Published:Updated:

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2
பிரீமியம் ஸ்டோரி
பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

ஓவியங்கள்: அரஸ்

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

ஓவியங்கள்: அரஸ்

Published:Updated:
பார்ட் பார்ட்டா - பார்ட்- 2
பிரீமியம் ஸ்டோரி
பார்ட் பார்ட்டா - பார்ட்- 2
பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

தேர் போல் கம்பீரமாக இருந்த படங்களை எல்லாம், ‘பார்ட் 2’ என்ற பெயரில் இழுத்துத் தெருவில் விட்டுக் கொண்டிருக்கிறது கோலிவுட். இனி இந்த அவலநிலை தொடரக்கூடாது எனும் அக்கறை உணர்வோடு, அடுத்தடுத்து ‘பார்ட் 2’ வர சாத்தியமுள்ள சில படங்களுக்குக் கதை யோசித்திருக்கிறோம்...  பார்த்து பண்ணிவிடுங்க!   

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரகாட்டகாரன் - 2

மு
த்தையா தொட்டுத் தொட்டு விளக்கி வெச்ச வெங்கலத்து அண்டா, காமாட்சியின் தலையில் விழ, காலமாகிவிடுகிறார். அந்த விரக்தியிலிருந்து வெளியேற, நண்பர்கள் ‘தவில்’ தங்கவேலு மற்றும் நாதஸோடு பாங்காங் சென்று கூலாகிறார் முத்தையா. பார்ட்டி, பீச், பிகினி என பாங்காக்கை ரவுண்டு அடிக்கையில் ‘டான்ஸ் காம்படிஷன்’ போஸ்டர் ஒன்றைப் பார்க்கிறார்கள். தன் வாழ்க்கையையே நடனத்திற்காக அர்ப்பணித்துவிட்ட முத்தையா, அதில் கலந்துகொள்கிறார். இங்கதான் டிவிஸ்ட், அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவர், வேறு யாருமல்ல, முன்னாள் சினிமா நடிகை சொப்பனசுந்தரி! தனது காரை ஈயம், பித்தளைக்குப் போட்டுப் பேரீச்சம்பழம் வாங்கித் தின்றதில், சேந்தம்பட்டி முத்தையன் குழுமீது கொலை காண்டில் இருக்கும் சொப்பனம், அதற்காகப் பழிவாங்க நினைக்கிறார். ஊர் தர்மகர்த்தா சந்தான பாரதியும் இப்போது தேசியக் கட்சி ஒன்றில் தலைவராய் இருக்கிறார். இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு முத்தையா எப்படி, அந்தச் சரகத்துலேயே கரகத்தில் நான்தான் டாப்பு, மீதியெல்லாம் டூப்பு என நிரூபிக்கிறார் என்பதே கதை. எ வெங்கட்பிரபு ஆட்டம்!

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

வானத்தைப்போல - 2

ந்த ‘வானத்தை போல’ முதல் பாகத்தைப் போல பேமிலி சென்டிமென்ட் டிராமா அல்ல. இது சைக்கோ த்ரில்லர் கதை! முதியவரான பின்னும் தான் முரட்டு சிங்கிளாகவே இருப்பதை நினைத்து மூர்க்கமாகிறார் வெள்ளைச்சாமி. இப்படி வாழ்க்கை பூராம் டெய்லர் கடையில உட்கார்ந்து துணி தைச்சு வாங்கியே வீணாப்போச்சே எனக் கண்கள் சிவக்கிறார். இதனால், தன் தம்பிகளும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடக்கூடாதென எப்படியெல்லாம் பழிவாங்குகிறார் என்பதே கதை. ஒரு தம்பி டாக்டர், இன்னொரு தம்பி போலீஸ் என்பதால் திரைக்கதையில் இப்படிக்கா போய் அப்படிக்கா வரலாம். வெள்ளைச்சாமி தன் கரகர குரலில் ‘மைனாவே மைனாவே இது என்ன மாயம்’ எனப் பாடிக்கொண்டே ஒவ்வொரு தம்பிக்கும் பீஸ் பிடுங்க நினைக்கிறார். அதைத் தம்பிகள் எல்லோரும் எப்படி சேர்ந்து பாசத்தை மட்டுமே ஆயுதமாய் வைத்துத் தடுக்கிறார்கள் என்பதாக நகர்கிறது. செக்கச்சிவந்த வானத்தைப் போல!

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

வீராசாமி - 2

வீ
ராசாமியின் முன்கதைதான் வீராசாமி 2! ‘வெச்சிருக்கேன் உன்னை வெச்சிருக்கேன்’ எனக் காதலில் உருகிய சரசு-சாமி ஜோடியின் கள்ளங்கபடமற்ற காதல், வீராசாமியின் தாடியைப் போலவே அவரோடு ஒட்டிக்கிடக்கும் அரசியல், பட்டாபட்டி டவுசர் போட ஆரம்பித்த காலம், தங்கை செந்தமிழின் குழந்தைப் பருவமென வீராசாமி ஏன் அப்படியொரு கண்றாவியான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்கான காரணங்களைக் காட்சிகளில் அடுக்குகிறோம்.  15 பாடல்களுக்கு இடையே படத்தைக் கொஞ்சம் செருகி, 15 கோடிக்குப் பெரிய பட்டாப்பட்டி டவுசர் செட் போட்டு கெத்து கிளப்பினால், டி.ஆர்க்கு முரட்டு கம்பேக்காக அமையும். இதை பைலிங்குவலாக எடுத்து பாலிவுட்டிலும் மாஸ் காட்டலாம். வந்தா வீராசாமியாதான் வருவேன்!

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

பாபா - 2

‘பா
பா’ படத்தின் இறுதிக்காட்சியில் ஆன்மிகத்தின் பக்கம் திரும்புவதா, அரசியலின் பக்கம் திரும்புவதா எனக் குழம்பி நின்று அரசியல் பக்கம் திரும்புவார் பாபா. இரண்டாம் பாகத்தின் முதல் காட்சியிலேயே, ஆன்மிகம் பக்கம் திரும்புகிறார். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் அரசியல் பக்கம் திரும்புகிறார். இப்படியே, படம் முழுக்க மாறிமாறி திரும்பித் திரும்பி நிற்கிறார், அவ்வளவுதான்! என்னது, கடைசியா எந்தப் பக்கம் திரும்புவாரா? ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம். அதனால், சரியாகச் சொல்ல இயலாது. வாழ்க்கை ஒரு சினிமா, சினிமா..!

பார்ட் பார்ட்டா - பார்ட்- 2

சூர்யவம்சம் - 2

ரசியல்தான் சமீபத்திய டிரெண்ட் என்பதால், ‘சூர்யவம்சம் 2’-ஐ அரசியல் படமாக மாற்றுகிறோம். தாடி வெச்ச மோடி பிரதமராகும்போது, தாடி வெச்ச நான் முதல்வர் ஆகக்கூடாதா என நிஜவாழ்க்கையில் பேசி அரசியல் உலகில் அதிர்வலையை உண்டாக்கியிருக்கிறார் சரத்குமார். இதையே கதையாக மாற்றுகிறோம். சின்ராசு முதல்வராகும் கனவில் தாடி வளர்க்கிறான். இதைப் பார்க்கும் சின்ராசின் மனைவி நந்தினி, “தாடி வெச்சவங்கதான் முதல்வர், பிரதமர் ஆகணும்னா, பெண்கள் எங்க போறது” எனப் பெண்ணியம் பேசுகிறாள். இத்தோடு நிப்பாட்டாமல் மனதில் வன்மத்தை வைத்துக்கொண்டு, தினமும் சின்ராசுக்கு, கறிவேப்பிலையை அள்ளிப்போட்டு இட்லி உப்புமாவே ஆக்கிப்போடுகிறாள். இப்படி தினமும் இட்லி உப்புமா திங்குறதுக்கு, தர்மலிங்கத்துகிட்டே பாய்சன் கலந்த பாயசத்தை வாங்கிக் குடிச்சிடலாம் எனும் முடிவுக்கு வருகிறான் சின்ராசு. வீட்டிலிருந்து வெளியேறி முதல்வராகும் முயற்சியில் இறங்குகிறான். நந்தினியும் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதிக்கிறாள். இறுதியில் யார் முதல்வர் ஆகிறார் என்பதே கதை.

ப.சூரியராஜ்    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism