தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு

அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு

அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு

அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு

சினிமா, சின்னத்திரை, அரசியல் களங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்ரவுண்டர் குஷ்பு. ‘வருஷம் 16’-ன் சைனீஸ் பட்லரின் தமிழ் இப்போது மேலும் மெருகேறியிருக்கிறது. பேச்சில் அழகும் அறிவும் அனுபவ முதிர்ச்சியும் பிரதிபலிக்கின்றன.

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப் பிடிப்பில் இருந்த குஷ்புவை அவள் விகடன் வாசகியரின் கேள்விகளுடன் சந்தித்தோம். கிரீன் ரூமிலிருந்து அவர் தந்த கலர்ஃபுல் பதில்கள்...


குஷ்பு, நக்கத் இருவரில் யார் உங்களை மிகவும் கவர்ந்தவர்? இன்னமும் நக்கத்தாகவே வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுமா?
 சாந்தினி, சென்னை-111


எனக்கு ரெண்டு பேருமே ஒன்றுதான். பெயர் மாறினதால், ஆள் மாறிடுவாங்கன்னோ, உள்ளங்கள் மாறிடும்னோ அர்த்தமில்லை. என் குடும்பத்தில் எல்லாரும் என்னை என் இயற்பெயர்லதான் கூப்பிடுவாங்க. குஷ்புங்கிறது சினிமாவுக்காக வெச்ச பெயர் அவ்வளவுதான்!

பயணங்கள் மீதான உங்கள் காதல் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் நீங்கள் டிராவல் செய்த இடம்?
பி.மஞ்சு, பெரியபாளையம்


பயணம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். புதுப்புது இடங்களுக்குப் போகணும், அந்த இடங்களின் கலாசாரங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவேன். அதனால நிறைய டிராவல் பண்ணுவேன். சமீபத்துல போன இடங்கள் நார்வே மற்றும் லண்டன். நார்வே போனது இதுதான் முதன்முறை. நார்வேயில் சிட்டிக்குள்ள போகாம, இன்டீரியர் ஏரியாக்களுக்கு டிராவல் பண்ணினோம். அது வித்தியாசமான அனுபவமா இருந்தது.

மல்டி டாஸ்க்கிங் செய்கிறீர்கள். உங்களுக்கான நேரத்தை எப்படி மேனேஜ் செய்வீர்கள்?
ஷீலா ஜோன்ஸ், செங்கல்பட்டு


என் வேலைகளை நான் பிளான் பண்ணிடுவேன். அரசியலைப் பொறுத்தவரைக்கும் சில நேரம் அப்படி பிளான் பண்ண முடியாது. அப்பவும் என் மகள்கள்கிட்ட நான் அந்த நேரம் இருக்க மாட்டேன்னு தகவல் சொல்லிடுவேன். எவ்வளவு முக்கியமான மீட்டிங்ல இருந்தாலும் வீட்டுலேருந்து போன் வந்தா எடுக்காம இருக்க மாட்டேன். என் குழந்தைங்க பிறந்தபோது அவங்களுக்கு மசாஜ் பண்ணி குளிப்பாட்டறது, சாப்பாடு ஊட்டறதுனு எல்லா வேலைகளையும் நானே பண்ணியிருக்கேன். வேலைக்கு ஆள் வெச்சுப் பார்த்ததில்லை. அதனால எப்போ நமக்குத் தேவையோ, அப்போ அம்மா நம்மகூட இருப்பாங்கனு அவங்களுக்கும் தெரியும்.

மனசுவெச்சா முடியாதது எதுவுமே இல்லை. ஒரு வேலையைச் செய்யாமலிருக்க நூறு காரணங்களைத் தேடலாம். ஆனா, அந்த வேலையைச் செய்ய காரணங்களே தேவையில்லை. வீட்டையும் வேலையையும் பேலன்ஸ் பண்றது பெரிய விஷயமே இல்லை.

அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு

மதம் என்பதையும், வடக்கு தெற்கு என்ற எல்லைகளையும் உடைத்த உங்கள் திருமண வாழ்க்கை, அந்த வேறுபாடுகளால் எப்போதாவது திணறி இருக்கிறார்களா?
எஸ்.ஜெயந்தி, திருவையாறு


எங்க வீட்டுல மதத்தைப் பத்தி விவாதிக்கவே மாட்டோம். வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி.

‘குஷ்புவின் அரசியல் நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறுபடுகிறது’ என்று உங்கள்மீது வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டுக்கு உங்கள் விளக்கம்?
ஜெனிஃபர் டயானா, சென்னை-45


நான்கு வருடங்கள் தி.மு.க-வில் இருந்தேன். இப்போ நான்கு வருடங்களா காங்கிரஸில் இருக்கேன். காங்கிரஸை விட்டுப் போக மாட்டேன்னும் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். என் அரசியல் நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறிட்டிருக்கிறதா எதை வெச்சு சொல்றாங்கனு தெரியலை. இந்தக் கேள்வியைக் கேட்ட தோழி கொஞ்சம் என்னைப் பத்தி ஹோம்வொர்க் பண்ணிட்டுக் கேட்டிருக்கலாம்!

2007-ல் அரசியலில் இறங்கணும்னு ஓர் ஐடியா வந்தது. அந்த நேரம் உச்ச நீதிமன்றத்தில் என் பெயரில் வழக்குகள் இருந்தன. வழக்குகளிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அரசியல் பிரவேசம்னு தெளிவா இருந்தேன். அதுக்கு முன்னாடியே அரசியலுக்கு வந்திருந்தா, நான் சார்ந்த கட்சியின் செல்வாக்கினால்தான் அந்த வழக்குகளில் ஜெயிச்சிட்டேன்னு என்மேல ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கும். அதை நான் விரும்பலை.

புத்தகங்கள் வாசிப்பில் அதிக ஆர்வமுள்ளவர் நீங்கள். ‘பெரியார்’ திரைப்படத்தில் நடித்தபோதே, திராவிட மற்றும் பெரியார் சிந்தனைகளைப் படித்து உள்வாங்கி இருக்கிறீர்கள். உங்கள் மனம்கவர்ந்த எழுத்தாளர் பெரியார் எனக் கொள்ளலாமா? அல்லது உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?
மாலதி ஜனார்த்தனன், கோவை


புத்தகம் வாசிக்கிறது ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆங்கிலப் புத்தகங்கள்தான் அதிகம் படிப்பேன். சமீப காலமா புத்தகம் படிக்கிற பழக்கம் கொஞ்சம் மாறி, தொழில்ரீதியா நிறைய ஸ்கிரிப்ட்ஸ் படிச்சிட்டிருக்கேன்.

எனக்கு ரொம்பப் பிடிச்சது பெரியாரின் புத்தகங்கள். கலைஞரின் புத்தகங்களையும் ஸ்டாலின் எழுதின புத்தகங்களையும் படிச்சிருக்கேன். எனக்கு சுயசரிதைகளைவிட புனைகதைகள் பிடிக்கும். அவற்றைப் படிக்கிறபோது ரிலாக்ஸிங்கா இருக்கும். செல்ஃப்மேட் புத்தகங்கள், லவ் பத்தின புத்தகங்கள் எனக்குப் பிடிக்காது. நேரடியான வர்ணனை இருந்தால்தான் பிடிக்கும். சமீபகாலமா நியூஸ் பேப்பர்ஸ் அதிகமா படிக்கிறேன்.

 இன்றைய சினிமா, பெண்களைச் சார்ந்து அதிகம் இயங்குவதாக நினைக்கிறீர்களா? ஒரு ஹீரோயினாக சினிமாவில் எந்த பீரியட் பெஸ்ட் என நினைக்கிறீர்கள்?
மீனாட்சி மாரிமுத்து, உடுமலைப்பேட்டை


எல்லா காலத்திலுமே சினிமா துறை பெண்கள் சார்ந்துதான் இருந்திருக்கு. எனக்குப் பெரிய வித்தியாசங்கள் தெரியலை. பானுமதியம்மா காலம் ஒரு மாதிரி இருந்தது. அடுத்து ராதிகா, ரேவதி காலம் ஒரு மாதிரி இருந்தது. நான் வந்தபோது வேற மாதிரி இருந்தது. த்ரிஷா காலம் வேற மாதிரி இருக்கு. வெளியிலிருந்து பார்க்கிற ரசிகர்கள்தான் எல்லாம் மாறிட்டதா நினைக்கிறாங்களே தவிர, எனக்கு அப்படித் தெரியலை.

எங்களுக்கெல்லாம் முந்தைய தலைமுறைகளில் நடிச்ச சாவித்திரியம்மா, அஞ்சலி தேவியம்மா பீரியட்தான் பெஸ்ட்டுனு நினைச்சவங்க உண்டு. எனக்கடுத்த தலைமுறையில வந்தவங்க ரேவதி, ராதிகா பீரியட்தான் பெஸ்ட்டுனு நினைச்சிட்டிருக்காங்க. இப்ப உள்ள தலைமுறை என் பீரியட்தான் பெஸ்ட்டுனு நினைக்கிறாங்க. என் பார்வையில் 80'ஸ்தான் பெஸ்ட். அதுதான் ‘கோல்டன் பீரியட் ஆஃப் சினிமா’னு சொல்வேன். சக்ஸஸ் ரேட், கேரக்டர்ஸ்னு எல்லாமே காரணம்.

அரசியலில் பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக இல்லாமல், ஆரோக்கியமான களமாக விளங்க என்ன செய்யலாம்?  மக்களிடம் எப்படிப்பட்ட மாற்றங்கள் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?
சி.நந்தினி, பெரம்பலூர்

அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு

அரசியல் மட்டுமில்லை, எந்தத் துறையானாலும் ஒரு பெண்ணைப் பார்க்கிற விதம் மாறணும். ஒரு பெண்ணைக் கேவலமா பார்க்கிறதுக்கும் அவளைப் பற்றி தவறா விமர்சிக்கிறதுக்கும் முன்னாடி தன் வீட்டுப் பெண்களை வேற யாராவது அப்படிப் பார்த்தாலோ, விமர்சித்தாலோ எப்படியிருக்கும்னு ஒரு நிமிஷம் யோசிச்சாலே எல்லாம் சரியாயிடும்.

உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு ‘கான்ட்ரவெர்சி’  இருக்கிறதே... ஏன் என்று யோசித்ததுண்டா?
ஜெ.பிரதீபா, சென்னை 28


எனக்குச் சுற்றி வளைச்சுப் பேசத் தெரியாது. எதையும் நேருக்கு நேர் வெளிப்படையா பேசிடுவேன். இன்னொரு காரணமும் இருக்கலாம். பெண் புத்திசாலித்தனமா பேசக் கூடாதுனு நிறைய ஆண்கள் நினைப்பாங்க. அதுவும் சினிமா துறையைச் சேர்ந்த பெண்கள் புத்திசாலிகளா இருக்கிறதையே பலரும் விரும்பறதில்லை. நான் சினிமாவிலும் இருக்கேன். பொதுவாழ்க்கையிலும் இருக்கேன். புத்திசாலியாகவும் இருக்கேன். அதனாலதான் என்னைச் சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றனபோல.

சர்ச்சைகள் வந்தா ஃபீல் பண்ற ஆளில்லை நான். முதன்முதல்ல என்னைப் பற்றி சர்ச்சையான செய்தி வந்தபோதே சிரிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன். தப்பு பண்ணியிருந்தால்தான் பயப்படணும். என் மடியில கனமில்லை, அதனால் பயமுமில்லை. முன்னபின்ன தெரியாதவங்க என்னைப் பத்திப் பேசறாங்கன்னா அவங்க வேலைவெட்டி இல்லாம இருக்காங்க. எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு. நான் ஓடிட்டிடே இருக்கேன்.

*
30 வருட தமிழ்நாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது?
* உங்களுக்குக் கோயில் கட்டியபோது எப்படி உணர்ந்தீர்கள்?
* நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு, தயாரிப்பு என்று சகல துறைகளிலும் கால் பதித்த நீங்கள் ஏன் இயக்குநர் ஆகவில்லை?
* காதல் பற்றி உங்கள் எண்ணம்?
* கமல், ரஜினி இருவரில் உங்களுக்குப் பொருத்தமான ஹீரோ யார்?
* ஆண்குழந்தை இல்லாத வருத்தம் உண்டா?
அடுத்த இதழில் அதிரடியாகத் தொடர்கிறார் குஷ்பு

 ஆர்.வைதேகி
 படங்கள் : சொ.பாலசுப்ரமணியன், க.பாலாஜி