Published:Updated:

மொத்தமா மாத்தீட்டோமுலு!

மொத்தமா மாத்தீட்டோமுலு!
பிரீமியம் ஸ்டோரி
மொத்தமா மாத்தீட்டோமுலு!

மொத்தமா மாத்தீட்டோமுலு!

மொத்தமா மாத்தீட்டோமுலு!

மொத்தமா மாத்தீட்டோமுலு!

Published:Updated:
மொத்தமா மாத்தீட்டோமுலு!
பிரீமியம் ஸ்டோரி
மொத்தமா மாத்தீட்டோமுலு!

மிழ் போலவே, தெலுங்கு சினிமாவுக்கும் 2018 ஸ்பெஷலோ ஸ்பெஷல். தமிழ்சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள் பரியேறும் பெருமாள், 96, மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், கனா என ஆட்டம் மாற்றினார்களோ, அப்படி ஆந்திராவிலும் கடந்த ஆண்டில் நிறைய நிறைய மாற்றங்கள். தோசை ஆர்டர் பண்ணவும்கூடத் தொடைதட்டுகிற வெத்து ஹீரோயிசமும் அரிவாள் வில்லன்களின் அலப்பறைகளும் லாஜிக் இல்லாத திரைக்கதைகளும் என இருந்த தெலுங்கு சினிமா, வித்தியாச ஜானர்கள், விதவிதமான கதைகள் என மாற்றிக் காட்டியது சென்ற ஆண்டு. எங்களுக்கு மாஸும் வரும் கிளாஸும் வரும் என கெத்து காட்டி மலைக்கவைத்தார்கள். 

மொத்தமா மாத்தீட்டோமுலு!

நிஜமாகத்தான்... 2018-ல் வெளியான தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்களின் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தன. பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், ரவிதேஜா, நாகார்ஜுனா, அல்லு அர்ஜுன், நானி, கல்யாண் ராம், கோபிசந்த், நாக சைதன்யா என்று முன்னணி நாயகர்களின் படங்கள் அனைத்துமே சொதப்பின. ஆனால், வித்தியாச ஜானர்களில், சிறிய பட்ஜெட்டுகளில், புதுமையான திரைக்கதையமைப்பில், புதுமுகங்கள் நடித்த திரைப்படங்கள் எல்லாம் அதிக கவனம் ஈர்த்தன. வெற்றிபெற்று பாக்ஸ் ஆபீஸிலும் கோடிகளைக் குவித்தன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொத்தமா மாத்தீட்டோமுலு!

சமீபத்தில் வெளியான `அரவிந்த சமேத வீர ராகவா’ படம். அப்படிப்பட்ட ஒன்றுதான். மாஸ் ஹீரோ (ஜூனியர்) என்டிஆர் நடித்தபடம்தான் என்றாலும், படப்பெயரே நாயகிக்கு முக்கியத்துவம் தரும்படி அமைந்திருந்தது! முழுக்க முழுக்க பெண்கள் வாழ்வை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கமர்ஷியல் சினிமாவில் ஒரு மாற்றத்தின் விதை என்கிறார்கள் விமர்சகர்கள். அனுஷ்கா நடித்த `பாகமதி’ ஹீரோயினை மையமாக வைத்து வந்த படமென்றால், ஒரு ஹீரோயினின் வாழ்க்கையைச் சொன்ன படமான `மஹாநடி’தான் சென்ற ஆண்டின் ஆகச்சிறந்த படமாக இருந்தது. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு என்றாலும் கீர்த்தி சுரேஷின் அபார நடிப்பும் திரைமொழியும் மலைக்கவைத்தன. சமந்தாவின் பாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி வெளியான `யூ-டர்ன்’ பெரிய வெற்றிபெற்றது.  நான்கு கதைகளைக் கொண்ட அ (Awe). முழுக்க முழுக்க ஓர் உணவகத்திலேயே நடக்கிற சைக்கலாஜிகல் த்ரில்லர். ஒருபாலின ஈர்ப்புள்ள பெண்களுக்கிடையிலான நட்பு குறித்துப் பேசிய இந்தப்படமும் பரவலான கவனத்தையும் வெற்றியையும் பெற்றது.

மொத்தமா மாத்தீட்டோமுலு!

`வீர போக வசந்த ராயலு’ என்றொரு படம். என்னுடைய வீட்டைக் காணோம் என்று ஒரு சிறுவன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறான். அடுத்த காட்சியில், பல சிறுவர்கள் காணாமற்போகிறார்கள். பின்னர், பிரபலங்கள் பயணிக்கும் ஒரு விமானமே மாயமாய் மறைய, இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு புள்ளியாக வருகிறார் கதையின் நாயகனான `வீர போக வசந்த ராயலு.’ ஆந்திராவின் நாஸ்ட்ரடாமஸ் ஆன இவரையே ஒரு கதாபாத்திரமாக்கி, ஆச்சர்யமான ட்விஸ்ட்டுகளுடன் படத்தைக் கொண்டு சென்றிருப்பார். இயக்குநர் இந்திரசேனா. இந்த பேன்டஸி முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

மொத்தமா மாத்தீட்டோமுலு!

ஆந்திர சினிமாவை அலறவிட்ட 2018-ன் ஸ்லீப்பர் ஹிட் `C/O கன்ச்சாரபாலெம்.’ 60 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். நான்கு வெவ்வேறு காதல் கதைகளை தெளிவாக, குழப்பமின்றிச் சொன்னதோடல்லாமல், அன்றாட வாழ்க்கையை, அதன் ரசிக்க வைக்கும் பிரச்னைகளைப் பேசிய சிம்பிள் படம். படத்தில் நடித்த அத்தனை பேரும் புதுமுகங்கள். படத்தை  பாகுபலி ராஜமௌலி தொடங்கி தெலுங்கு சினிமா உலகமே தலையில் வைத்துக் கூத்தாடியது! 

மொத்தமா மாத்தீட்டோமுலு!

கொஞ்சம் மெனக்கெட்டதாலேயே மெகா ஹிட்டாக மாறிய இன்னொரு படம் `ரங்கஸ்தலம்.’ தெலுங்கு சினிமா ஆரோக்கியமான பாதையில் முன்னேறுகிறது என்பதற்கான உதாரணமாக இந்தப் படத்தையே ஒட்டுமொத்த ஆந்திராவும் தெலங்கானாவும் கைகாட்டுகின்றன. ஒரு பீரியட் படத்தை, அதன் உள்ளடக்கத்திற்காகப் பேச வைத்து இயக்குநர் சுகுமார் ஜெயித்தார். ஹீரோயிசத்தைத் துறந்து காது கேட்காதவராக நடித்து, சக ஸ்டார் நடிகர்களுக்கு ஒரு புதிய பாதையைக் காண்பித்தார் ராம்சரண்.  வழக்கமாக முப்பது பேரை ஒரே அடியில் வீழ்த்தும் ஹீரோவாகவே பார்க்கப்பட்ட சிரஞ்சீவியின் வாரிசான ராம்சரண் இப்படி ஒரு வேடத்தை ஏற்றுக்கொண்டதற்காகவே விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். 

மொத்தமா மாத்தீட்டோமுலு!

பெரும்பாலான படங்கள் நகரத்தையோ அல்லது பிரபலமான இடங்களையோ பின்னணியாக வைத்து எடுக்கப்படும் சமயத்தில், சித்தூரைக் கதைக்களனாக வைத்து அங்கே பேசப்படும் யாசா பேச்சுவழக்கில் வசனங்களைப் புகுத்தி அசத்தியது ‘நீதி நாதி ஒகே கதா.’ இயக்குநர் வேணு இயக்கிய இப்படம் சிறு நகர இளைஞர்களின் எதிர்காலக் கனவுகள், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றும் நிறுவனங்கள், மக்களின் போலியான நம்பிக்கைகள், சமயத்திற்கு ஏற்ப அனைவருமே அணியும் முகமூடிகள் என்று பல விஷயங்களைப் பேசியது.

மொத்தமா மாத்தீட்டோமுலு!

மக்கள் வாழ்வியலை, அவர்களுடைய அன்றாடப் பிரச்னைகளைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படங்கள் ஒருபக்கம் வரத்தொடங்க, இதே நேரத்தில் வெளியான ஸ்பை த்ரில்லர் `கூடாச்சேரி’யும் வெற்றிபெற்றது. சுவாரஸ்யமான ஓர் ஆடு புலி ஆட்டத்தை 116 நாள்களில் 168 லொகேஷன்களில் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை எடுத்திருந்தார்கள். எடுத்துக்கொண்ட கருவும், அதைப் படமாக்கிய விதமும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. 

மொத்தமா மாத்தீட்டோமுலு!

ஒரு பயணம், அதில் நடக்கிற சுவாரஸ்யங்கள் என ஒரு நல்ல ரோடுமூவியாக `ஈ நகரானிகி ஏமைந்தீ?’ இருந்தது. நான்கு நண்பர்கள் கோவாவிற்குச் செல்வதுதான் கதை. சிம்பிள் ஒன்லைனாக இருந்தாலும் அது சொல்லப்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. 

மொத்தமா மாத்தீட்டோமுலு!

ஆந்திராவையும் தாண்டி இந்திய அளவில் பேசப்பட்ட படம் RX-100. தெலுங்கு சினிமாவில் இத்தனை ஆண்டுகளும் பெண்கள்மீதும் காதல்மீதும் ஏற்றிவைக்கப் பட்ட புனிதத்தன்மைகளை எல்லாம் உடைக்கும்படியான சுளீர் திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர் அஜய். ஆபாசம் என்கிற விமர்சனங்களைத் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது படம். 

மொத்தமா மாத்தீட்டோமுலு!

இப்படி இன்னும் ஏராளமான படங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். இந்தப் படங்கள் அத்தனைக்கும் இருக்கிற ஒற்றுமை ஒன்றுதான். ஹீரோக்களுக்குப் பின்னால் ஓடாமல், நல்ல கதைகளைத் தேடிப்பிடித்தால் வெற்றி நிச்சயம் என்பது மட்டும்தான். அது தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமான செய்தி அல்ல...

கிங் விஸ்வா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism