Published:Updated:

காதல் ’96

காதல் ’96
பிரீமியம் ஸ்டோரி
காதல் ’96

காதல் ’96

காதல் ’96

காதல் ’96

Published:Updated:
காதல் ’96
பிரீமியம் ஸ்டோரி
காதல் ’96
காதல் ’96

னைவி, தனலட்சுமி. மகள், சாலை வேதா. இவர்களுக்குத் துணையாகக் காலா, க்யூட்டி, டைகர், த்ரிஷா என ஒரு டஜன் பூனைகள். அன்பும் ஆனந்தமும் விளையாடுகிற வீடு அது. மனிதருக்கு இயற்கைதான் காதல் என நினைத்தால், இயற்கையான குணமே காதல்தான். பன்முகக் காதலனாக இருக்கிறார், ஒளிப்பதிவாளரும் ‘96’ படத்தின் இயக்குநருமான பிரேம்குமார்.     

காதல் ’96

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வைல்டு லைஃப் போட்டோ கிராபர் ஆகணும்னு ஆசைப்பட்டு, அல்போன்ஸ் ராய் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். அவங்க பொண்ணுதான் தனலட்சுமி. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சப்போ, தனா எனக்கு ஜூனியர். பெருசா அறிமுகம் இல்லை. பிறகு, பிடிச்சிருக்குன்னு சொல்லிடலாம்னு முடிவு பண்ணித்தான் பழக ஆரம்பிச்சேன். குருவோட வீட்டுல அவங்க பொண்ணை அப்ரோச் பண்றது பெரிய விஷயம். கேர்ஃபுல்லா இருந்து, புரபோஸ் பண்ணேன். காதலைச் சொல்லி இவங்ககிட்ட இருந்து பதில் வர மூணு நாள் ஆச்சு. முதல்நாள் நம்பலை; ரெண்டாவது நாள் ஜுரம்; மூணாவது நாள்தான் ஓகே சொன்னாங்க” எனச் சிரிக்கிறார், பிரேம். 

மேலும் சுவாரஸ்யம் சேர்த்தார், தனலட்சுமி. “இயக்குநர் பாலாஜி தரணிதரன் அண்ணா, பிபிசி கேமராமேன் ஜாய்சன் அண்ணா... இந்த ரெண்டுபேர்தான் இவருக்குத் தூது. அப்பாகிட்ட கதை சொல்ல வர்ற மாதிரி பாலாஜி அண்ணா வர, அவர்கூட வந்த ஜாய்சன் அண்ணா ‘பிரேம் உன்னைக் காதலிக்கிறான்; நீயென்ன சொல்ற?’ன்னு கேட்டார். நான் சீரியஸா எடுத்துக்கலை. மறுநாள் என் தங்கச்சி பிறந்தநாளைக்கு எல்லோரும் வந்திருந்தாங்க. ‘பதில் சொல்லமாட்டியா?’ன்னு பிரேம் கேட்க, அப்போதான் இவர் சீரியஸாதான் கேட்கிறார்னு தெரிஞ்சது. அன்னைக்குத்தான் எனக்குக் காய்ச்சல். பிறகு நானே பேசணும்னு இவரைக் கூப்பிட்டேன். பயத்தோடயே உட்கார்ந்திருந்தார். ‘உங்களுக்கு ஓகேனா, எனக்கும் ஓகே’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார் தனலட்சுமி.

“நாங்க லவ் பண்றது, எங்க வீட்டுல தெரிஞ்சு போச்சு. ஒடிசாவுல ஷூட்டிங் போயிருந்த அப்பா, இதைப் பெருசா எடுத்துக்கலை. அம்மாதான், திட்டினாங்க. அதனால, வீட்டை விட்டுக் கிளம்பி வந்துட்டேன். இவர் ரொம்பவே பயந்துட்டார். என்ன பண்றதுன்னு தெரியாம, இவரும் ‘96’ படத்தோட காஸ்டியூம் டிசைனர் சுபஸ்ரீயும் சேர்ந்து, பிலிம் இன்ஸ்டிட்யூட் பக்கத்திலேயே ஒரு ஹாஸ்டல் பார்த்துக் கொடுத்தாங்க. அப்புறம் நான் படிச்சேன், அவர் கேமராமேனா வொர்க் பண்ணிக்கிட்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே வந்து நாலு வருடம் கழிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்குப் பிறகு வேற வழியே இல்லையே... ரெண்டுபேர் வீட்டுலேயும் எங்க காதலை ஏத்துக்கிட்டாங்க!” என முடிக்க, பிரேம் தொடர்கிறார்.

“கல்யாணம் பண்ணினப்போ நான் உதவி ஒளிப்பதிவாளர். சம்பளம் ரொம்பக் கம்மி. ஹனிமூனுக்குக் கொடைக்கானலுக்கு பஸ்ஸுல போகும்போதுதான், ‘உங்களை கேமராமேனா புக் பண்ணணும்’னு போன் வந்தது. ‘மூணு நாள்ல சென்னைக்குத் திரும்புவேன்’னு அவங்களுக்குப் பதில் சொல்லிட்டேன். அதுதான், நான் வேலை பார்த்த ‘வர்ணம்.’ இந்தப் படத்துல முக்கியமான ஒரு கேரக்டர்ல நடிச்ச விஜய் சேதுபதி அப்போதான் எனக்குப் பழக்கம்.  

காதல் ’96

காதலிக்கும்போது, நிறைய சிறுகதைகள் எழுதுவாங்க தனா. ஒரு கதையில மனைவி வீட்டு வேலைகளையெல்லாம் முடிச்சுட்டு, தான் எழுதுன கதையை அம்மா, அப்பாவுக்குப் படிக்கச் சொல்லிட்டு, வேகமா கெளம்பிப் போவாங்க. போறது, ஒரு திரையரங்கம். அங்கே படம் முடியிறப்போ, ‘எ பிலிம் பை பிரேம்குமார்’னு எழுத்துகள் ஓடும். ஆடியன்ஸ் உட்கார எக்ஸ்ட்ரா சீட் எல்லாம் போட்டி ருப்பாங்க. அதையெல்லாம் பார்த்து, தனா சந்தோஷப்படுற மாதிரி அந்தக் கதை முடியும். இந்தக் கதையைப் படிக்கிறப்போ, ‘நாம கேமராமேன் ஆக கஷ்டப்படுறோம். தனா, இயக்குநர்னு எழுதி சந்தோஷப்படுறாளே’ன்னு நினைச்சேன். ஆனா, தனா எழுதியது ‘96’ மூலமா நடந்திடுச்சு” எனச் சொல்லி, தனாவைப் பார்க்கிறார் பிரேம்.  

காதல் ’96

“ரொம்ப டீப்பா லவ் பண்ணிக்கிட்டி ருக்கிறப்போ, எங்களுக்குள்ள நிறைய சண்டை வரும்; லவ்வும் ஜாஸ்தியா இருக்கும். ஹாஸ்டல்ல நைட்டு கோபமா இருந்தா, சந்தோஷமா இருந்தா, தூக்கம் வரலைனா... இவருக்குத்தான் போன் பண்ணுவேன். நான் தூங்குறதுக்கு ராமாயணம், மகாபாரதம்னு சின்னச் சின்னக் கதையா நிறைய சொல்வார். அவர் கதை சொல்ற விதம் ரொம்ப அழகா இருக்கும்; நானும் தூங்கிடுவேன். எனக்கு டைரி எழுதுற பழக்கும் இருக்கு. வாரா வாரம் வெள்ளிக்கிழமை இவர் என்னைப் பார்க்க ஹாஸ்டல் வருவார். அவருக்காகக் காத்திருந்த சமயத்துல ஒருநாள் எழுதியது தான், அந்தக் கதை. தெரியல... பிரேம் ஒரு படமாவது இயக்கணும்னு எனக்கு ஒரு ஆசை. நான் அந்தப் படத்தைப் பார்க்கும்போது, தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கணும். பழைய இரும்பு சேர் போட்டு, எக்ஸ்ட்ரா பலபேர் அந்தப் படத்தைப் பார்க்கணும்னு அந்தக் கதையில எழுதியிருந்தேன். ‘96’ படம் மூலமா, நான் எழுதுனதுல 96% நடந்திருக்குன்னுதான் சொல்லணும்” நெகிழ்கிறார், தனா.

“சரி... இந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எபிசோடு சொல்லுங்களேன்?!”


“நான், பாலாஜி, பக்ஸ், சரஸ்... எல்லோரும் வாரா வாரம் விளையாடப் போவோம். எங்க கல்யாணத்துக்குப் பத்துநாள் முன்னாடிதான், எனக்கு அப்படி ஒரு விபத்து நடந்தது. அதைக் கதையா எழுதி முடிக்கிறவரைக்கும், தனாவுக்கு அந்தச் சம்பவம் தெரியாது. வேதா பிறந்தப்போ, பாலாஜிதான் திடீர்னு இந்தக் கதையை தனாகிட்ட சொல்லி, ‘இதைத்தான் நாங்க படமா பண்ணப்போறோம்’னு சொல்லிட்டார். இந்த விஷயத்தை இவ்ளோ நாள் மறைச்சதுக்காக, தனா பாலாஜிகிட்ட பேசலை” என பிரேம் முடிக்க, தனா மிச்சத்தைச் சொல்கிறார்.

“இவருக்கு நடந்த விபத்து, கல்யாணத்துக்குச் சிலநாள் முன்னாடியே சரி ஆகிடுச்சு. ஆனா, படத்துக்காக அந்தக் கதையை த்ரில்லிங்கா எழுதியிருந்தாங்க. இப்போவும் வீட்டுக்கு இவர் லேட்டா வந்தார்னா, நான் பயந்திடுவேன். சரஸ், பாலாஜி எல்லோருக்கும் போன் பறக்கும். இந்த விஷயத்தை மறைச்சதனால, பாலாஜி அண்ணாவை ரூம்ல வெச்சுப் பூட்டினேன்.” தனாவின் சிரிப்பைக் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டி ருந்தார், மகள் சாலை வேதா.

அலாவுதின் ஹுசைன் - படங்கள்: தே.அசோக்குமார்      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism