Published:Updated:

ஒரு கடல், நான்கு நதிகள்!

ஒரு கடல், நான்கு நதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கடல், நான்கு நதிகள்!

ஒரு கடல், நான்கு நதிகள்!

ஒரு கடல், நான்கு நதிகள்!

ஒரு கடல், நான்கு நதிகள்!

Published:Updated:
ஒரு கடல், நான்கு நதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கடல், நான்கு நதிகள்!
ஒரு கடல், நான்கு நதிகள்!

இசைஞானி இளையராஜாவுடனான தங்கள் அனுபவங்கள் குறித்துப் பகிர்கிறார்கள் நான்கு தலைமுறை இயக்குநர்கள்.

ஒரு கடல், நான்கு நதிகள்!

எஸ்.பி. முத்துராமன்

‘` `ராசையா’ இளையராஜாவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ‘அன்னக்கிளி’யில் அத்தனை பாடல்களையும் எழுதியவர் எங்க குழுவில் தூணாக இருந்த பஞ்சு அருணாசலம். அதனால மத்தவங்களைக் காட்டிலும் இளையராஜாவுடன் எங்க இணைப்பும் சரி, அவரோட அணைப்பும் சரி எங்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு.

37 படங்கள்ல அவரோட பணிபுரிஞ்சிருக்கேன்.ரஜினி, கமலுடன் நான் பரபரப்பா படம் பண்ணிட்டிருந்த நாள்கள்ல ரீ ரிக்கார்டிங் பண்ண ராஜாவுடன் எனக்கு உட்கார நேரம் இருக்காது. அதனால முழுப்பொறுப்பையும் அவர்கிட்ட விட்டுட்டுப் போயிடுவேன். மறுநாள் வந்து பார்த்தா, நாம எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு திருப்தி அடையற விதமா பண்ணியிருப்பார்.

அதேபோல, ‘வாய்ப்பு கிடைக்கிற இடத்தில், திறமையை உடனடியா வெளிப் படுத்திடணும்’கிறதுக்கு ராஜா ஒரு உதாரணம். ‘அன்னக்கிளி’க்கு இசையமைக்க வந்தப்ப, மறுநாள் வாத்தியங்களோட வந்து ட்யூன் போட்டுக் காட்டச் சொல்லித்தான் அவருக்குச் சொல்லப்பட்டது. ‘நாளைக்கு எதுக்கு, இன்னைக்கு, இங்கேயே இப்பவே பண்றேன்’ என அங்கிருந்த மேஜைமீது தாளம் போட்டு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பெற்றார். இளையராஜாவின் இசையை விரும்பி ரசித்துக் கேட்கிற இன்றைய இளைஞர்கள், அவரின் இந்த வேகத்தையும் எடுத்துக்கிட்டா, வாழ்க்கையில் உயரலாம்.” 

ஒரு கடல், நான்கு நதிகள்!

பால்கி

“ராஜா என்றால் ஒரிஜினல். அவரின் இசை மட்டுமல்ல,  ஒரு மனிதராகவும் அவர் அவ்வளவு ஒரிஜினல். அவரது இசையால் ஈர்க்கப்பட்டுத்தான் நான் சினிமாவுக்கே வந்தேன்னு சொல்லலாம். எனக்கு படம் இயக்கும் வாய்ப்பு வரும்போது நான் வேற யாரையும் தேடலை. அவர் நம்பர் பிடிச்சு ‘நான் உங்க ரசிகன் சார். ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க மியூசிக் பண்ணணும்’னு கேட்டேன். அவருக்கு நான் யாருன்னே தெரியாது. ‘வாங்க  பேசுவோம்’னு  சொன்னார். நேரில் சந்திச்சுப் பேச ஆரம்பிக்கிறேன். அவரும் பேச, எனக்கு எழுந்து போகணும்னு தோணலை.  2006-ல் தொடங்கியது  இந்தப் பயணம். இன்னும் அதே ரசிகனாதான் இருக்கேன்.

‘ஃபா’ படக் குழந்தைக்கு அமிதாப் பச்சன் பாடினா நல்லா இருக்கும்னு சொன்னார். ராஜா சார் ஸ்டுடியோவுக்கு வந்து பாடக் கூச்சப்பட்டார் அமிதாப். பிறகு அவரோட பாட்டை நாங்களே ரெக்கார்டு பண்ணி அனுப்பி வெச்சோம். அந்தப் பாட்டு நிறைய தவறுகளோட இருக்கணும் என்பதுதான் அதோட ஸ்பெஷல். அதனால அமிதாப் பச்சன் ஸ்டுடியோவுக்கு வந்து பாடணும்ங்கிறதுல அவர் உறுதியா இருந்தார். பிறகு ராஜா சாரும் அமிதாப்பும் சேர்ந்து ஒரு பாட்டை எவ்வளவு தப்பா பண்ண முடியுமோ அவ்வளவு தப்பா பண்ணினாங்க. அவர் பாடல் சரியா இருக்கணும்னு அவர் உழைச்சுப் பார்த்திருக்கோம். ஆனால், அந்தப் படத்தோட காட்சிக்குத் தேவை என்பதால் அந்தத் தப்பும் யதார்த்தமா இருக்க அந்த வேலைகளைச் செய்தார் ராஜா சார்.”

ஒரு கடல், நான்கு நதிகள்!

மிஷ்கின்

“திண்டுக்கல் தீவுத்திடலில் ஒரு பொருட்காட்சி. இரவு நேரம். அப்பா என்னைத் தோள்ல தூக்கிட்டுப் போறார். அப்போ, எனக்கு வயசு அஞ்சு. பக்கத்துல வெண்திரையில ஒரு பாட்டு புரொஜக்‌ஷன் ஆகுது. நடந்துகிட்டிருந்த அப்பாவோட சட்டையைப் பிடிச்சு இழுத்து நிறுத்தி, அந்த வெண்திரையை நோக்கித் திரும்புறேன். இறக்கி விட்டுட்டார், அப்பா. அந்தப் பாட்டை நின்னு கவனிக்கிறேன். என் முதல் தாலாட்டுன்னு அந்தப் பாட்டைச் சொல்லலாம். ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல்தான் அது.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்தையும் நான் கடக்கும்போதெல்லாம், இளையராஜா என்ற இந்த மனுஷனோட இசை, ஒரு நண்பனா என் கூடவே பயணிச்சுக்கிட்டே இருக்கு. பிறகு, நான் வாசிக்கத் தொடங்கிய காலகட்டம். படிக்கிற நேரம்போக, சிந்தனை இல்லாத தருணத்துல யோசிக்கத் தூண்டி, நான் மேல்நோக்கிப் போகக் காரணமா இருந்தவர், இளையராஜா.

அவர்கூட வேலை செய்றதுன்னு முடிவாகிட்டா, அந்தக் காலகட்டத்துல உள்ள பாடல்களை நிறைய கேட்ட பிறகே, அவர் முன்னாடி போவேன். சும்மா போய் ‘எனக்கு அப்படிப் பாட்டு வேணும்; இப்படி பிஜிஎம் வேணும்’னு கேட்கிறது மரியாதைக் குறைவு. இப்போ நான் இயக்கிக்கிட்டிருக்கிற ‘சைக்கோ’ படத்துலகூட என் கதாநாயகன் ஒரு மியூசிக் கன்டக்டர். இசை இளையராஜாதான். தமிழகத்தில் கடைசி ஒரு தமிழன்தான் இருக்கிறான்னா, அவனும் இளையராஜா பாட்டைக் கேட்பான். இன்னும் ஆழமா, அழகா சொல்லணும்னா, இறக்கும் தறுவாயிலும் நான் இளையராஜா பாடலைக் கேட்டபடியே மரணிக்க விரும்புகிறேன்!”

ஒரு கடல், நான்கு நதிகள்!

லெனின் பாரதி

‘`மற்ற இயக்குநர்களை  எப்படிப் பார்ப்பார்னு தெரியல. ஆனா, என்னை ஒரு மகன் மாதிரிதான் பார்ப்பார். அவரைப் பார்த்த நாளுல இருந்து இன்னையவரைக்கும் அப்பான்னுதான் கூப்பிட்டுட்டிருக்கேன். 

என் அப்பா ரங்கசாமியும் இளையராஜா அப்பாவும் தேனி கோம்பையில் ஒரே பள்ளிகூடத்துல படிச்ச நண்பர்கள். அப்ப அங்க மாசத்துக்கு ஒரு முறை ‘மாணவர் மன்ற’ கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அது, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, பாட்டுப் போட்டின்னு மாணவர்கள் கலந்துக்குற நிகழ்ச்சி. அதுல அப்பாவும் இளையராஜா அப்பாவும் ஒண்ணா சேர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் பாட்டுக்கு ஆடிப் பாடியிருக்காங்க. அப்படி ஒரு கலைநிகழ்ச்சியில என் அப்பா ரங்கசாமி, ‘டல் டல்’னு தொடங்கிற ஒரு பாட்டுப் பாடி, பரிசு வாங்கிட்டார். அதனால அப்பாவை ‘டல்லு ரங்கசாமி’ன்னுதான் கூப்பிடுவாங்க.  பள்ளி வட்டாரத்துல இந்தப் பேரைச் சொன்னாதான் அப்பாவைத் தெரியும். 

ஒரு கடல், நான்கு நதிகள்!

பிறகு அப்பா பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு இடதுசாரி இயக்கத்துக்குள்ள போயிட்டார். முற்போக்கு நாடகங்களெல்லாம் போட்டு நடிச்சிருக்கார். அவருக்குள்ளே இயக்குநர் ஆகணும்ங்கிற ஆசை இருந்துகிட்டே இருந்தது. அதனால 1987-ல் குடும்பத்தோடு சென்னைக்கு வந்துட்டார். நிறைய இயக்குநர்களிடம் வேலை பார்த்தார். நிறைய கஷ்டப்பட்டார். இதுக்கிடையில் இளையராஜா அப்பா சினிமாக்குள்ள வந்து பெரிய இசையமைப்பாளராகிட்டார். ஆனா, எந்தவொரு நிலையிலும் இளையராஜா அப்பாவை என் அப்பா நேர்ல சந்திக்கவே இல்லை. இயக்குநர் ஆனதுக்குப் பிறகுதான் அவரைப் பார்க்கணும்னு வைராக்கியமா இருந்தார். ஆனா, கடைசிவரை அப்போவோட கனவு நிறைவேறாமலே இறந்துட்டார். அப்பா இறந்த தகவலைக்கூட இளையராஜா அப்பாகிட்ட சொல்லலை.

காலங்கள் ஓட நானும் சினிமாக்குள்ள வந்தேன். ‘அழகர் சாமியின் குதிரை’ படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்துட்டிருந்த சமயம். பாட்டு கம்போஸிங்குக்காக இளையராஜா அப்பாவை நேர்ல சந்திச்சேன். தொடர்ந்து மூன்று நாள்கள் இளையராஜா அப்பாகூடவே பாடல்கள் சம்பந்தமா பேசினேன். ஆனா, என் அப்பா ரங்கசாமி பற்றி எந்தவொரு விஷயத்தையும் நான் சொல்லலை. இயக்குநராகி இளையராஜா அப்பாட்ட பாட்டு கம்போஸிங் கேட்கிறப்பதான், ‘இன்னாருடைய பையன்’னு சொல்லணும்னு வைராக்கியமா இருந்தேன்.

அப்படியொரு சூழலில் ஒருநாள் இளையராஜா அப்பாகூட காரில்  போயிட்டிருந்தேன். டிரைவர் தவிர நானும், அப்பாவும் தனியா இருந்த சூழல்ல. ‘தம்பி உன் பேரென்ன, எந்த ஊர்’னு கேட்டார். `என் பேர் லெனின்பாரதி, ஊர் கோம்பை’ன்னு சொன்னேன். ‘கோம்பையா’ன்னு ஆச்சர்யமா கேட்டவர், ‘யாரோட பையன்’னார். ‘ரங்கசாமி பையன்’னு சொன்னேன். ‘டல்லு ரங்கசாமி பையனா நீ’ன்னு கேட்டுட்டு, ‘டேய், நானும் உங்க அப்பாவும் நெருங்கிய நணபர்கள்டா... இப்ப ரங்கசாமி எங்கடா இருக்கான்’ன்னார். ‘அப்பா இறந்துட்டார்’னு சொன்னதும் கொஞ்ச நேரம் அமைதியாயிட்டார். பிறகு அப்பா சென்னைக்கு வந்த விஷயங்களைச் சொன்னேன். ‘நீ ஏன்டா என்கிட்ட எதுவும் சொல்லலை’ன்னு ஆதங்கப்பட்டார்.

‘அழகர்சாமியின் குதிரை’ படத்துல வர்ற, ‘குதிக்குது குதிக்குது குதிரைக்குட்டி’ பாட்டை இளையராஜா அப்பா பாடியிருப்பார். ஆனா கொஞ்சம் குரலை மாற்றிப் பாடியிருப்பார். பாடி முடிச்சிட்டு,  ‘இந்தப் பாட்டைப் பாடியவர்’னு என் பேரைப் போட வேண்டாம். என் நண்பன் ரங்கசாமி பேரைப் போடுங்க’ன்னு சொல்லிட்டு, ‘சினிமாவில் தன் பேர் வரணும்னு ஆசைப்பட்டவன். அவனுக்காக என் குரலைக் கொடுக்கிறேன்’ னு சொன்னார். ஆனா சுசீந்திரன் சாரும் நானும் இளையராஜா அப்பா பேரைத்தான் டைட்டில் கார்டில் போட்டோம். பிறகு ‘ஏன்டா... இப்படிப் பண்ணுனீங்க’ன்னு வருத்தப்பட்டார்.

பிறகு ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் கதையை 2011-ல் எழுதிட்டு முதல்ல இளையராஜா அப்பாட்டதான் சொன்னேன். ‘சின்ன பட்ஜெட் படம். நீங்கதான் இசையமைக்கணும்’னு சொன்னேன். சரின்னு உடனே ஒப்புக்கிட்டார். ஆனா, 2015-ல்தான் ஷூட்டிங் போனேன். ஆனாலும் நாலு வருஷத்துக்கு முன்ன எங்கெங்க பாடல்கள் வரணும்னு சொல்லியிருந்ததை அப்படியே ஞாபகம் வெச்சிருந்தார். இது அவரோட தொழில் நேர்த்திக்கு ஒரு உதாரணம்.

இன்னைக்கு ரங்கசாமியோட மகன் லெனின் அவருடைய கனவை நிறைவேத்திட்டேன். இது எனக்கு மட்டுமான சந்தோஷம் இல்லை. என் இளையராஜா அப்பாவுக்குமான சந்தோஷமும்கூட.’’

அய்யனார் ராஜன், சனா, அலாவுதின் ஹுசைன் - படங்கள்: கே.ராஜசேகரன், வீ.சக்தி அருணகிரி, க.பாலாஜி