அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• ‘சதுரங்க வேட்டை 2’ படத்துக்குப் பிறகு, தெலுங்கில் ஒரு படம் இயக்கிவருகிறார், நிர்மல்குமார். ஆக்‌ஷன் வித் லவ் ஜானரில் உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

• சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான பிப்ரவரி 3-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனராம். அதன் பிறகு, பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் மியாவ்

• விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பள்ளிப் பருவக் காட்சிகளே இல்லையாம். அதற்குப் பதிலாக, சர்வானந்தும் சமந்தாவும் கல்லூரியில் படிப்பதுபோல காட்சிப்படுத்தியுள்ளாராம் இயக்குநர் பிரேம்குமார்.

• ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அதில் சிரஞ்சீவி, தமன்னா உட்பட ஆயிரம் பேர் நடனமாடுவதுபோல் பிரமாண்டமாக ஒரு பாடலை இயக்கிவருகிறார்கள். இந்தப் பாடல் காட்சிகளை 12 நாள்கள் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

மிஸ்டர் மியாவ்

• நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் ‘நரகாசூரன்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘கள்ளபார்ட்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. இவை தவிர, மற்றுமொரு புதிய படத்தில் அவர் கமிட்டாகி இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• ‘96’ படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த கெளரி கிஷன், மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘அனுகிரஹீத்தன் ஆண்டனி’ என்று பெயரிட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் கேரளத்தில் தொடங்கியுள்ளது.

கேள்வி கார்னர்: ஜனனி ஐயர்

“மறுபடியும் அசோக் செல்வனுடன் ஒரு படம். எப்படி இருக்கு?”
“ ‘தெகிடி’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல சேர்ந்து நடிக்கிறோம். ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ஊட்டியில ஷூட்டிங். ‘பிக் பாஸ்’ வீட்டுல இருந்து வெளியே வந்தவுடன் முதல்ல இந்தக் கதைதான் கேட்டேன். இதுவும் க்ரைம் ஜானர்தான்.”

சைலன்ஸ்

ரசியல் பேசும் மூத்த நடிகை, புது வகையில் கல்லா கட்டுகிறாராம். அவர் தட்டிவிடும் ட்வீட் எல்லாமே வைரல் ஆவதால், எங்களுக்காக ட்வீட் போடுங்கள் என்று பலரும் க்யூவில் நின்றுள்ளனர். அதனால், தன் டுவிட்டர் பக்கத்தை நிர்வகிக்க, தனியாக ஒரு அட்மினையே நியமித்திருக்கிறாராம். 

தமிழில் முதன்முறையாக அறிமுகமாக இருக்கும் பாலிவுட் உச்ச நட்சத்திரம், அந்தப் படத்திற்கு நாற்பது நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அவர் ஒப்புக்கொண்டதே பெரிது என்று அவருக்கான காட்சிகளை ஒரே ஷெட்யூலில் எடுக்க உள்ளனராம். தவிர, இந்தியில் ரீமேக்காக இருக்கும் தமிழ் படத்தில், கட்சித் தலைவர் நடித்த திருநங்கை ரோலுக்கும் இவரிடம் பேசிவருகிறார்களாம்.