, ஆடியோ ரிலீஸ். ‘ஏய் கறிக்குழம்பே’ என்று வார்த்தைகள் ஸ்க்ரீனில் ஓட ‘மாரி-2’ படத்தின் ஸ்டில்கள் பின்னணியில் வருவது, லிரிக்ஸ் வீடியோ. இன்னும், யூடியூபில் படத்தின் பாடல்களை வெளியிடுவது, படத்தில் வராத பாடலை வெளியிடுகிற புரொமோஷனல் சாங்ஸ், படக்குழுவினருடன் யூடியூப் சேனல்களில் இன்டர்வியூ, ஃபேஸ்புக் லைவ் இன்டர்வியூ, டி.வி. சேனல்களில் இன்டர்வியூ என... ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான மெனக்கெடல் கூடியிருக்கிறது. 

பாரு... பாரு... நல்லா பாரு!

இவற்றைத் தாண்டி, சோஷியல் மீடியா விளம்பர டீம்கள், வெளியாகப் போகும் திரைப்படங்களில், ஒரு பாடலை, வசனத்தை, காட்சியை மீம்ஸாகக் க்ரியேட் செய்து வெளியிடுகிறார்கள். பிரியா பிரகாஷ் வாரியார் கண்ணடித்துத் தாறுமாறு ஹிட்டானது இந்த வகை விளம்பரம்தான்.

டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு ஏற்ப விளம்பரங்கள் இன்னும் புதிது புதிதாக வரும். ஆனால், மக்களை ரசிக்கவைக்கும் படங்களே வெற்றிபெறும். ததாஸ்து..!

ஆ. சாந்தி கணேஷ் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

பாரு... பாரு... நல்லா பாரு!

போஸ்டரே அடிக்கவில்லை!

‘உ
லகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு (1973) போஸ்டரே  அடிக்கவில்லை. வெறும் ஸ்டிக்கர்தானாம். அப்போது கருணாநிதி ஆட்சி என்பதால், சூழல் காரணமாக எம்.ஜி.ஆர். இப்படிச் செய்ததாகச் சொல்கிறார் நடிகர் ராஜேஷ். ஆனால், இந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் தேவி தியேட்டரில் இருந்து பாரகன் தியேட்டர் வரை வரிசையில் நின்றார்களாம்!

பாரு... பாரு... நல்லா பாரு!

பேனர் ரவிவர்மாக்கள்!

டங்களுக்கு விளம்பரம் மட்டுமல்லாது, ஓவியர்களின் கற்பனைத்திறனுக்கான களமாகவும் பேனர்கள் இருந்திருக்கின்றன. உதாரணத்துக்கு, டி.ஆரின் ‘மைதிலி என்னைக் காதலி’ படத்துக்கு, மணல்வெளி, அதில் கிடக்கும் ஒற்றைச் சலங்கை என்று பேனரையே கவிதையாக்கி மக்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள். ‘ஜானி’ பேனரில் ரஜினியையும் ஸ்ரீதேவியையும், பீச்சில் லாங் ஷாட்டில்  நடப்பதுபோல வரைந்தது, ‘கேளடி கண்மணி’ பேனரில் ராதிகாவின் முகத்தை வரையாமல், முதுகுப்பக்கம் வரைந்து படத்தில் அவருடைய கேரக்டரின் துன்பியல் தன்மையை வெளிப்படுத்தியது, ‘சவால்’ படத்தின் சண்டைக் காட்சியைத் தலைகீழாக வரைந்தது, 3டி படங்கள் என்றால் பேனரைத் தாண்டி வெளியே நீண்ட கைகள், ‘செந்தூரப்பூவே’வுக்காக பேனரை விட்டு வெளியே வந்த டிரெய்ன் என... க்ரியேட்டிவிட்டியில் கலக்கியிருக்கிறார்கள்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism