இந்த உலகில் கதைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். யார் எப்படி எந்த வடிவில் சொல்கிறார்கள் என்பதுதான் மாறிக்கொண்டே இருக்கும். 1994-ம் ஆண்டு, டிஸ்னி அனிமேசன் திரைப்படமாக எடுத்த `தி லயன் கிங்', இந்த ஆண்டு ஃபோட்டோரியலிஸ்டிக் அனிமேசன் திரைப்படமாக வரப்போகிறது.

ஒரு விதை செடியாகி, மரமாகி விருட்சமாகிறது. மரத்தின் பழங்களிலிருந்து விழும் விதைகள், மீண்டும் அதே இடத்தில் முளைத்து மரமாகிறது. மரத்தின் இலைகள் சருகுகளாகி, வளர்ந்த இடத்திலேயே உரமாகிறது. இயற்கை இந்த உலகையும் உயிரியல் சுழற்சியையும் சமநிலை படுத்திக்கொண்டே இருக்கிறது. ‘தி லயன் கிங்’ கதையில் வரும் சிங்க ராஜா முஃபசா, குட்டி ராஜாவான சிம்பாவுக்கு இதைத்தான் கற்றுக்கொடுக்கிறார்.

‘‘நாம் காணும் அனைத்தும் ஒரு சமநிலைக்குச் சென்றுவிடும். வளரும் ராஜாவாக நீ இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எறும்போ, மானோ... அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும்.’’ - முஃபசா.

‘‘ஆனால், நாம் மான்களைச் சாப்பிடுகிறோமே...’’ - சிம்பா.

‘‘ நாம் இறந்ததும், உடல் புதைக்கப்படுகிறது. உடல் உரமாகி புல் முளைக்கிறது. அந்தப் புல்லை மான் சாப்பிடுகிறது. நாம் மானைச் சாப்பிடுகிறோம். இதுவே உயிரியல் சுழற்சி’’ என்கிறார் முஃபசா.

ஆப்பிரிக்காவின் ஒரு காட்டை சிங்கங்கள் ஆள்கின்றன. அந்தக் கூட்டத்தின் ராஜா முஃபசா மற்றும் ராணி சரபி. இவர்களின் மகன்தான் சிம்பா.

‘‘இந்தச் சூரியனின் வெளிச்சம் எங்கெல்லாம் படுகிறதோ, அது அனைத்தும் நமது கோட்டை. ஆனால், ஒரு ராஜாவின் பதவிக் காலம், சூரியனின் தினசரி எழுச்சியும் வீழ்ச்சியும் போல மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் நான் ராஜா என்பது மறைந்து, நீ ராஜாவாக இருப்பாய்’’ என்கிறார் முஃபசா.

இது எதையும் புரிந்துகொள்ள விரும்பாத அப்பாவி பப்புவாகவே வாழ்ந்து வருகிறான் சிம்பா. முஃபசாவின் சகோதரன் ஸ்கார் மற்றும் கழுதைப்புலிகள் இணைந்து தீட்டும் சதியால், முஃபசா வீழ்ந்துவிடுகிறார். சிம்பா நாட்டைவிட்டு துரத்தி அடிக்கப்படுகிறான்.

பாலைவனத்தில் உயிருக்குப் போராடும் சிம்பாவுக்குப் பாலைவனக் கீரி மற்றும் ஆப்பிரிக்கப் பன்றியின் நட்பு கிடைக்கிறது. இப்படியே இருக்கும் இடம்தெரியாமல் ஜாலியாக இருந்துவிடலாம் என்று சுற்றித்திரியும் சிம்பாவுக்குப் போகப்போக, தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட துரோகம் புரிகிறது. பிறகு, தனது நண்பர்களுடன் சேர்ந்து இழந்த அரியணையை மீட்டெடுக்கிறான்.

‘தி லயன் கிங்’ வெளியான 25-ம் ஆண்டில், வரும் ஜூலை மாதம், இந்தப் புதிய திரைப்படம், போட்டோரியலிஸ்டிக் அனிமேஷன் திரைப்படமாக வெளியாகிறது.

2016-ம் ஆண்டு வெளியான டிஸ்னியின் ‘ஜங்கிள் புக்’ இயக்கிய ஜான் ஃப்ரீவு, இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். பழைய படத்தில் டிம் ரைஸ் எழுதி, எல்டன் ஜான் இசையமைத்த நான்கு பாடல்களையும் இதில் பயன்படுத்துகிறார்கள். பழைய படத்துக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மர், இந்தப் படத்துக்கும் இசை. சிம்பாவின் காதலியும், தோழியுமான நலாவுக்கு அமெரிக்கப் பாடகி பியான்ஸ் குரல் கொடுத்துள்ளார்.

எல்லாம் சரி, அது என்ன போட்டோரியலிஸ்டிக் அனிமேஷன்?

ஏற்கெனவே வந்த ஒரு அனிமேஷன் திரைப்படத்தை, இப்போதுள்ள தொழில்நுட்பங்களின் உதவியுடன் தத்ரூபமாக உண்மைத்தன்மை போன்று வடிவமைப்பதே போட்டோரியலிஸ்டிக்.

இப்போது வந்திருக்கும் டீசரையும், 1994-ம் ஆண்டில் வெளியான படத்தையும் பார்த்தாலே தெரிந்துவிடும். பழைய டிரெய்லரில் இருக்கும் காட்சிகளை அப்படியே தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தின்படி வடிவமைத்துள்ளார்கள்.

இன்னும் சில மாதங்களில் சுட்டிகளுக்கு அற்புதமான திரை விருந்து காத்திருக்கு!

- கார்த்தி