பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!”

“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!”

“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!”

‘இஸ்பேட்ராஜாவும் இதய ராணியும்’ - ஜெயகாந்தன்  சிறுகதையின் இந்தத் தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். இஸ்பேடு ரொம்பத் திமிரானது, இதயம் ரொம்ப அழகானது. இந்த இரண்டு முரண்பாடுகளும் சந்திக்கும் புள்ளியில்தான் என் கதை தொடங்குது” எனப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.

“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!”

ஒரு இயக்குநருக்கு இரண்டாவது படம் ரொம்ப முக்கியமானது… அப்படி ஸ்பெஷலாக இதில் என்ன விஷயம் வெச்சிருக்கீங்க..?

`` ஒவ்வொரு ஃப்ரேமையும் பக்காவா ப்ளான் பண்ணி 38 நாள்ல முழுப் படத்தையும் எடுத்து முடிச்சிருக்கேன். மிகவும் நேசிச்ச ஒருத்தரை எந்த ஒரு புள்ளியில் நாம் வெறுக்க ஆரம்பிக்கி றோம். அன்பு எப்படி வெறுப்பாக மாறுது; அன்புங்கிற பெயர்ல சில சமயங்கள்ல நாம செய்யக்கூடிய வன்முறை என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு விடையா இந்தப் படம் இருக்கும். படம் பார்த்துட்டு வெளியில வரும்போது காதலர்களை மனசு விட்டுப் பேசவைக்கும்.  அன்பின் பெயரால் நாம் ஒருவர்மீது ஒருவர் செய்யும் உளவியல் வன்முறைகளை சுய பரிசோதனை செய்யும் விழிப்புநிலையை இப்படம் ஏற்படுத்தும்.”

 போஸ்டர்லாம் பார்க்கறப்ப ஹரிஷ் கல்யாண் ‘பியார் பிரேமா காதல்’ படத்தோட ஹேங் ஓவர்லயே இருக்கற மாதிரி இருக்கே... வேற யாரெல்லாம் இருக்காங்க படத்துல?

“நிச்சயமா இது வேற ஹரிஷைக் காட்டும். ஹரிஷ்கிட்ட, ‘சாக்லேட் பாய் லுக் வேணாம் ஒரு முரட்டுத்தனமான ஆளா வாங்க’ன்னேன். அவரும் தன்னை மாத்திக்கிட்டு வந்தார். ஒரு திமிரான கேரக்டரா இருக்கும். நடிப்புலேயும் அவரோட கரியர்லேயும் இது அவருக்கு அடுத்த லெவலா இருக்கும். அவரோட கேரக்டருக்கு அப்படியே நேரெதிரான ஒரு கேரக்டர் ஷில்பாவுக்கு. போல்டான கேரக்டர். மா.கா.பா. ஆனந்த் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்கார்.”

சாம் சி.எஸ் இசை எப்படி வந்திருக்கு?

“சாம் சி.எஸ்ஸுக்கும் எனக்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. நான் அவர்கிட்ட நாலு தீம் சாங் வாங்கிட்டுத்தான் ஷூட்டிங்கிற்கே போனேன். முதல் படத்துலேயும் அப்படித்தான் பண்ணினேன்.  நான் ஒரு காட்சியைச் சொன்னாலே அதுக்கு சாம் பிஜிஎம் போட்ருவார். அந்த பிஜிஎம்மை வாங்கிட்டு ஷூட்டிங் போனால் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அந்த சீன் எப்படி வந்திரும்னு தெரிஞ்சிடும். படத்தில் அஞ்சு பாட்டு இருக்கு. ஆல்பமாகவே நல்லா வந்திருக்கு.”

“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!”

உங்க முதல் படத்தோட ஹீரோ விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ஒரு பாட்டு பாடியிருக்கிறார்… உங்க நட்பைப் பற்றிச் சொல்லுங்க..?

“ ‘சூது கவ்வும்’ ரிலீஸாகப்போற டைம்லதான் நான் விஜய் சேதுபதிகிட்ட கதை சொன்னேன். கதை சொல்லும்போதே, ‘இந்த கேரக்டர் ரொம்ப ஸ்டைலிஷா இருக்கே, எனக்கு செட்டாகுமா’ன்னு கேட்டார். ‘ஏன் நீங்களும் ஸ்டைலா தானே இருக்கீங்க’ன்னு சொன்னேன். ‘உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே’ன்னு சொன்னார். இப்படித்தான் நாங்க அறிமுகமானோம். அதுக்கு அப்பறம் ஷூட்டிங் போகும்போது  நல்ல நண்பர்களானோம். பட ரிலீஸுக்கு பிரச்னைகள் வரும்போது அவர் எனக்காக நின்னார்; இன்னும் க்ளேஸானோம். இந்தப் படத்தில் எனக்காக  ஒரு பாட்டு பாடிக்கொடுத்தார். அவர்கிட்ட ரெண்டு கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கேன். அதுல ஒரு கதையை வொர்க் பண்ணணும். அதுமட்டுமல்லாம அவரோட தயாரிப்புல ஒரு வெப் சீரீஸ் பண்ற பிளானும் இருக்கு. ஆனால், அதை எப்போ பண்ணுவேன்னு தெரியலை.”

`மெல்லிசை’ என்கிற `புரியாத புதிர்’ உங்களுக்குக் கத்துக்குடுத்தது என்ன?

“நம்ம கைல இல்லாத ஒரு விஷயத்துக்காக நாம பெருசா வருத்தப்படக் கூடாது. நம்ம அதிகாரத்துக்கு மீறிய ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும்போது அது நமக்கு வருத்தத்தைக் கொடுக்கும். அதுல இருந்து வெளியில வருவதுதான் மெச்சூரிட்டின்னு கத்துக்கிட்டேன்.”

மா.பாண்டியராஜன்