Published:Updated:

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

Published:Updated:
“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

“எல்லாரும் கதைக்கு வேணும்ங் கிறதை டைட்டிலா வைப்பாங்க. ஆனா, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ கதைக்கு நேரெதிரான டைட்டில். பெரியாரின் பிள்ளைகளைப் பற்றிய கதைன்னு சொல்லலாம். சசி சார், சூரின்னு மொத்தம் ஆறு பேர். இவங்களைச் சுத்திதான் கதை நகரும். சாதி, மதம் தேவையில்லைன்னு பெரியார் ஊன்றிய கொடியை இந்தப் படத்துல உயரத்தில் பறக்க விட்டிருக்கோம்.” 

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

- உற்சாகக் குரலில் பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். `சுந்தரபாண்டியன்’ படத்துக்குப் பிறகு, எஸ்.ஆர்.பிரபாகரன் - சசிகுமார் - சூரி காம்போ ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”“படத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?”

``மடோனா செபாஸ்டினுக்கு ஸ்டைலான கிராமத்துப் பொண்ணு ரோல். சசி சாருக்கு அப்பாவா இயக்குநர் மகேந்திரன் சார் நடிச்சிருக்கார். முதல் நாள் அவர் ஸ்பாட்டுக்கு வந்தப்போ, அவர் காலைத் தொட்டு வணங்கிட்டு தான் அவருக்கான ஷாட் வெச்சேன். சசி சார் - சூரி காம்போ இதுல நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு. சூரி இதுல காமெடியனா மட்டுமல்லாம, நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா தெரிவார். ஹரீஷ் பேரடி, படத்தின் தயாரிப்பாளர் இந்திரகுமார் ரெண்டுபேருக்கும் நல்ல கேரக்டர். இவங்க தவிர, இன்னொருவர் நடிச்சிருக்கார். அது சஸ்பென்ஸ்!’’

“டெக்னிக்கல் டீம்?”

`` ‘மரகத நாணயம்’, ‘கனா’ படங்களுக்குப் பிறகு திபு நினன் தாமஸ் இந்தப் படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கார். சசி சாரோட அறிமுகப் பாடலோடு சேர்த்து, மொத்தம் 5 பாடல்கள். எல்லாமே நல்லா வந்திருக்கு. ஏகாம்பரம் சார் கேமராமேனா வொர்க் பண்ணியிருக்கார். பல படங்கள் பண்ணுனவர், ‘எனக்கு இந்தப் படம் பெரிய அடையாளமா இருக்கும்’னு சொன்னப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்தது.”

“ஹீரோ சசிகுமார், இயக்குநர் சசிகுமார்... உங்களுக்கு எப்படி?”


``சுப்ரமணியபுரம் மாதிரியான ஒரு கமர்ஷியல் படத்தை அவ்வளவு லைவ்லியா கொடுத்து ஆச்சர்யப்படுத்தியவர். ஹீரோவா, படத்துல எவ்ளோ கமர்ஷியல் இருந்தாலும், எதார்த்தத்தை மீறிடக் கூடாதுங்கிறதுல ரொம்பத் தெளிவா இருப்பார்.” 

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

“ ‘சுந்தரபாண்டியன்’ படத்துல சாதியைத் தூக்கிப் பிடிச்ச விமர்சனம் உங்கமேல இருக்கு. இது பெரியாரின் பிள்ளைகள் பற்றிய படம்னு சொல்றீங்க...?”

`` ‘சுந்தரபாண்டியன்’ படத்துல உசிலம்பட்டி தேவர் சிலையைக் காட்டினதுல, எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.  ‘சுந்தரபாண்டிய’னுக்காக தேனியில தங்க முடிவெடுத்தப்போ  ஜெயலலிதா அம்மாவுடைய பொதுக்கூட்டம் ஒண்ணு நடந்துக்கிட்டிருந்தது. தங்குறதுக்கு ரூம் கிடைக்கல. அதனால, உசிலம்பட்டியில தங்கினேன். படங்கள்ல அது படிக்காத கிராமம்; பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் ஊத்திக் கொன்னுடுவாங்கனெல்லாம் பதிவு பண்ணியிருக் காங்க. ஆனா, அதே உசிலம்பட்டியிலதான் தன் வீட்டுப் பெண்களை தெய்வமா வணங்குறாங்க, படிக்க வெச்சு வேலைக்கு அனுப்பி வைக்கிறாங்க.  உசிலம்பட்டியில பஸ் ஸ்டாண்ட், தேவர் சிலையைத் தாண்டி வேற என்ன மான்டேஜ் காட்டமுடியும்?! படத்தோட தொடக்கத்துல ‘வேற சாதிப் பையன் நம்ம வீட்டுப் பொண்ணை லவ் பண்ணுனா, கொன்னுடுவோம்’னு சொல்ற சிலரை, க்ளைமாக்ஸ்ல ஹீரோ கொல்வார். எல்லாரும் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கிட்டு, விமர்சனம் பண்ணிட்டாங்க. அது எனக்கு வருத்தம்தான்.”
 
“தமிழ் சினிமாவுல உங்களுக்கான இடம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?”

``படங்களோட எண்ணிக்கை முக்கியமில்லை. நல்ல படங்கள் எடுக்கணும். ‘சுந்தரபாண்டியன்’ மக்கள் மனசுல நின்ன மாதிரி, என் அடுத்த படங்களுக்கு வரவேற்பு கிடைக்கலை. அதுக்குப் பிறகு கவனமா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். எவர்கிரீன் படங்கள் பட்டியல்ல என் படமும் இருக்கணும். அதுதான் என் ஆசை!”

மா.பாண்டியராஜன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism