Published:Updated:

தேவுடு!

தேவுடு!
பிரீமியம் ஸ்டோரி
தேவுடு!

தேவுடு!

தேவுடு!

தேவுடு!

Published:Updated:
தேவுடு!
பிரீமியம் ஸ்டோரி
தேவுடு!

தெலுங்கு சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் `என்.டி.ராமாராவ்’. திரையில் கிருஷ்ணராக தோன்றி தன் ரசிகர்களை பக்தர்களாக மாற்றியவர். கட்சி தொடங்கி ஒன்பதே மாதங்களில் அரியணை ஏறி ஆட்சிசெய்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக சொல்கிறது `என்டிஆர் கதாநாயக்குடு’. 

தேவுடு!

அரசு ஊழியர் என்.டி.ஆர், அங்கே நடக்கிற ஊழல்களை சகித்துக்கொள்ள முடியாமல், எல்.வி.பிரசாத்தின் அழைப்பிதழை ஏற்று திரைத்துறைக்கு செல்கிறார். `பாதாள பைரவி’யில் ஆரம்பிக்கிற திரைப்பயணம், பிறகு அடுத்தடுத்து உச்சம் தொடுகிற சாகச எபிசோட்தான் இந்தப் படம்.

என்.டி.ஆர் நடித்த கிளாஸிக் திரைப்பட காட்சிகளை எல்லாம் மீளுருவாக்கம் செய்த வகையில் முக்கியமான படமாக இருக்கிறது. கூடவே என்.டி.ஆரின் திரையுலக சாதனைகளையும் அவர் மக்களோடு எப்படி நெருக்கமாக பழகினார், எது அவரை அரசியலை நோக்கி செலுத்தியது என்பதையெல்லாம் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கிரிஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவுடு!

ஆனால், வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நாயகனின் வீழ்ச்சியும் எழுச்சியும் மாறி மாறி வரும்போதுதான் சுவாரஸ்யம் கூடும். நாயகனின் தோல்விகளும் போராட்டங்களும்தான் திரைக்கதையை வலுவாக்கும். இதிலோ  என்.டி.ஆர் என்கிற பிம்பத்தை கட்டி எழுப்பிக்கொண்டே போகிறார்கள், நாம் சலிப்படையும் அளவுக்கு!

தேவுடு!



என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா.  தன் தந்தையாகவே மாறிய தங்கமகன்! அவருடைய திரைவாழ்வின் ஆகச்சிறந்த பெர்பாமன்ஸ் இதுதான். வயது ஏற ஏற ஹேர் ஸ்டைல், பேசும் தொனி என பலவற்றை நேனோ லெவலில் மாற்றி, `அட பாலய்யாவா இது?’ என வியக்க வைக்கிறார். 

இன்டர்வெல்லுக்கான அதிர்வுகளுடன் முதல் பாகம் முடிய, அடுத்த பாகமான அரசியல் சதுரங்க மகாநாயுகுடு விரைவில் வெளியாக இருக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் பலர் அதில் இருப்பார்கள் என்பதால், அதில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism