பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்

நாயகிக்கு நாயகன் ஜோடிகார்டாக மாற, நாயகியின் பாடிகார்டான மோகினிப் பிசாசு குறுக்கே நிற்கிறது. அதை திகிலோடு தில்லாக சமாளிப்பதே `தில்லுக்கு துட்டு - 2’.

தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்

வெள்ளை விஜியாக சந்தானம். ஏரியாவையே அலறவைக்கும் அராத்து ஆட்டோ டிரைவர். சரக்கு உள்ளே போனால் `நீ என்ன வேணா பேசு, எல்லாத்துக்கும் என்னான்ட கவுன்டர் இருக்குது’ என ஃப்ரேமில் இருக்கும் எல்லோரையும் பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்துக் கதறவிடுகிறார். சந்தானம் கலாய்ப்பதற்கென்றே அளவெடுத்து உருவாக்கியது போல், செகண்ட் ஹீரோ `நான் கடவுள்’ ராஜேந்திரன். இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் `குபீர்’ ரகம். குறிப்பாக, கேரள அத்தியாயங்கள் செம சாரே!

கொஞ்சமே கொஞ்சம் வரும் ஊர்வசி, ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன’ எனக் கெஞ்ச வைக்கிறார். நாயகியின் பாத்திரத்தைவிட, பேயின் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். பாவம், ஸ்ரீதா சிவதாஸ். பிபின், டி.எம்.கார்த்திக், ராமர், தனசேகர், சிவசங்கர் என காமெடி நடிகர்களுக்கும் காமெடிகளுக்கும் பஞ்சமில்லை!

`தில்லுக்கு துட்டு - 2’ படத்தின் பெரும்பலம், வசனங்கள். ரைமிங், டைமிங் கவுன்டர்களால் நிரம்பிவழிகிறது. காட்சிகளாகவும் பல இடங்கள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. ஸ்பூஃப் ஏரியாக்களில் இப்படிக்கா போய், அப்படிக்கா வந்திருக்கிறார் இயக்குநர் ராம்பாலா.

தில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்பெண்களின் உடலைக்கொண்டும், மூன்றாம் பாலினத்தவர்களை வைத்தும் செய்யும் காமெடிகளுக்கு கண்டனங்கள்.  18+ காமெடிகளும் வந்துபோகின்றன. ஒரு இடத்தில் சென்ஸார் போர்டையே ஏமாற்றியிருக்கிறார்கள்.

கல்தோன்றா மண்தோன்றா காலத்தே திரைக்கதை; க்ளிஷேவான காட்சிகள்...ஆனாலும், காமெடி பக்கங்கள் படத்தைக் காப்பாற்றுகின்றன. காமெடியும் இரண்டாம் பாதியின் ஆரம்பக்காட்சிகளில் சற்றுத் தொய்வடைந் தாலும், பிறகு பிக்கப் ஆகிவிடுகிறது. சபீரின் இசையில், பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் புதுமை ஏதுமில்லை. தீபக் குமாரபதியின் ஒளிப்பதிவு, க்ளீன். சி.ஜி காட்சிகள் `ஓகே.’

`தில்லுக்கு துட்டு - 2’ சிரிப்புக்கு கேரன்டி!

- விகடன் விமர்சனக் குழு