Published:Updated:

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

Published:Updated:
ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

ன் ஏரியா வடசென்னை. இப்போ என் செல்ல மகள், மனைவி, அவங்க அம்மா, அப்பா, தங்கச்சினு எல்லோரும் இருக்கிற ஜாலி கூடு என் வீடு’’ - கலகலவென தொடங்குகிற நடன இயக்குநர் சாண்டி, தன் காதல் மனைவி சில்வியாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தொடர்ந்து, தானும் சாண்டியும் இணைந்த கதை சொல்கிறார், சில்வியா.

‘`என் தங்கச்சிக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். அவளுடைய பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக நானும் எங்க அம்மாவும் சாண்டிகிட்ட பேசி அவரைக் கூட்டிட்டு வந்தோம். அவரைப் பார்த்ததும் என் தங்கச்சி சந்தோஷத்துல அழுதுட்டா. அதிலிருந்து அவர் எங்க குடும்பத்துடன் க்ளோஸ் ஆகிட்டார். எனக்கு என்னவோ இவரைப் பிடிக்கவே செய்யாது. ஓவரா ஆட்டிட்யூட் காட்டுற மாதிரி இருக்கும். இவர்கிட்ட பேசவும் மாட்டேன். திடீர்னு ஒரு நாள் என்னைக் காதலிக்கிறதா சொல்லிட்டார். அதுக்கப்புறம் அவர்கிட்ட பேசவே இல்ல. ஆனா, அவர் என் அம்மாகிட்ட நேரடியா என்னைப் பெண் கேட்டுட்டார். வீட்டுல `ஓகே’ சொன்னதுக்கு அப்புறம்தான் நான் இவரை லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்’’ என்கிறவரின் கரம் சாண்டியைப் பற்ற, அவர் தொடர்கிறார்.

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

‘`ஏரியாவில் சாவுக்குத்து ஆடுவேன். அதைப் பார்த்துட்டு எங்க ஏரியா அண்ணனுங்க எல்லாம் ‘செமையா ஆடுற’ன்னு சொல்லுவாங்க. எங்க வீட்டுல மட்டும் என்னைத் திட்டிட்டே இருப்பாங்க. அப்படி ஆரம்பிச்ச பயணம்தான் இப்போ இப்படி வந்து நிக்குது. படிக்கவே மாட்டேன்னு ஓடிவந்து, ஜெயந்தி மாஸ்டர்கிட்ட சேர்ந்தேன். அவங்க மூலமா கலா மாஸ்டர் அறிமுகமானாங்க. அவங்களால ரியாலிட்டி ஷோவுக்குள்ளே என்ட்ரி ஆனேன். பிருந்தா மாஸ்டர் என்னை சினிமாவில் அசிஸ்டென்ட்டாக்கினாங்க.  சிம்பு சார், அவருடைய `வாலு' படத்துக்கு என்னை கொரியோகிராப் பண்ணச் சொன்னார். அவர் மூலமாதான் டான்ஸர்ஸ் யூனியனில் கார்டு வாங்கினேன். சில காரணங்களால் அதுக்கு முன்னாடியே ‘ஆ’ன்னு ஒரு படம் மூலமா கொரியோகிராபரா அறிமுகமானேன். அதுக்கப்புறம் என்னுடைய உழைப்பைப் பார்த்துட்டு, எங்க வீட்டுல உள்ளவங்க பெருமைப்பட ஆரம்பிச்சாங்க. ஆனாலும், எனக்கு வெளியில் ஒருத்தவங்ககிட்ட எப்படி பேசணும், எந்த மாதிரி நடந்துக்கணும்னு எல்லாம் தெரியாது. என்னை முழுசா மாத்தினது இவங்கதான்’’ எனக் கைகாட்ட, வெட்கப் புன்னகையுடன் தொடர்கிறார் சில்வியா.

‘`அவருக்குக் கறுப்பு கலர் ரொம்பப் பிடிக்கும். எந்தளவுக்குனா, எங்க வீட்டு கபோர்டை ஓப்பன் பண்ணினா ஃபுல்லா கறுப்பு டிரஸ் மட்டும்தான் இருக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே அவர் ஒரு டான்ஸ் ஸ்டுடியோ ஓப்பன் பண்ணினார். ஃபேமிலி சப்போர்ட்டோட இப்போ நாலாவது ஸ்டுடியோ ஓப்பன் பண்ணப் போறோம்’’ என்று பெருமையுடன் சொல்கிறவர், ‘`முன்னாடியெல்லாம் ஒரு அஞ்சு நிமிஷம்தான் என்கிட்ட போன்ல பேசுவார். இப்போ அவருடைய மகள்கிட்ட பேசுறதுக்காக, வீடியோ கால்ல நேரம் போறது தெரியாம இருக்கார். அதை என்னன்னு கேளுங்க’’ என்று சந்தோஷத்துடன் குறைகூற, அப்பா சாண்டியின் முகமெல்லாம் பரவுகிறது மகிழ்ச்சி.

‘`எங்க குட்டி தேவதை சுசானா மிச்சேலுக்கு ஏழு மாசங்கள் ஆகுது. சில்வியா, லேபர் ரூம்ல இருந்தப்போ நான் வெளியே காத்துக்கிட்டிருந்த அவஸ்தையை வார்த்தைகளால சொல்ல முடியாது. குழந்தை பிறந்ததும் என் கையில் கொடுத்தாங்க. அந்த நொடி என் உடம்பெல்லாம் சிலிர்த்து அழுகை வந்துடுச்சு. இனிமே நான் வாழப்போற வாழ்க்கை முழுவதும் அவளுக்கானதுனு நினைச்சுக்கிட்டேன்’’ - அதுவரை இல்லாத நெகிழ்ச்சி உருக்குகிறது சாண்டியை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

‘`எங்க வீட்டுல நானும் என் தங்கச்சியும் மட்டும்தான். அதனால, எங்கப்பா அம்மாவுக்கு மகனாகவும் இருக்கார் சாண்டி. திருமணத்துக்கு அப்புறம் என்னைப் படிக்க வெச்சார். படிப்புக்கு ஏற்ற மாதிரியான வேலைக்குப் போகணுங்கிறதுதான் என் ஆசை. ‘அதுக்கு என்னவெல்லாம் முயற்சி செய்யணுமோ, அதைச் செய்’னு சொல்லிட்டேயிருக்கார். எங்களுக்குள்ள அதிகமா சர்ப்ரைஸ் பண்றது அவர்தான். கடைசியா, என் பிறந்தநாளுக்கு எனக்கு ஒரு கார் கிஃப்ட் பண்ணினார். ஆண் குழந்தை பிறக்கணும்னு ஆசைப்பட்டார். பெண் குழந்தை பிறந்ததும் அதைவிட ஆசை ஆசையா அவளை வளர்க்குறார். பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்; நிறைய பொறுப்பாகியிருக்கார்.

இவர் முதன்முதலா டான்ஸ் ஆட வந்தப்போ ஷூகூட இல்லையாம்; நிறைய நாள்கள் சாப்பிடாம டான்ஸ் ஆடப் போயிடுவாராம். அதனால இப்போ எங்க டான்ஸ் ஸ்டுடியோவில் கஷ்டப்படுற பசங்க ஷூ இல்லாம இருக்காங்கன்னு தெரிஞ்சா உடனே கூட்டிட்டுப் போய் ஷூ வாங்கிக் கொடுத்துடுவார். அதே மாதிரி ஸ்டுடியோவுக்குள்ளே வந்த உடனே, ‘சாப்டீங்களா?’ன்னுதான் எல்லார்கிட்டேயும் கேட்பார். சாப்பிடலைன்னா அவங்களைக் கூட்டிட்டுப்போய் சாப்பாடு வாங்கிக் கொடுப்பார். டான்ஸ்ல பல ஏற்ற இறக்கங்களைச் சந்திச்சிருக்கார். அவர் ரொம்ப உடைஞ்சு போகும்போது, பக்கபலமா நான் இருப்பேன். இவர் 20 பர்சன்ட் திறமையைத்தான் வெளிப்படுத்தியிருக்கார்; முழு திறமையும் நிச்சயம் ஒருநாள் வெளிப்படும்’’ என்கிறார் காத்திருப்புக் காலம் கனிய.

‘`எனக்கு இயக்குநராகணும்னு ஆசை இருக்கு. அதுக்காக யார்கிட்டேயாச்சும் அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேரணும். அந்த ஆசையையும் சீக்கிரம் எட்டிப் பிடிக்க ஓடிட்டு இருக்கேன்’’ என்கிறபோது அவருடைய மகள் அழ... அவளைச் சமாதானம் செய்ய ஒரு கானா பாடலை அட்டகாசமாகப் பாடுகிறார் சாண்டி!

-வெ.வித்யா காயத்ரி 

படங்கள் : தே.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism