அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘கன்னித்தீவு’ என்று பெயரிட்டுள்ளனர். ‘கர்ஜனை’ இயக்குநர் சுந்தர் பாலு இயக்கும் இப்படத்துக்கு
அரோல் கரோலி இசையமைக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

• ‘கீதா கோவிந்தம்’ படம் மூலமாக, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவருக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. நிதின் நடிக்கும் ‘பீஷ்மா’ படத்தில் நடிக்கவுள்ளார். அதன் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

• ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த நடிகை ஜனனி ஐயர், ஒரு க்ரைம் கதையில் நடிக்க இருக்கிறார். அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்குகிறார்.

• ‘மஹா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது தவறிக் கீழே விழுந்துள்ளார், நடிகை ஹன்சிகா. ஒட்டுமொத்த படக்குழுவும் பதறிப்போக, கூலாக ‘அடுத்த சீன் என்ன?’ என்று கேட்டு அசத்தினாராம்! 

மிஸ்டர் மியாவ்

• வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் ஷூட்டிங்கை திருநெல்வேலியில் தொடங்கியுள்ளனர். இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

• கேரளத்தில் சன்னி லியோனுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்கு அவர் ‘ரங்கீலா’ என்ற படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில், மம்மூட்டி நடிக்கும் ‘மதுர ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறாராம் சன்னி லியோன்.

போட்டோ ஷாப்

மிஸ்டர் மியாவ்

நடிகை வித்யூலேகா
“எ
னக்கு போஸ் கொடுக்கப் பிடிக்காது. எதிர்பாராத நேரத்துல ‘க்ளிக்’ பண்ற கேன்டிட் போட்டோக்கள்தான் ரொம்பப் பிடிக்கும். இந்தப் போட்டோவுல நான் எல்லாத்தையும் மறந்துட்டு, சந்தோஷமா வாய்விட்டுச் சிரிப்பேன். இதே மாதிரி நான் எப்பவும் சந்தோஷமா இருக்கணும், ஆடியன்ஸையும் சிரிக்கவெச்சுட்டே இருக்கணும்.” 

கேள்வி கார்னர்

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்   
“ ‘மான்ஸ்டர்’ படம் எப்படி வந்திருக்கு... எப்போ ரிலீஸ்?”

“ரொம்ப அருமையாக வந்திருக்கு ப்ரோ. எஸ்.ஜே.சூர்யா சாரை இப்படி யாரும் இதுவரை பார்த்திருக்க மாட்டாங்க. உண்மையான எலியை நடிக்கவெச்சிருக்கோம். அவருக்கும் எலிக்குமான சீன்கள் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். வரும் மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ரிலீஸ் பண்ணப்போகிறோம்.”

சைலன்ஸ்

• ஐம்பது படங்களைத் தொட்ட பப்ளி நடிகைக்கு இப்போது கிளாமர்மீது ஆர்வம் வந்துள்ளதாம். அதனால், தான் ‘டூ பீஸ்’ உடையில் மிகக் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவைப் பதிவிட்டு ‘இது எப்படி இருக்கு?’ எனக் கேட்டுள்ளார். அதனால் அவரின் ரசிகர்கள் செம அப்செட்!

• பாலிவுட் உச்ச நடிகை நடித்து ஹிட்டான படத்தின் இரண்டாவது பாகத்தை, பல வருடங்கள் கழித்து அக்கட தேசத்தில் எடுக்கப் போகிறார்களாம். அந்தப் படத்தை, பிரபல பாடகியின் கணவர் இயக்கப் போகிறாராம்.