
அறிமுக நடிகைகளின் முதல் காதல் அனுபவம்!

ப்ரியா வாரியர்
கண்ணடித்ததன் மூலம் பல கண்களைக் கவர்ந்து இழுத்தவர் ப்ரியா வாரியர்.
“ ‘ஒரு அடார் லவ்’ படத்தோட டீஸர் வெளியானதும், பல ரசிகர்கள் என்னை சமூக வலைதளத்துல தேட ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்குப் பிறகு பல காதல் கடிதங்கள் எல்லாம் வருது. ஆனா, என் முதல் காதல் வேற! ஏழாம் வகுப்பு படிச்சப்போ வந்த காதல் அது. கூட படிச்ச அந்தப் பையனை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நான்தான் புரபோஸ் பண்ணினேன். அந்தக் காதல் எப்படி பிரேக்கப் ஆச்சுன்னுகூட எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குப் பிறகு இப்போவரைக்கும் ஒரு காதல்கூட என் வாழ்க்கையில கிராஸ் ஆகலை. ஆனா, பண்ணுனா லவ் மேரேஜ்தான் பண்ணுவேன்’’ எனச் சிரிக்கிறார், ப்ரியா வாரியர்.
இப்போ கேரளாவே உங்களை லவ் பண்ணுமே!

அய்ரா
‘`பிறந்து வளர்ந்தது சென்னைதான். சென்னைப் பசங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்கிறார், ‘சகா’ படத்தின் நாயகி அய்ரா. பல விளம்பரப் படங்களில் நடித்தவர், ‘தெறி’ படத்தில் சமந்தாவின் தங்கையாக வெள்ளித் திரைக்கு அறிமுகமானார்.
‘`எனக்கு முதல் காதல்னு எல்லாம் எதுவும் இல்லை. ஏன்னா, நான் படிச்சது லேடீஸ் ஸ்கூல். ஆனா, ஒரு க்ரஷ் இருந்தது. ஒருமுறை புரொகிராமுக்காக வெளியே போயிருந்தப்போ, ஒரு பையனைப் பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தான். நானா போய் எப்படிப் பேசுறதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போ, அவனே வந்து ‘ஹாய்’ சொல்லி ஷாக் கொடுத்தான். அவனுக்கும் என்னைப் பிடிச்சிருந்ததுன்னு நினைக்கிறேன். அப்புறம் ரெண்டுபேரும் கொஞ்சநாள் ப்ரெண்டா இருந்தோம். இப்போ, அந்தப் பையன் என்ன பண்றான்னு தெரியாது. இப்போ ஒருத்தரை நினைச்சாலே, எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும். அவர், ‘அர்ஜூன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா. அவர்கூட ஒரு படத்திலாவது சேர்ந்து நடிச்சிடணும்!” என்கிறார், அய்ரா.
இது அவருக்குத் தெரியுமா?
படம்: தீரன் போட்டோகிராஃபி

அபர்ணதி
“முதல் காதல் எப்போவுமே ஸ்பெஷல்தான். அது எப்போவும் மறக்காது. அவர் கொடுத்த கிப்ட்ஸ்கூட வெச்சிருக்கேன்” - உற்சாகமாகப் பேசுகிறார், ‘ஜெயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் அபர்ணதி.
‘`அவர் பெயர், ஷிஹாப் (Shihab). நானும் அவரும் 3-ஆம் வகுப்புல தொடங்கி ப்ளஸ் டூ வரைக்கும் ஒண்ணா படிச்சோம். அவருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். ஸ்கூல்ல அடிக்கடி கண்ணாலேயே பேசியிருக்கோம். நான்தான் அவருக்கு முதல்ல புரபோஸ் பண்ணி, வெள்ளி மோதிரம் வாங்கிக் கொடுத்தேன். பதிலுக்கு அவர் ஒரு சாக்லேட் கொடுத்து, ஏத்துக்கிட்டார். அந்த சாக்லேட் பேப்பர் இப்போவரைக்கும் என் டைரியில பத்திரமா இருக்கு. ஸ்கூல் டைம் லவ் இது. அப்புறம், ரெண்டுபேருமே வேற வேற காலேஜுக்குப் படிக்கப் போயிட்டோம். எங்களுக்குள்ள கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டு, பிரிஞ்சுட்டோம். இப்போ அவர் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டார்னு கேள்விப்பட்டேன்” என்கிறார்
சனா - படம்: பா.காளிமுத்து