“சிவாஜி என்ற மகா கலைஞன் மூலமாதான் சினிமா எனக்கு அறிமுகம். அவர் படங்களும், அவருடைய நடிப்பும் எனக்குள்ளே ஏற்படுத்திய கெமிக்கல் ரியாக்ஷன்தான், நடிகன் ஆகணும்ங்கிற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனா, அதுக்கான முயற்சிகளை எடுக்கிறப்போதான், நடிகன் ஆகுறதுக்கான எந்த சாத்தியக்கூறும் எனக்கு இல்லைன்னு புரிஞ்சது. நான் அழகா இல்லை; உயரமா இல்லை; எனக்கு டான்ஸ் வராது; ஃபைட் பண்ணப் பிடிக்காது... இப்படி ஒரு நடிகனுக்கு அப்போ உருவாக்கி வைக்கப்பட்டிருந்த எந்தக் கட்டமைப்பும் என்கிட்ட இல்லை. ஆனா, சினிமா எனக்குப் பிடிக்கும்; சினிமாவுல ஒரு பிரபலமா இருக்கணும். அதுக்காக என்னை நானே சுய மதிப்பீடுக்கு உட்படுத்திக்கும்போதுதான், எனக்குள்ள இருந்த இயக்குநர் சேரன் வெளியே வந்தார்.” - 22 ஆண்டுக்காலப் பயணத்தை வார்த்தைகளில் சுருக்கித் தருகிறார், சேரன். படைப்புகளில் உணர்வுகளை உருக்கிப் பிரித்தவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘திருமணம்’ மூலம் திரும்பியிருக்கிறார்.

“22 வருடப் பயணத்துல, 11 படங்கள் இயக்கியிருக்கீங்க. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்த்தா, என்ன தோணுது?”

“சமயத்துல ஏன் சினிமாவுக்கு வந்தோம்னுகூட நினைச்சிருக்கேன். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியலை; குழந்தைகளைக் கொஞ்ச முடியலை. கிடைச்ச இடத்தைத் தக்கவைக்க, பட்ட கடனை அடைக்க, திரும்பத் திரும்ப போராடிக்கிட்டு இருந்தேன். ஆனா, ஒரு இயக்குநரா நான் என்ன பண்ண நினைச்சேனோ, அதை சரியா பண்ணியிருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கு. என்னுடைய பெரும்பாலான படங்களை மக்கள் கொண்டாடியிருக்காங்க. அதுதான், தொடர்ந்து படம் பண்ண வைக்குது.

மக்கள் வீட்டுல படம் பார்க்கப் பழகிட்டாங்கன்னு புரிஞ்சதும், ‘சி2ஹெச்’ திட்டத்தைத் தொடங்கி னேன். அந்த முயற்சியை அப்போ யாரும் புரிஞ்சுக்கல; ஆதரிக்கலை. அதுதான், இன்னைக்கு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்னு வெவ்வேற வடிவங்கள்ல இருக்கு.”

“பெரிய நடிகர் - பெரிய இயக்குநர் கூட்டணி பெரும்பாலும் நடந்திடும். உங்களுக்கு அப்படி ஒண்ணு அமையலை. எங்கே பிரச்னை?”

“பிரச்னை எதுவும் இல்லை. நான்தான் இரண்டு வாய்ப்புகளை நழுவ விட்டுட்டேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்துல விஜய் நடிக்கத் தயாரா இருந்தார். மொத்தமா தேதி கொடுக்க முடியாது, மாதத்தில் பத்து நாள்கள்னு சொன்னாங்க. ஆனா, அந்தப் படத்தை அப்படி எடுத்திருக்க முடியாது. பிறகு நானே நடிச்சேன். படத்தைப் பார்த்த விஜய் சார், ‘ரொம்ப ரசிச்சுப் பார்த்தேன். நான் இந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டேன்’னு சொன்னதோட, அடுத்த படம் நாம பண்ணுவோம்னு அட்வான்ஸும் வாங்கிக்கொடுத்தார். ஆனா, அப்போ நான் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை முடிக்காம அங்கே போகமுடியலை. ரஜினி சார் ‘பொற்காலம்’ பார்த்துட்டு, தங்கச் சங்கிலி போட்டுப் பாராட்டினார். சில கதைகளைச் சொல்லி, அதுல ஒரு கதையை விவாதிச்சுப் படம் பண்ணலாம்னு சொன்னார். என் சிந்தனை சமூகம் சார்ந்த படைப்பா இருக்கணும்னே இருந்ததனால, ரஜினி சாருக்கு என்னால கதை எழுத ரொம்பக் கஷ்டமா இருந்தது. இந்த ரெண்டு வாய்ப்பையும் தவறவிட்டது, என்னுடைய மிகப்பெரிய தவறு.”

“ ‘திருமணம்’ டைட்டிலுக்குக் கீழே... ‘சில திருத்தங்களுடன்’ கேப்ஷன்... என்ன திருத்தம் அது?”

“கல்யாணம் பண்ணி வெச்சுடணும்ங்கறதுதான் ஒரு பெற்றோருடைய வேலையா இருக்கே தவிர, அந்தக் கல்யாணத்துக்குப் பிறகு வர்ற பிரச்னைகளைத் தடுக்க என்ன பண்றதுன்னு யோசிக்கிறதில்லை. வாழ்க்கைச் சூழலை இறுக்கம் ஆக்கிக்கிற முயற்சியைப் பண்ணாதீங்க; இலகுவா மாத்திக்கப் பழகுங்கன்னு இந்தப் படம் சொல்லும். உமாபதி ராமையா, கவிதா, சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், நான் மற்றும் பலர் இருக்கோம்.”

“ ‘பாரதி கண்ணம்மா’ படம் ரிலீஸ் சமயத்துல பல சர்ச்சைகளையும் பிரச்னைகளையும் சந்திச்சீங்க. சாதியை மையப்படுத்திய இப்போதைய படங்கள் குறித்து உங்க பார்வை என்ன?”

“‘பாரதி கண்ணம்மா’ எடுக்கிறப்போ இருந்த கட்டுப்பாடுகள் இப்போ தளர்ந்திருக்கு. அந்தப் படம் ரிலீஸாகும்போது என்னால பல இடங்களுக்குப் போகமுடியலை. பல இடங்கள்ல படம் ரிலீஸ் ஆகலை. இப்போ, அதுமாதிரியான படங்களுக்குப் பெரிய போராட்டங்களோ, கிளர்ச்சியோ இல்லை. அப்படினா, மக்கள்கிட்ட ஒரு மாற்றம் உருவாகியிருக்குன்னுதானே அர்த்தம். சாதிய உணர்வு மக்களுக்குக் குறைஞ்சிருக்குன்னு நான் நம்புறேன். அதேசமயம் இன்னும் சில இடங்கள்ல சாதியப் பிரச்னைகளும் ஆணவக் கொலைகளும் நடந்துகிட்டுதான் இருக்கு. அதுவும் மாறுகிற காலம் சீக்கிரமே வரும்.”

கே.ஜி.மணிகண்டன் - படம்: தி.குமரகுருபரன்

சமூகவலைதளங்களில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சேரனின் பதில்கள்...

twitter.com/SankarTwitz: ‘ராமன் தேடிய சீதை’ எனக்குப் பிடித்த படம். அந்தப் படத்தில் நடிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது?

“என் உதவியாளர் ஜெகன் இயக்கிய படம். நல்ல கிரியேட்டர், அழகா கதை சொல்வார். இந்தப் படத்துல நடிக்கும்போது, எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஆகி, பேசாம இருந்தோம். இன்னைக்குவரைக்கும் அவர் என்கிட்ட பேசல; நான் அவர்கிட்ட பேசல. படத்தை உருவாக்கும்போது, ரெண்டுபேருக்கும் உள்ள கற்பனைப் போட்டி பகையை உருவாக்கிடுச்சு. இந்தப் படத்தை நினைச்சாலே, அதுதான் எனக்கு ஞாபகம் வருது. ஒரு நல்ல நண்பனை இழந்துட்டேன்!”

twitter.com/Punch_B : ‘ஆட்டோகிராஃப்’ மாதிரி இன்னொரு படைப்பை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா; அதில் பழைய சேரனின் தாக்கத்தைப் பார்க்க முடியுமா?

“நிச்சயம், ‘ஆட்டோகிராஃப் 2’ வரும். அதுல, இன்றைய இளைஞர்களின் காதலும் இருக்கும், சேரனின் தாக்கமும் இருக்கும்.”

twitter.com/SarvanJeyanth: குடும்பம், வாழ்வியல், உணர்வுகளை மட்டுமே மையப்படுத்திப் படங்களை எடுப்பது எப்படி சாத்தியமாகிறது?

“என் சினிமாக்கள், என் அனுபவங்கள்தான்.”

twitter.com/KalaiselvanBE1 : நீங்க இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?

“அம்மாக்களின் அர்ப்பணிப்பை, வாழ்க்கையைப் பேசிய பல படங்கள் வந்துட்டிருந்த சூழல்ல அப்பாவின் அர்ப்பணிப்பைப் பேசுற ‘தவமாய் தவமிருந்து’ எடுத்தேன். தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒண்ணுன்னு பலரும் சொல்ற இந்தப் படம்தான், எனக்கும் பிடிக்கும்.”

twitter.com/AMuthuveer: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரணை ‘பாண்டவர் பூமி’ படத்தில் நடிக்க வைத்தீர்கள். அவருக்கும் உங்ளுக்குமான பேரன்பு குறித்து ஒரு வரி?

“மதிப்பிற்குரிய அண்ணன்.”

Facebook.com/Saravanan O.A.K.R.. : எதார்த்தமான கதைகளை மட்டுமே இயக்காமல், மசாலாப் படங்களையும் இயக்கி உங்களை நிலைநிறுத்திக்கொள்ள என்ன தயக்கம்?

“நான் பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிற உங்க ஆசை நல்லது. ஆனா, அது எனக்குப் பிரச்னையைக் கொடுக்கும். என் அடையாளத்தை அழிக்கும். அதனால, வேணாம். நான் என் அடையாளத்தோட, என் பெயரோட வாழ ஆசைப்படுறேன்.”

twitter.com/RK_twitz7274: ‘தேசிய கீதம்’ மாதிரி, இன்றைய அரசியல் சூழலை மையப்படுத்தி ஒரு படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா?”

“இப்போதைக்கு இல்லை.”