‘கயல்’ சந்திரமெளலி, அஞ்சனா இருவரின் காதல் வாழ்க்கையில் இப்போது ஒரு குட்டி இளவரசன்.

‘`இப்போ நினைத்தாலும் அந்த நிமிடங்கள் சிலிர்ப்பாதான் இருக்கு. அஞ்சனாவுக்கு டெலிவரி நடக்கும்போது என்னை பிரசவ அறைக்குள் அனுமதித்தார்கள். என் கண்ணெதிரே என் மகன் பிறந்ததைப் பார்த்தேன். அவனை முதலில் என் கையில்தான் கொடுத்தார்கள். அப்படியே ஓடிப்போய் என் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டேன். அம்மாவுக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல், ஆனந்தக்கண்ணீரால் என்னைத் தேற்றினார்கள். அப்போ இருந்த அன்பைவிட, அஞ்சனாவின் மேல் இன்னும் அதிகமாகியிருக்கு’’ என்று பரவசமாகிறார் சந்திரன்.

‘`அஞ்சனாவை மறுபடியும் விஜே-வாகப் பார்க்கலாமா?’’

‘`அஞ்சனாவுக்கு மறுப்பு சொல்ல நான் யார்?! என் மனைவி ஆனபின், அவங்க ஆசைகளுக்குத் தடைபோட எனக்கு எந்தவிதத்திலும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அவளுடைய உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பவன் நான். கண்டிப்பாக அஞ்சனாவை மறுபடியும் விஜே-வாகப் பார்க்கலாம்’’ என்றவரைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா, தொடர்ந்தார்.

“என் பத்து வயதிலேயே அப்பா காலமாகிட்டார். அதனால் அப்பாவின் அன்பிற்காக நான் பல தருணங்களில் ஏங்கியிருக்கிறேன். அப்படி அப்பாவின் ஒட்டுமொத்த அன்பு, அரவணைப்பு, அக்கறை எல்லாமே இவர் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது’’ என்று சொல்லும்போதே அஞ்சனாவின் கண்களில் ஈரம் மின்னுகிறது.

‘`நடிக்கமாட்டேன் என்கிற பிடிவாதத்தில் இருக்கிறீர்களே... உங்கள் கணவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால்?’’

‘`இப்போதும் அதையேதான் சொல்கிறேன். நிச்சயமாக நடிக்கமாட்டேன். இவரும் என்னைக் கட்டாயப்படுத்தமாட்டார். எனக்கு இதுவே போதுமான நிறைவைத் தருகிறது. என் குழந்தைக்கான தேவைகளைக் கூடுமானவரை கொடுத்துவிட்டுத்தான், என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க வேண்டும்.’’

‘`ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எப்போதும் பிஸியாக உங்களுடைய லைவ் படங்களைப் பதிவிட்டுக்கொண்டே இருக்கிறீர்களே?”

‘`ஹாஸ்பிடல் போறதுல இருந்து ஷாப்பிங் வரை பலரும் என்னை அடையாளம் கண்டு, ‘எப்போ மறுபடியும் வருவீங்க. உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம்’னு கேட்கிறார்கள். அவங்களுக்காகவே மிஸ் பண்ணாம, நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் போட்டோவை அப்லோடு பண்றேன்.”

‘`உங்களுடைய காதல் சின்னம்?’’

“கண்டிப்பாக, எங்க மகன்தான்! இவருக்கு சிவனை ரொம்பப் பிடிக்கும். அதனால, குழந்தைக்கு ‘ருத்ராக்ஷ்’ என்ற பெயரை வைத்தோம். அப்பா சாயல்ல இருக்கான் அவன். இப்போதே செம வாலு!”

‘`என்ன திடீரென்று பெயர் மாற்றம்?” - இது, சந்திரமெளலிக்கான கேள்வி.

‘`என் ஒரிஜினல் பெயரே சந்திரமௌலிதான். ‘கயல்’ படத்திற்காக சந்திரன் என வைத்தார்கள். என் ஒரிஜினல் பெயரோட இருப்போம்னு நினைத்தேன். வேறெந்தக் காரணமும் இல்லை.”

வே.கிருஷ்ணவேணி