Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ‘உயரே’ படத்தில் நடித்துவருகிறார், நடிகை பார்வதி. தொடர்ந்து, சித்தார்தா சிவா இயக்கவுள்ள படத்திலும் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது.

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• மம்மூட்டி - ப்ரித்விராஜ் நடித்த ‘போக்கிரி ராஜா’ மலையாளப் படத்தின் அடுத்த பாகமாகத் தயாராகிறது ‘மதுரராஜா’. இந்தப் படத்தில் மம்மூட்டியுடன் ஜெய் நடிக்கிறார். இதில் பூர்ணா, மஹிமா நம்பியார் என்று இரண்டு ஹீரோயின்களாம்.

மிஸ்டர் மியாவ்

• சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களைப் பதிவிடுவது நடிகை இலியானாவின் வழக்கம். அப்படி ‘பிங்க்’ நிற உடையில் அவர் பதிவிட்டிருந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

• சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இந்தப் படத்துக்கான பணிகள் தொடங்க இருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்

• தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் 25-வது படமான ‘மஹரிஷி’யின் ஒரு ஷெட்யூலை பொள்ளாச்சியில் எடுத்துமுடித்து, ஆந்திரா திரும்பியுள்ளது படக்குழு. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படம், மே மாதம் வெளிவர இருக்கிறது. இது மகேஷ்பாபுவின் 25-வது படம் என்பதால் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவுள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

நடிகை ஆஷ்னா சவேரி

“சினிமாதான் என் கரியர்னு முடிவெடுத்த பிறகு, என் முதல் பெர்சனல் போட்டோ ஷூட் இது. அதனால, இந்தப் படம் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கம்.”

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

நடிகை ப்ரியா வாரியர்

“முதல் படம் ரிலீஸுக்கு முன்பே பாப்புலாராகிட்டீங்க. தமிழில் எப்போது படம் பண்ணப்போறீங்க?”


“இப்போ இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்துக்கான வேலைகள் போயிட்டு இருக்கு. தமிழ்ல நிறையக் கதைகள் கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன். வெயிட் பண்ணுங்க.”

சைலன்ஸ்

• உச்ச நடிகரை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநருக்கு, இப்போது செம டிமாண்டு. அரசாங்கப் பட இயக்குநரின் படத்துக்குப் பிறகு, உச்ச நடிகரை இவர் மீண்டும் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், தனக்கு ஏற்கெனவே சொன்ன அந்தக் கதையை இப்போது பண்ணலாமா எனக் கேட்டிருக்கிறாராம் ‘அசுர’ நடிகர்.

• அரசாங்க நடிகரின் படத்தில், விரல் நடிகருக்கு பதிலாக ‘180’ நடிகர் நடிக்கிறார் என்ற செய்தி வந்த நிலையில், இப்போது ‘மாப்பிள்ளை’ நடிகரிடமும் பேசிவருகிறார்களாம்.