பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!

“2019 எனக்கு ரொம்ப சக்சஸ் ஃபுல்லான வருடமா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, இந்த வருடம் தீபாவளிக்கு என்  படம் ரிலீஸாகப் போகுது; விஜய் அண்ணா படத்தைத்தான் சொல்றேன். அட்லி அண்ணா விஜய்யை வெச்சு எடுக்கிற படத்துல நானும் இருக்கேன்ங்கிறது எனக்குப் பெரிய சந்தோஷமா இருக்கு’’ - உற்சாகம் தெறிக்கப் பேச ஆரம்பித்தார் கதிர். 

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!

“ ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு பொறுப்பு அதிகமாகியிருக்கு. இப்போ பலமுறை யோசிச்சே கதைகளை முடிவு பண்றேன்.  அப்படி நான்  தேர்ந்தெடுத்த படம்தான் ‘ஜடா.’  ஃபர்ஸ்ட் லுக் பார்த்துட்டு நிறைய பேர் இது ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதைன்னு நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, இதுல ஸ்போர்ட்ஸ் மட்டும் இல்லை அதையும் தாண்டி சமூகத்துக்குத் தேவையான நிறைய விஷயங்கள் இருக்கு. கொஞ்சம் அரசியலும் இருக்குன்னு சொல்லலாம்.’’

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!“படத்துல உங்க கேரக்டர் பற்றி?”

“இயக்குநர் குமரனுக்கு இது முதல் படம். ‘ஜடா’ங்கிற கேரக்டரில் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். கால்பந்து வீரனா வரேன். துணிச்சலான கேரக்டர். இயக்குநர் குமரனும் ஒரு கால்பந்து வீரர்தான். அதனால  இந்த விளையாட்டின் நுணுக்கங்கள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.  ஒரு மாதம் கால்பந்துக்காகத் தனியா பயிற்சி எடுத்துக்கிட்டேன். முக்கியமா இந்தப் படத்துல என்கூட யோகிபாபு அண்ணன் நடிக்கிறார். அவரும் ஒரு கால்பந்து வீரர். அதனால எமோஷனலா கனெக்ட் ஆகி, நிறைய டிப்ஸ் சொல்லிக்கொடுத்தார்.’’

“ ‘சிகை’ படத்தை இணையத்தில் நேரடியா வெளியிட்டதற்கு என்ன ரெஸ்பான்ஸ்?”

``இந்தப் படத்தைத் தயாரிச்சது என் அப்பாதான். பொங்கல் வெளியீடாதான் இந்தப் படத்தை டிஜிட்டல் சைட்டில் வெளியிட்டோம். தியேட்டர்களில் பொங்கல் வெளியீடாக ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’னு இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆச்சு. இருந்தும்  50,000 பேர் வரைக்கும் ஆன்லைனில் இந்தப் படத்தைப் பார்த்திருக்காங்க. சந்தோஷமா இருந்தது. ‘தியேட்டர் கிடைக்காததனால வருத்தப்பட்டீங்களா’ன்னு நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க. ஒரு வருத்தமும் இல்லை. ஏன்னா, இந்த முடிவை நான்தான் எடுத்தேன். நிறைய படங்கள் டிஜிட்டலில் வெளியாக இது ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்கும்னு நம்புறேன்.’’

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!

“ஒரு படத்துல கமிட் ஆகுறதுக்கு முன்னாடி,  கதை பற்றி யாரிடமாவது டிஸ்கஷன் பண்ணுவது உண்டா?

``என் அப்பாவுக்கு சினிமா பிடிக்கும். நான் சின்னப்பையனா இருந்தப்போ அவர் சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டிருக்கார். அதனால அவருக்கும் சினிமா நாலேட்ஜ் இருக்கு. எனக்கு வரும் ஸ்க்ரிப்ட் பேப்பரை எப்பவுமே நானும் அப்பாவும் சேர்ந்துதான் படிப்போம். கதையில இருக்கிற நிறைகுறை, சுவாரஸ்யமான விஷயம் என்னென்னன்னு எல்லாத்தையும் உட்கார்ந்து பேசுவோம். ஒரு மியூச்சுவலான முடிவுக்கு ரெண்டு பேரும் வந்துட்டா படத்துல நடிக்க ஓகே சொல்லிருவேன்.  இதுவரைக்கும் கதைகளை இப்படித்தான் செலக்ட் பண்ணியிருக்கோம். இதுதவிர சினிமாவுல என்னோட நலம்விரும்பி விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்பேன். விஜய் அண்ணா படத்துல நடிக்க வாய்ப்பு வந்தவுடனே விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கதை பற்றிச் சொன்னேன். ‘சூப்பர்டா தம்பி... இந்த வாய்ப்பை விட்டுடாதே’ன்னு சொன்னார்.’’

யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!

விஜய் படத்தோட வாய்ப்பு எப்படி வந்தது?

``அட்லி அண்ணா குடும்ப நண்பர். அவர்கிட்ட படங்கள் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்குவேன். ஒருமுறை அட்லி அண்ணா போன் பண்ணி, `உன்னைப் பார்க்கணும். ஆபீஸுக்கு வா’ன்னு கூப்பிட்டு, ‘தம்பி... நீ விஜய் சார் படத்துல நடிக்கணும்’னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஏன்னா, இப்படியொரு வாய்ப்பு அமையாதான்னு ஏங்கியிருக்கேன். சினிமாவுக்கு நடிக்க வந்து ‘மதயானைக்கூட்டம்’ படத்தோட ஷூட்டிங் கோயம்புத்தூர்ல நடந்துட்டிருந்தப்போ, விஜய் அண்ணாவுடைய படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கிறதுக்காக அடி, உதையெல்லாம் வாங்கி ரசிகர்கள் மத்தியிலே கத்திக்கிட்டு படம் பார்த்திருக்கேன். அப்படிப்பட்ட எனக்கு விஜய் அண்ணா படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது பெரிய வரம்தான். அதுவும் படத்துல முக்கியமான கேரக்டர்  அட்லி அண்ணா கொடுத்திருக்கார். படத்தோட முதல் நாள் ஷூட்டிங்கின் போது விஜய் அண்ணா, என்னை ‘தம்பி’ன்னு அழைச்சு, அன்பா நிறைய விஷயங்கள் பேசினார்; வாழ்த்துகள் சொன்னார். விஜய் அண்ணா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள வந்துட்டாலே அந்த இடம் முழுக்க பாசிட்டிவ் வைப்ரேஷன்குள்ள போன மாதிரி இருக்கும்.

விஜய் அண்ணா முன்னைவிட இப்போ இன்னும் அழகா இருக்கார். ஸ்க்ரீனில் ஒரு விதமான மேஜிக் அவர் பண்றார். அதை கிட்ட இருந்து பாக்குறப்போ செமையா இருக்கு. ஒரு சின்னப் படபடப்பு அவரோடு நடிக்கிறப்போ எட்டிப்பார்த்துச்சு. அப்புறம் அவரே என்னை கூல் பண்ணிட்டார். என்னோட படங்களெல்லாம் பார்த்திருந்தார். அது பற்றியெல்லாம் நிறைய பேசினார்.’’

சனா