Published:Updated:

புழலில் பவர் ஸ்டார்; திகிலில் ஷங்கர், ராம நாராயணன்!

புழலில் பவர் ஸ்டார்; திகிலில் ஷங்கர், ராம நாராயணன்!
புழலில் பவர் ஸ்டார்; திகிலில் ஷங்கர், ராம நாராயணன்!
புழலில் பவர் ஸ்டார்; திகிலில் ஷங்கர், ராம நாராயணன்!

பல வருடங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘ஜக்குபாய்’ படத்தின் விளம்பரம் வந்தது. அதில் ‘எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் இறைவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பற்று...’ என்று சூப்பர் ஸ்டார் சொல்லி இருப்பார்.

அதுபோலவே கைதாகி தற்போது புழல் சிறையில் இருக்கும் சீனிவாசன், சமீபத்தில் கோர்ட்டுக்கு வந்து திரும்பியபோது ‘நண்பர்களை நம்பி மோசம் போய்விட்டேன்...’ என்று சூப்பர் ஸ்டார் போலவே சொல்லி இருக்கிறார்! (ரஜினி மன்னிப்பாராக)

அந்த நண்பர்கள் யார் யார்?

பவர் ஸ்டாரின் நிழலாக இருந்த செந்தமிழரசுவிடம் கேட்டோம்."டாக்டருக்கு தனிப்பட்ட முறையில், தொழிலில், சினிமாவில் என்று ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் அவர் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை’’ என்று கையை விரிக்கிறார்!

பவர் ஸ்டார் திடீரென கைதானதில் அவரைவிட அதிர்ச்சியில் உறைந்து போனவர்கள் இருவர்! ஒருவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், இன்னொருவர் லோ பட்ஜெட் திலகம் ராம நாராயணன்!

முதலில், சீனிவாசன் கொஞ்சம் பந்தா பேர்வழி என்றுதான் ஷங்கர் நினைத்து இருந்தார். பின்னர் 'அவர் ஒரு கோமாளி; அவரால் ‘ஐ’ படத்துக்கு எந்த பிரச்னையும் வராது' என்கிற மனோபாவத்தில் சீனிவாசனை ஒப்பந்தம் செய்தார். ஒருவழியாக சீனி நடிக்கும் காட்சிகளை எல்லாம் படமாக்கி விட்டார். டப்பிங் வேலை முடியும் முன்னரே கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார், சீனி! பிரபலமான நடிகர்களின் குரல் என்றால் யாராவது மிமிக்ரி செய்பவர்களை கொண்டு பேசிவிடலாம். பவர் ஸ்டார் குரலில் பேசுவது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்!

##~~##
அடுத்து, ராம நாராயணன் கதிதான் அதோகதி! ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துக்கு மானாவாரியாக கமர்ஷியல் ரிசல்ட் வரும்போதே படக்கென்று பவர் ஸ்டாரை தனது அடுத்த புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ராமு! அந்த படத்துக்கு முதலில் ‘நான் சரக்கு நீ ஊறுகாய்’ என்று டைட்டிலும் வைத்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, இப்போது ‘ஆர்யா சூர்யா’ என்று பேர் மாற்றியிருக்கிறார்!
இப்போது திடீரென பவர் ஸ்டார் கைதானதில், திகைப்பில் திக்குமுக்காடி போயிருக்கிறார் நாராயணன்! ஏப்ரல் கடைசி வாரத்தில் ‘ஆர்யா சூர்யா’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார். இப்போது படத்தின் மொத்த பிசினஸும் என்ன ஆகப்போகிறதோ என்கிற பதற்றத்தில் தவித்து வருகிறார், ராம நாராயணன்!
- எம். குணா