Published:Updated:

துல்கர் செம சேட்டைக்காரர்!

துல்கர் செம சேட்டைக்காரர்!
பிரீமியம் ஸ்டோரி
துல்கர் செம சேட்டைக்காரர்!

துல்கர் செம சேட்டைக்காரர்!

துல்கர் செம சேட்டைக்காரர்!

துல்கர் செம சேட்டைக்காரர்!

Published:Updated:
துல்கர் செம சேட்டைக்காரர்!
பிரீமியம் ஸ்டோரி
துல்கர் செம சேட்டைக்காரர்!

``ரெண்டு காதல் ஜோடிகள் கார்ல ஒரு லாங் ட்ராவல் போறாங்க. அந்தப் பயணத்துல ஒரு கேரக்டரை சந்திக்கிறாங்க. அந்த கேரக்டர் வந்ததுக்கு அப்பறம் இந்த நாலு பேருக்கும் என்ன ஆகுது என்பதை ரொமான்ஸும் காமெடியும் கலந்து சொல்ற படம்தான் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.’’ படத்தின் ஒன்லைனோடு பேச ஆரம்பித்தார், அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி.

துல்கர் செம சேட்டைக்காரர்!

துல்கர் சல்மான் தன்னுடைய 25வது படமா இதை தேர்வு செய்ய என்ன காரணம்?

``இது துல்கர் முடிவு செஞ்சாரா, இல்லை அதுவா அமைஞ்சுதான்னு தெரியலை. எங்க யூனிட்டுக்கே இந்தப் படத்தோட முதல் நாள் ஷூட்டிங்கில்தான் அது தெரியும். இருந்தாலும் இந்தப் படத்தை பைலிங்குவலா பண்ண வேண்டாம் என்பதில் துல்கர் மிகவும் தெளிவாக இருந்தார். இந்தப் படம் நேரடி தமிழ்ப் படமாக கேரளாவில் வெளியானால்தான் நல்லா இருக்கும்னு சொன்னார்.’’

துல்கருக்கு என்ன ரோல்?


``ஓ. எம்.ஆர் ரோட்டுல சனிக்கிழமையானா காரை வேகமா ஓட்டிட்டு போவாங்களே, அந்த மாதிரி ஒரு பக்கா சிட்டி பையன் ரோல் பண்ணியிருக்கார். காரை ரீமாடலிங் பண்ணிட்டு, காசைப் பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம ஊரைச் சுத்திக்கிட்டு பார்ட்டி, ஃப்ரெண்ட்ஸுனு ஜாலியா இருக்கிற பசங்களா துல்கரும் ரக்‌ஷனும் நடிச்சிருக்காங்க.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துல்கர் செம சேட்டைக்காரர்!

`விஜய் டிவி’ ரக்‌ஷன் எப்படி இந்தப் படத்துக்குள்ள வந்தார்?

``துல்கரோட ஃப்ரெண்ட் கேரக்டருக்கு ஒரு காமெடியனைப் போடக்கூடாதுங்கறதுல ரொம்ப உறுதியா இருந்தேன். ஸ்மார்ட்டா,  கொஞ்சம் ஹூயூமர் சென்ஸ் இருக்கிற ஆளா தேடினேன். அப்படிதான் ரக்‌ஷன் உள்ள வந்தார்.’’

துல்கர் செம சேட்டைக்காரர்!கௌதம் மேனன் இருக்காரே உங்க படத்துல, அவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம்?

``கெளதம் சார் சில படங்கள்ல அப்பப்போ கேமியோ பண்ணியிருப்பார். `கோலிசோடா பார்ட் 2’-லதான் ஒரு முழு ரோலா பண்ணியிருப்பார். அந்த மாதிரி ஒரு பெரிய ரோல்தான் இந்தப் படத்துலேயும். இந்த ரோலுக்கு கெளதம் சாரை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணி, அவரை பல நாள்களாக ஃபாலோ பண்ணி ஒருநாள் சந்திச்சேன். கௌதம் சாரை சந்திச்சு கதையை சொல்லாமல் பதினைந்து நிமிஷம் பேசினேன். நான் பேசுனதை கேட்டுட்டு, `நான் நடிக்கிறேன்’னு சொல்லிட்டார்.’’

படத்துல  இரண்டு நாயகிகளா?

``ஆமா ‘பெல்லி சுப்புலு’ங்கிற தெலுங்கு படத்தில் நடிச்ச ரீது வர்மாதான் துல்கருக்கு ஜோடி. இது அவங்களுக்கு முதல் தமிழ் படம். காஸ்ட்டியூம் டிசைனர் நிரஞ்சனி ரக்‌ஷனுக்கு ஜோடி. இயக்குநர் அகத்தியன் சாரோட பொண்ணு.’’

துல்கர் செம சேட்டைக்காரர்!

``நாலு பேரும் யூத்; ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருந்திருக்குமே?

‘`நாலுபேருமே செம்ம வால்பசங்கதான். அதுல துல்கர் பெரிய சேட்டைக்காரர்! ஷூட்டிங் முழுக்க ஒரு கலாய், கேலி, கிண்டல்னு செம ஜாலியா இருக்கும். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மாதிரிதான் நாலுபேரையும் டீல் பண்ண வேண்டியிருக்கும்.’’

டெக்னிக்கல் டீம்?

`` `வல்லினம்’, `குற்றம் 23’ படங்கள்ல வேலை செஞ்ச கே.எம்.பாஸ்கரன்தான் கேமராமேனா வேலை செஞ்சிருக்கார். ‘மசாலா கஃபே’னு ஒரு  யூத்டீம்தான் இசையமைச்சிருக்காங்க. படம் ஆரம்பிச்சு ஒரு மாசம் வரைக்கும் எடிட்டர் முடிவு பண்ணாமல் இருந்தோம். அப்புறம்,  கௌதம் சார்தான் ஷூட்டப்போ பிரவீன்ஆண்டனி பற்றி சொன்னார். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ படங்களில் வேலை  பார்த்துட்டு இருக்கார். அவரையே இந்தப் படத்துக்கும் பிக்ஸ் பண்ணிட்டோம். கலகலப்பான படமா தயாராகிட்டோம். சீக்கிரமே ரிலீஸ்... நிச்சயமா உங்க கண்களை கொள்ளையடிப்போம்!’’

மா.பாண்டியராஜன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism