Published:Updated:

"'மெல்லிசை’ எனக்குக் கத்துக் கொடுத்த பாடம்..!’’ - ரஞ்ஜித் ஜெயக்கொடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"'மெல்லிசை’ எனக்குக் கத்துக் கொடுத்த பாடம்..!’’ - ரஞ்ஜித் ஜெயக்கொடி
"'மெல்லிசை’ எனக்குக் கத்துக் கொடுத்த பாடம்..!’’ - ரஞ்ஜித் ஜெயக்கொடி

"`நான் அந்தக் கதையைப் பண்ணலை. வேற படம் பண்றேன்’னு சொன்னதும் `அப்போ நான் அந்தப் படத்தில் நடிக்கிறேன்’னு சொன்னார். `இல்ல தலைவா இதுல ஒரு ஹீரோதான்’னு சொன்னதும், `நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு உங்ககிட்ட சொன்னேனா… எந்த ரோலா இருந்தாலும் பரவாயில்லை’னு சொன்னார்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`` `ஆண்கள் ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்கள்…. பெண்கள் சபிக்கப்பட்ட தேவதைகள்’ வசுமித்ரவின் இந்த வரிகளிலிருந்து தொடங்கியதுதான் இந்த `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. காதலில் சமத்துவம் இல்லை; அன்பின் பெயரால் ஆதிக்கம் செய்வதோ, இல்லை விருப்பத்தின் பேரில் ஆதிக்கத்தின் கீழிருப்பதுதான் காதலா என்ற கேள்விக்கான தேடலே இக்கதை...’’ எனப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.

உங்களோட முதல் படமான `மெல்லிசை’ ரிலீஸாவதில் தாமதம்; கடைசியில் படத்தின் பெயர் `புரியாத புதிர்’ என  மாறியதுனு நிறைய பிரச்னைகள் வந்துச்சு… அதிலிருந்து நீங்க கத்துக்கிட்ட பாடம் என்ன..?

``எதுவுமே நம்ம கைல இல்லை. நம்ம வேலைகளை சரியாப் பண்ணிட்டு, அதுல இருந்து நகர்ந்து போகணும். அந்த வேலை ஏன் முடியலைனு யோசிக்கக் கூடாதுனு கத்துக்கிட்டேன். நம்மளோட வேலை கதை எழுதுறது அதைப் படமாக்குறதுனு அடுத்த கதையை எழுத ஆரம்பிச்சேன். இப்போ அது இந்தப் படத்தில் வந்து நிக்கிது.”

`இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் எப்படி உருவாச்சு..?

``அஞ்சு வெவ்வேறான கதை ஒரு புள்ளியில இணையிற மாதிரி ஒரு ஹைபர் லின்க் கதை எழுதினேன். அதுல ஒரு கதைக்கு ஹரிஷ் கல்யாணை நடிக்க வைக்கலாம்னு அவர்கிட்ட பேசினேன். அவர்கூட பேசிப் பழகுனதுக்கு அப்பறம், `இவர் ஒரு ஹீரோ மெடீரியல்; இவரை வெச்சு தனியாகவே ஒரு படம் பண்ணலாம்’னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டார். அதுக்கப்புறம் ஏற்கெனவே என்கிட்ட இருந்த ஒன்லைனை ஒரு கதையாக ரெடி பண்ணினேன். இப்படி உருவானதுதான் இந்த `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. இதில் ஹரிஷுக்கு ஒரு திமிரான கேரக்டர். 

ஹரிஷோட கேரக்டருக்கு அப்படியே நேரெதிரான ஒரு கேரக்டர் ஷில்பாவுக்கு. இந்த ரோலுக்காக 34 பேரை ஆடிஷன் பண்ணினேன். ரெண்டு விஷயத்தை மனசுல வெச்சுக்கிட்டு ஹீரோயினைத் தேடினேன். ஒண்ணு அழகா இருக்கணும்; இன்னொண்ணு இந்தப் படம் பண்ணும் போது வேற எந்தப் படத்துலேயும் வேலை பார்க்காம இருக்கணும். ஷில்பாகிட்ட இதைச் சொல்லிட்டு ஆடிஷன் பண்ணுனேன். ரொம்ப சூப்பரா நடிச்சாங்க. கமிட் பண்ணிட்டேன்.”

படத்தில் வேற யாரெல்லாம் நடிச்சிருக்காங்க..?

``மா.கா.பா ஆனந்த் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்கார். நான் முதலில் எழுதுன ஹைபர்லிங்க் கதையுல ஒரு கதையில் மா.கா.பா.வை நடிக்க வைக்கப் பேசினேன். அப்புறம் அந்தக் கதை மாறினதும் நான் அவர்கிட்ட பேசலை. ஒரு நாள் அவரே கால் பண்ணி `என்ன தலைவா ஆச்சு’னு கேட்டார். `நான் அந்தக் கதையைப் பண்ணலை. வேற படம் பண்றேன்’னு சொன்னதும் `அப்போ நான் அந்தப் படத்தில் நடிக்கிறேன்’னு சொன்னார். `இல்ல தலைவா இதுல ஒரு ஹீரோதான்’னு சொன்னதும், `நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு உங்ககிட்ட சொன்னேனா… எந்த ரோலா இருந்தாலும் பரவாயில்லை’னு சொன்னார். அப்பறம் ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர் படத்தில் இருந்துச்சு. அதில் அவரை நடிக்க வெச்சேன். படம் ஃபுல்லா ஹீரோ கூடவே இருந்து காமெடி பண்ற ரோல். அப்பறம் ’பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ், பொன்வண்ணன், பால சரவணன் நடிச்சிருக்காங்க.”

சாம் சி.எஸ் எப்படிப் பண்ணியிருக்கார்..?

``நான் உணர்வை இசையால சொல்லணும்னு நினைப்பேன். என் படங்களில் நிறைய வசனமில்லாத இடங்கள் வைப்பேன். அந்த இடங்களில் இசைக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். அதை சாம் அழகாக நிரப்புவார். இந்தப் படத்திலும் அதை அழகாகச் செய்திருக்கிறார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு