“கண்ணான கண்ணே” - இன்று பல அப்பாக்களின் ரிங்டோனாகவும் ஹலோ டியூனாகவும் மொபைல்களை ஆக்கிரமித்துக்கொண்டி ருக்கும் ஒரு தாலாட்டு கானம். 2012-ம் ஆண்டு வெளியான கடல் படத்தின் ‘அடியே’ பாடல் முதல் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ வரை அவர் பாடியுள்ள அத்தனை பாடலிலும் தனக்கான ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிப் பல இசை ரசிகர்களைத் தன் வசப்படுத்திவைத்துள்ளார் சித். ஆறு மாதம் சென்னை, ஆறு மாதம் அமெரிக்கா எனப் பறந்துகொண்டிருக்கும் போதே, மறுவார்த்தை பேசாதே, குறும்பா, ஹை ஆன் லவ், என சமீபத்தில் ரிலீஸான எமோஷன்கள் வழிந்தோடும், டிரெண்டிலிருக்கும் பெரும்பான்மையான பாடல்கள் இவர் பாடியவையே.

“நான் ஏற்கெனவே இமானின் இசையில் சென்ற ஆண்டு குறும்பா பாடலைப் பாடியிருந்தேன். அவரிடம் பாடும்போது எந்த வித சிரமமும் இல்லாமல் எளிதாக வேலை செய்யமுடிந்தது. அதிலிருந்தே எங்களுக்கு இடையில் ஒரு நட்புறவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் எனக்கு மெசேஜ் அனுப்பி, உடனே ஸ்டுடியோவுக்கு வரச்சொன்னார். நான் அங்கே சென்றபோது, பாடலாசிரியர் தாமரையும் இருந்தார். அப்பா-மகள் உறவு பற்றி ஒரு பாடல் இருக்கிறது. அதை நான் தான் பாடவேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொண்டனர். டியூனைக் கேட்டபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. அப்படியே ரெக்கார்டு செய்தோம். அப்படித்தான் அந்தப் பாடலுக்குள் நான் வந்தேன்.

என் சிறு வயதில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள என் தாத்தா வீட்டுக்குத்தான் எப்போதும் வெக்கேஷனுக்கு வருவோம். அப்படி ஒருமுறை இங்கே வரும்போது எங்கள் பிளாட்டுக்குக் கீழே அஜித் பட ஷுட்டிங் நடந்துகொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் உற்சாகத்தில் கூச்சல் போட்டோம். அவர் எங்களை அழைத்துப் பேசினார். பிறகு ஆட்டோகிராப் வாங்கி, படம் எடுத்துக்கொண்டோம். இப்போது இந்தப் பாடலில் நான் அவருக்கே பாடியிருப்பது அந்தச் சிறு வயது உற்சாகத்தை அதிகரித்துள்ளதாகவே கருதுகிறேன். இந்தப் பாடலுக்காக இன்னும் அவரைச் சந்திக்கவில்லை. ஆனால் சந்திக்க மிக ஆவலாக இருக்கிறது.”

அமெரிக்காவிலேயே வளர்க்கப்பட்டு ஆங்கிலத்திலேயே உரையாடுவதால், பாடும்போது தமிழ் உச்சரிப்பில் சிரமம் ஏற்படுவதில்லையா?

“பெரும்பாலும் நாங்கள் வீட்டில் தமிழில்தான் பேசிக்கொள்வோம். அதனால், தமிழில் பாடுவதில் ஏதும் கஷ்டமில்லை. அதுமட்டுமல்லாமல் சினிமாவில் பாடத்தொடங்கிய காலத்தில் தாமரை, மதன் கார்க்கி எனப் பாடலாசிரியர்களுடன் அமர்ந்து வார்த்தைகளை எப்படி உச்சரிக்கவேண்டும் எனக் கற்றுக்கொண்ட பிறகுதான் ரெக்கார்டிங்குக்கே போவேன். சினிமாவுக்கு வந்து இதோடு ஆறு வருடங்களாகிவிட்டன. மொழியை நன்றாக உச்சரிக்கப் பழகிவிட்டேன்.”

நீங்கள் பாடியதைக் கேட்டு ஹீரோக்கள் யாராவது உங்களைப் பாராட்டியிருக்கின்றனரா?

“ ‘ஐ’ படத்துக்காக ‘என்னோடு நீயிருந்தால்’ பாடலைப் பாடியிருந்தேன். அந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் என்னைப் பார்த்ததும் அப்படியே கட்டித்தழுவிப் பாராட்டினார் விக்ரம்.”

சில மாதங்களுக்கு முன் இறுதிச்சுற்று படத்தின் ஹீரோயினுக்கான ‘உசுரு நரம்புல’ பாடலை ஓர் ஆண் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என உங்கள் ஸ்டைலில் பாடினீர்கள். அப்படி சமீபத்தில் வந்த பாடல் எதுவும் நீங்கள் பாட ஆசையிருக்கிறதா?

“சென்ற வருடம் வந்த `96’ படத்தின் பாடல்கள் அனைத்தையும் ரசித்தேன். அதற்கு கவர் வெர்ஷன் பண்ணும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் அந்தப் படத்தில் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றியது.”

சினிமாவில் வரும் பாடல்களைச் சங்கீத மேடைகளில் பாடுவதுண்டா?

“பாடுவேன். ஆனால் படத்தில் வருவதை அப்படியே பாடுவதற்குப் பதிலாக அதைக் கர்நாடக சங்கீத வடிவத்துக்கு மாற்றியமைத்துப் பாடுகிறேன். உதாரணமாக, மறுவார்த்தை பேசாதே பாடலில், ஒரு கச்சேரியில் பாடுவதற்கான அத்தனை நுணுக்கங்களும் இருந்தது. அதனால் அதை ஒரு கிளாசிக்கல் வடிவத்தில் பாடினேன். அதைப்போலவே ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ பாடலையும் பாடியிருந்தேன்.”

உங்களுக்குப் பிடித்த பாடகர் யார்?

“எப்போதுமே என் மானசீக குரு ஏ.ஆர். ரகுமான்தான் எனக்குப் பிடித்த பாடகர். இன்று வரை அவர் பாடியுள்ள அத்தனை பாடல்களிலும் ஒரு தனி நேர்த்தி இருக்கும். பெண்களில் சித்ரா அம்மா குரல் தனித்துவமானது. இன்று இருக்கும் பெண் பாடகர்களில், ‘உசுரு நரம்புல’ பாடிய தீயின் குரலும் பிடிக்கும்.”

உங்கள் குடும்பத்தைப் பற்றி.

“நான் வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவின் கலிபோர்னியாவில்தான். சங்கீத சீஸனில் பாட ஆரம்பித்ததும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் என இரண்டு நாடுகளிலுமே வசித்துவருகிறேன். அப்பா ஸ்ரீராம், அம்மா லதா ஸ்ரீராம், சகோதரி பல்லவி ஸ்ரீராம் என எல்லோரும் சேர்ந்துதான் கலிபோர்னியாவில் வசிக்கிறோம். அக்கா ஒரு கல்லூரிப் பேராசிரியையாக இருந்துகொண்டே பகுதிநேரமாக பரதநாட்டியக் கலைஞராகவும் இருக்கிறார்.”

வே.கிருஷ்ணவேணி, சந்தோஷ் மாதேவன்