திரையரங்குகளைத் தாண்டியும் இணையத்தில் மக்கள் திரைப்படங்களை ரசிக்கும் காலமிது. இணையத் திரைக்கு சமீபத்திய வரவு ‘சிகை.’

ஒரு வருடத்துக்கு முன்பே டிரெய்லர் வெளிவந்து, பெண் வேடமிட்டிருந்த கதிரின் தோற்றம் பேசப்பட்டது. தியேட்டர்களில் எதிர்பார்க்கப்பட்டு, இறுதியாக Zee5-ல் வெளியானது இந்த 95 நிமிடப் படம். ஒருநாள்; இரண்டு கொலைகள்; மூன்று நான்கு கதாபாத்திரங்களின் தேடல். இவைதாம் ‘சிகை.’

டைட்டிலின் ஆரம்பக் காட்சி களிலேயே கவனிக்க வைக்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு. சென்னை யின் பல முகங்களை அந்தச் சில நிமிடங்களிலேயே நவின்குமாரின் கேமராவும் அனுசரணின் கத்திரியும் காட்சிப்படுத்துகின்றன. அந்தக் காட்சிகள் தரும் சுவாரஸ்யத்தில் படத்தோடு உடனே ஒன்றிப்போக முடிகிறது.

பாலியல் தரகரான ராஜ்பரத், ஒரு வாடிக்கையாளருக்காக மீரா நாயரை அனுப்புகிறார். அடுத்தநாள் காலை, மீரா நாயர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று தேடப்போன இடத்தில், மீரா நாயர் மற்றும் வாடிக்கையாளர் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது. கொலை நடந்த வீட்டிலிருந்து சந்தேகத்திற்கிடமாக வெளியேறும் கதிரைப் பின்தொடரும் ராஜ் பரத், கொலைக்கான காரணத்தைக் கதிர்மூலமே கண்டறிகிறார்.

பாலியல் தொழிலாளிகளாக மீராநாயர், ரித்விகாவும், பாலியல் தரகர்களாக ராஜ் பரத், ராஜேஷ் சர்மா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆபாசமோ, விரசமோ இல்லாமல் அவரவர் உலகின் நியாயங்களோடு படமாக்கிய விதத்துக்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.

கதிரை முன்னிறுத்தி விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் படத்தில் பின்பாதியில்தான் அவர் வருகிறார். ராஜ்பரத் மிக நிறைவான நடிப்பு. அறிமுகப் படம் என்று சொல்ல முடியாதபடியான நடிப்பு மீரா நாயருடையது. படத்தில் சர்ப்ரைஸ், ‘சேட்டா’வாக நடித்திருக்கும் ராஜேஷ் சர்மா. முதல் படம் என்ற சாயலே இல்லாத அசல் நடிப்பு. ரான் யோஹானின் பின்னணி இசை, படத்தின் டெம்போவுக்கு நல்ல துணை.

கதைகளைத் தேர்வுசெய்து நடிப்பதில் கதிர் கவனமாக இருக்கிறார் என்பது ‘சிகை’ மதிவாணன் கதாபாத்திரத் திலேயே தெரிகிறது. எதையும் அட்வைஸாகத் திணிக்காமல், வசனங்களிலும், நண்பன் சந்தோஷுடனான காட்சிகளில் கதிரின் உடல்மொழியிலுமே கையாண்டிருக்கிற இயக்குநருக்கு, தன் நடிப்பின் மூலம் நியாயம் செய்கிறார் கதிர்.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியாகிறது என்று முடி வெடுத்ததும் இன்னும் கொஞ்சம் கச்சிதமாக்கியிருக்கலாம். கதையோட்டத்துடன் இருந்தாலும் மயில்சாமியின் சில காமெடிகள் ஒட்டாமல் துண்டாய்த் தெரிகின்றன. கொஞ்சம் பரபரக்கும் வேளையில் பாடல் செய்யும் தடங்கலுக்கு நாம் வருந்தவேண்டியிருக்கிறது. ‘அந்த’ இறுதிக் காட்சியின் நம்பகத்தன்மை ஏற்கும்படியாக இல்லை.

திரையரங்குகள் கிடைக்காமல் வெளிவராத திரைப் படங்களின் இயக்குநர்களுக்கு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சைட்டுகள்தாம் இனி அருளப்போகின்றன. ஓரிரு படங்கள் ஏற்கெனவே ஆன்லைனில் வெளியாகியிருந்தாலும், அவர்களுக்கு `சிகை’ கொடுக்கிற நம்பிக்கை, மிக முக்கியமானதாக இருக்கும்.

பரிசல் கிருஷ்ணா