Published:Updated:

பேட்ட - சினிமா விமர்சனம்

பேட்ட - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பேட்ட - சினிமா விமர்சனம்

பேட்ட - சினிமா விமர்சனம்

பேட்ட - சினிமா விமர்சனம்

பேட்ட - சினிமா விமர்சனம்

Published:Updated:
பேட்ட - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பேட்ட - சினிமா விமர்சனம்

மீண்டும் ஸ்டைலான துள்ளலான குறும்புத்தனமான `வின்டேஜ்’ ரஜினியை  மீட்டெடுக்கும் கார்த்திக் சுப்புராஜின் முயற்சிதான் ‘பேட்ட.’ 

பேட்ட - சினிமா விமர்சனம்

கல்லூரி விடுதியில் வார்டனாக வந்து சேர்கிறார் ரஜினி. வந்த வேகத்தில் அங்கிருக்கும் மாணவர்களுக்குப் பிடித்தமான வராகிறார். திடீரென ஹாஸ்டலுக்குள் நுழையும் ஒரு ரெளடி கும்பல் ஒரு மாணவரை மட்டும் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப்பார்க்கிறது. அந்த மாணவன் யார், அவனுக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு என பிளாஷ்பேக் விரிய மூன்று மணிநேர ஆக்‌ஷன் அத்தியாயமாக விரிகிறது ‘பேட்ட.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேட்ட - சினிமா விமர்சனம்பேட்டயின் இண்டு இடுக்கெல்லாம் ரஜினியின் சேட்டதான்!  ‘முள்ளும் மலரும்’ கெத்து, ‘பாட்ஷா’ மாஸ், ‘பில்லா’வின் துப்பாக்கி விளையாட்டு என இதுவரை நாம் பார்த்துப் பார்த்துக் கைதட்டிக் கொண்டாடிய எல்லா ரஜினி வெர்ஷன்களும் ‘பேட்ட’யின் ஒவ்வொரு ஃப்ரேமிலும். நமக்குள் இருக்கும் ரஜினி ரசிகனை வெளிக்கொண்டு வந்து விசிலடிக்க வைப்பதில் கார்த்திக் சுப்புராஜ் வெற்றிபெறுகிறார்.

ரஜினிக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி. வில்லனாக சரிசமமாகச் சிலம்பமாடுகிறார். ரஜினியை அசால்ட்டாக அவர் டீஸ் செய்யும் காட்சிகளில் ‘சரியான போட்டி’ என மைண்ட்வாய்ஸ் ஓடுகிறது. தனக்கேயுரிய பாடி லாங்குவேஜில் மிரட்டுகிறார் நவாசுதீன் சித்திக்கி. குறைந்த காட்சிகளும் பொருந்தாக் குரலும் அவர் ஏரியாவின் மைனஸ்கள்.

சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம், ஆடுகளம் நரேன்,  ராமதாஸ், இயக்குநர் மகேந்திரன் என மினி கோடம்பாக்கமே படத்தில் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கான காட்சிகளை முக்கியத்துவத்தை உருவாக்கித் தராததால் எல்லோருமே திரையை நிரப்பவே பயன்பட்டி ருக்கிறார்கள்.

இசையில் தரலோக்கலுக்கு இறங்கி அடி வெளுத்திருக்கிறார் அனிருத். பாடல்கள் ஒருபக்கம், பின்னணி இசை இன்னொருபக்கம் என இரட்டை சரம் கொளுத்தியிருக்கின்றன அவரின் விரல்கள். திருவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். பனிமூட்டத்துக்கும் இருளுக்கும் நடுவே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன் லென்ஸ் வித்தையால் விறுவிறுப்பு ஏற்றியிருக்கிறார்.

பேட்ட - சினிமா விமர்சனம்முதல்பாதி முழுக்க ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் எனக் கலகல ரகளையாக இருக்கிற ‘பேட்ட’, அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இரண்டாம் பாதியில் திணறித் திண்டாடுகிறது. காரணம், இலக்கில்லாமல் எங்கெங்கோ பாயும் திரைக்கதை.

கார்த்திக் சுப்புராஜ் படங்களில் ட்விஸ்ட்டுகள்தான் வெயிட்டாக இருக்கும். ஆனால், ‘பேட்ட’ ட்விஸ்ட்டுகள் எல்லாமே `ப்ச்’ ரகம்.

முழுக்க முழுக்க ரஜினி மாஸை மட்டும் நம்பியிராமல் தன் திரையெழுத்துத் திறமையையும் கார்த்திக் சுப்புராஜ் வெளிப் படுத்தியிருந்தால் ‘பேட்ட’ முழுமையான பொங்கல் விருந்தாக இருந்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism