Published:Updated:

“சூர்யா எனக்கு செல்லம்!”

“சூர்யா எனக்கு செல்லம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சூர்யா எனக்கு செல்லம்!”

“சூர்யா எனக்கு செல்லம்!”

“சூர்யா எனக்கு செல்லம்!”

“சூர்யா எனக்கு செல்லம்!”

Published:Updated:
“சூர்யா எனக்கு செல்லம்!”
பிரீமியம் ஸ்டோரி
“சூர்யா எனக்கு செல்லம்!”

“பார்ட் டூ படம் எடுக்கிறதுல எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ‘நாடோடிகள் 2’, ‘அடுத்த சாட்டை’ இந்த ரெண்டு படமும், அந்தந்தப் படங்களோட பார்ட் டூ கிடையாது.” ஆர்வமாக உரையாடலைத் தொடங்குகிறார், சமுத்திரக்கனி. பரபரப்பாகப் படங்களை இயக்கிக்கொண்டிருப்பவர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகராகவும் பிஸி! 

“சூர்யா எனக்கு செல்லம்!”

“ ‘நாடோடிகள் 2’ என்ன களம்?”

“சாதி மேல எனக்குப் பெரும் கோபம் உண்டு. சாதியப் பிரச்னைகள் வரும்போதெல்லாம், ஆத்திரம்தான் வரும். அதேசமயம், சாதியே வேண்டாம்னு சொல்ற பசங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அப்படிப்பட்ட இளைஞர்களைப் பற்றிய படம் இது. ‘நாடோடிகள்’ படத்துக்கும், இந்தப் படத்துக்கும் சம்பந்தம் கிடையாது. இது முற்றிலும் வேற கதை. ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் சாதியை வெறுக்கிற இளைஞர்கள் இருக்காங்க. அவங்கெல்லாம் ஒண்ணு சேர்ந்தா எப்படி இருக்கும்னு, இந்தப் படத்துல பார்க்கலாம். சசிகுமார், பரணி, அஞ்சலி, அதுல்யா ரவி நான்கு பேரும் படத்துல ஒன்றாகவே இருப்பாங்க. ஜீவானந்தம் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமை. அதனால, படத்துல சசிகுமாருக்கு ஜீவானந்தம் பெயரை வெச்சுட்டேன். தோழர் செங்கொடி பெயரை அஞ்சலிக்கு வெச்சிருக்கேன். பரணி, சமூகத்துடன் விவாதிக்கொண்டே இருக்கிற ‘குட்டியப்பன்’ கேரக்டர். அதுல்யா ரவி, செளமியாங்கிற கேரக்டர்ல வர்றாங்க. இந்தப் படத்துக்குப் பிறகு நிச்சயமா, ‘சாதியற்றவர்கள்’ என்ற கூட்டம் முளைக்கும்னு நம்பிக்கை இருக்கு.

முதல்ல ‘ரத்தம்’னுதான் வெச்சேன். ஹீரோவா சசிகுமார் கமிட் ஆனபிறகு, அந்த டைட்டில் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, ஏற்கெனவே தம்பி சசியை ரத்தவாடை அதிகமான படத்துல நடிக்கிறதா சொல்லிக்கிட்டிருக்காங்க. நீங்க ‘நாடோடிகள் 2’ன்னே டைட்டில் வெச்சிடுங்க’ன்னு சசிதான் சொன்னான்.” 

“ ‘அடுத்த சாட்டை’ என்ன கதை?”

“இது கல்லூரி மாணவர்களுக்கு சுயமா யோசிக்கிற சுதந்திரத்தைக் கொடுக்கணும்னு வலியுறுத்தும் படம். நான் பேராசிரியரா நடிச்சிருக்கேன். நாடகக் கலைஞர் ராஜஸ்ரீ, ‘சாட்டை’ யுவன் மற்றும் அதுல்யா ரவி நடிச்சிருக்காங்க.”

“ராஜூமுருகன் இயக்கத்துல நீங்களும், சசிகுமாரும் சேர்ந்து நடிக்கிறதா வந்த செய்தி?!”

“சசிகுமாரும், நானும் சேர்ந்து நடிக்குறோம்னு தெரிஞ்சாலே குஷியாகிடுவேன். அவனுக்கும் எனக்கும் பூர்வ ஜென்மத்து உறவுன்னு சொல்லலாம். ராஜூமுருகன் எப்போ ஷூட்டிங் கூப்பிடுவார்னு நானும் சசியும் வெயிட் பண்றோம்.” 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சூர்யா எனக்கு செல்லம்!”

“ ‘காப்பான்’ படத்துல சூர்யா, மோகன்லால்கூட நடிச்ச அனுபவம்?”

“கே.வி.ஆனந்த் சாரோட ‘கவண்’ படத்துல நானும் நடிக்க வேண்டியது. ஷூட்டிங் அப்போ கூப்பிடுறேன்னு சொன்னார், படமே ரிலீஸாகிடுச்சு. ‘ஏன் சார் கூப்பிடலை’ன்னு கேட்டேன். ‘படத்துல உனக்காக உருவாக்குன கேரக்டர் சின்னதா இருக்கோன்னு தோணுச்சு’ன்னு சொன்னார். இப்போ, ‘காப்பான்’ படத்துக்காக என்னைக் கூப்பிட்டார். படத்துல சூர்யா கேரக்டர் என்னவோ, அதுதான் என் கேரக்டரும்! படம் முழுக்க அவர்கூட வருவேன். சூர்யாவை ‘செல்லம்’னுதான் ஸ்பாட்ல கூப்பிடுவேன். நான் அப்படிக் கூப்பிடுறதைப் பார்த்து, மோகன்லாலும் சூர்யாவை ‘செல்லம்’ ஆக்கிட்டார். மோகன்லால் சார்கூட மலையாளத்துல ஏற்கெனவே ரெண்டு படம் பண்ணியிருக்கேன். ரெண்டுமே ஹிட். ‘எனக்காகக் கதை எழுது; நான் நடிக்கிறேன்’னு சொல்லியிருக்கார், மோகன்லால். அவருக்காக ஒரு கதை அமையுறப்போ, நிச்சயம் அவரை இயக்கணும்.” 

“ராஜமெளலி படத்துல நடிக்கிற அனுபவம்?”
 
“ ‘நாடோடிகள்’ படத்தைப் பார்த்துட்டு ஒரு பெரிய மெசேஜ் டைப் பண்ணி அனுப்பியிருந்தார், ராஜமெளலி அண்ணன். அப்போ இருந்து இப்போ வரைக்கும் அவரும் நானும் அண்ணன்  தம்பியா பழகிட்டிருக்கோம். ஒருநாள் போன் பண்ணி, ‘உன்னைப் பார்க்கணும்; ஹைதராபாத் புறப்பட்டு வா’ன்னு சொன்னார், போனேன். அவருடைய படங்கள் மாதிரியே, அவரோட ஆபீஸும் பிரமாண்டமா இருந்தது. அவங்க வீட்டுல இருக்கிறவங்களையெல்லாம் அறிமுகப்படுத்தி வெச்சார். அப்போவே, ‘என் படத்துல நீ நடிக்கணும்’னு சொன்னார். ‘ஷூட்டிங் எப்போன்னு மட்டும் சொல்லுங்க, வந்துட்றேன்’னு சொன்னேன். ‘அப்படியெல்லாம் முடியாது’ன்னு உட்கார வெச்சு, முழுக் கதையையும் சொன்னார். நான் நடிக்கப்போற முதல் தெலுங்குப் படம் இது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., ரெண்டுபேர்கூட எனக்கும் ஒரு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல ‘வேள்பாரி’ புத்தகத்தை ராஜமெளலிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன். ஏன்னா, ராஜமெளலி அண்ணன் அதைப் படிச்சு, படமா எடுத்தா நல்லா இருக்கும்.”

“ ‘வடசென்னை 2’ படத்துல ‘குணா’வை எப்படி எதிர்பார்க்கலாம்?”

“ ‘வட சென்னை’ ஷூட்டிங்கின்போதே, இரண்டாம் பாகத்துக்கான பாதிப் படப்பிடிப்பை முடிச்சுட்டார், வெற்றி மாறன். இரண்டாம் பாகத்துல நான் நேரடி வில்லனா நிற்பேன். வெற்றிகிட்ட இருந்து கத்துக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அவர் கூப்பிட்டா, கதை கேட்காம நான் நடிப்பேன்.”

சனா