Published:Updated:

`அஜித் இந்தளவுக்குப் பேசுவார்னு தெரியாது!’ - நெகிழும் இசையமைப்பாளர் டி.இமான் 

`அஜித் இந்தளவுக்குப் பேசுவார்னு தெரியாது!’ - நெகிழும் இசையமைப்பாளர் டி.இமான் 
`அஜித் இந்தளவுக்குப் பேசுவார்னு தெரியாது!’ - நெகிழும் இசையமைப்பாளர் டி.இமான் 

கதைக்கு முக்கியத்துவமளிக்கும் படங்களுக்கு மண் சார்ந்த இசையை அதிகம் வழங்கிக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இமான், தற்போது கமர்ஷியல் படங்களுக்கும் அதிகமாக இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இவர் இசையில் ஹிட்டடித்த ஆல்பம்தான் அஜித் நடித்த `விஸ்வாசம்.’ விஜய் நடித்த `தமிழன்' படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இமான், அஜித் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. இப்படத்தின் பாடல்கள் குறித்து அஜித், இமானிடம் என்ன கூறினார் என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``அடிச்சுத் தூக்கு' பாடலை நான் பாடி டியூன் அனுப்புனப்போ அஜித் சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. படத்தோட ஒட்டுமொத்த பாடலையும் ரிலீஸுக்கு முன்னாடி அவருக்கு அனுப்பினோம். அப்போ அந்த டியூன்தான் படத்துல வரப்போகுதுனு கன்ஃபார்ம் ஆகாம இருந்த நேரம்! அதுக்கப்புறம் பாடல்கள்ல இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் பண்ணி ஃபைனல் டியூனை அவருக்கு அனுப்பினோம். அதைக் கேட்டுட்டு ராத்திரி 10 மணிக்கு அஜித் எனக்குப் போன் பண்ணார். `எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. அதுக்கான தகுந்த வார்த்தை என்கிட்டே இல்லை. ரொம்ப நன்றி சார். 'கண்ணான கண்ணே' பாடல் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடலா இருக்கும்'னு சொன்னார். இந்தளவுக்கு அஜித் சார் பாராட்டிப் பேசுனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு’ என்று கூறினார் இமான்.