Published:Updated:

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”
பிரீமியம் ஸ்டோரி
“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

Published:Updated:
“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”
பிரீமியம் ஸ்டோரி
“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“ ‘பூமராங்’ படத்துக்கு முன்னாடியே கண்ணன் சார் வேறொரு கதை சொன்னார். சில காரணங்களால அது வொர்க்கவுட் ஆகலை. அப்புறம், சொன்ன கதைதான் இது. விவசாயிகள் பிரச்னையைப் பேசப்போற படம். விவசாயத்துக்குத் தண்ணியில்லாம அவங்க கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது அவ்வளவு வருத்தமா இருக்கு. நம்ம இளைஞர்களும் இந்தப் பிரச்னைக்குத் தொடர்ந்து களத்துல இறங்கிப் பேசுறாங்க. அப்படி ஒருத்தனாதான் நான் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். சிம்பிளா சொன்னா, படத்துல இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி நான்!” - அதர்வா முகத்தில் அவ்வளவு உற்சாகம்!   

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி... யங் டீமா இருக்கே?!”

“சீரியஸான ஒரு விஷயத்தைப் பேச, யங்ஸ்டர்ஸ் இருந்தா நல்லாதானே இருக்கும்! எங்களுக்கான காட்சிகளுக்கு நானும் பாலாஜியுமே சில வசனங்களை ஸ்பாட்ல எழுதிக்கிட்டோம். இயக்குநர் கண்ணன் சாரும் எங்களுக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுத்தார். இந்துஜா - பாலாஜிக்கும், மேகா - சதீஷுக்கும் காம்பினேஷன் சீன்ஸ் இருக்காது. ஆனா, படத்துல நான் எல்லோர்கூடவும் இருப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்ல சதீஷ் இல்லாத குறையை பாலாஜியும், பாலாஜி இல்லாத குறையை சதீஷும் சரி பண்ணிடுவாங்க. அதனால, எப்பவுமே ஸ்பாட்ல காமெடிக்குப் பஞ்சமிருக்காது.”

“மேகா ஆகாஷ், இந்துஜா - ரெண்டு ஹீரோயின்களோடு நடிச்ச அனுபவம்?” 

“ ‘மேகா ஆகாஷ்னு ஒரு பொண்ணு. அழகா இருக்காங்க. கெளதம் சார் படத்துல நடிக்கிறாங்க’ன்னு ரெண்டு வருஷமா எல்லோரும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதுக்கு முன்னாடியே அவங்க நடிச்ச ஒரு படம் சில காரணங்களால ரிலீஸ் ஆகல. இருந்தும் அவங்களைப் பற்றிப் பேச வெச்சது அவங்களோட ஸ்கிரீன் ப்ரசென்ஸ்தான். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு தலைவர் படத்துல என்ட்ரி கொடுத்துட்டாங்க. ‘பூமராங்’ படமும் நிச்சயம் அவங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். இந்துஜா, நடிக்கவே பிறந்தவங்கன்னு நினைக்கிறேன். இயற்கையாவே, ரொம்ப இயல்பா நடிக்க வருது அவங்களுக்கு!”

“படத்துல நீங்க மெனக்கெட்ட விஷயம்?”

“என் முகத்துல தீக்காயம் பட்டிருக்கிற மாதிரி காட்சி. அதுக்காக முதன்முறையா பிராஸ்தடிக் மேக்கப் போட்டேன். அதுக்கு மேக்கப் போட ஏழு மணிநேரம் ஆகும். சாப்பிட முடியாது, சரியா பேச முடியாது. மூச்சுவிடக்கூட சிரமமாதான் இருக்கும். அதனால, அந்த போர்ஷனை முடிஞ்சளவுக்கு ஒரே டேக்ல முடிச்சேன். கொஞ்சநேரம் பிராஸ்தடிக் மேக்கப்ல இருந்த எனக்கே இப்படினா, கமல் சாருக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சேன்.”

“ ‘100’, ‘குருதி ஆட்டம்’ படங்கள் பற்றி?”

“ ‘100’ படத்துல ஸ்டைலான போலீஸ் ஆபீஸர் நான். இயக்குநர் சாம் ஆண்டன் ரொம்ப ஜாலியா வேலை வாங்கினார். அடுத்த ரிலீஸ் இதுதான். ‘குருதி ஆட்டம்’ ஷூட்டிங் முடியப்போகுது. அதோட இயக்குநர்  ஸ்ரீகணேஷ் செம யங்! ஏதாவது சஸ்பென்ஸ் வெச்சுக்கிட்டே இருந்தார். அப்படிப் பண்ணுங்க இப்படிப் பண்ணுங்கன்னு மட்டும் சொல்வார். நாம அதைச் சரியா செஞ்சாலே போதும். அந்த சஸ்பென்ஸ் நமக்கே சர்ப்ரைஸா இருக்கும்!” 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“அதர்வா ரொமான்டிக் ஹீரோவா, ஆக்‌ஷன் ஹீரோவா?”

“ஒரேமாதிரி நடிச்சுக்கிட்டிருந்தா, நமக்கே போர் அடிக்கும். பார்க்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்?! அதனால, ஒவ்வொரு படத்துக்கும் வெரைட்டி காட்ட ஆசைப்படுறேன். அதுல சில படங்கள் சூப்பரா வொர்க்கவுட் ஆகியிருக்கு. சில படங்கள் சொதப்பியிருக்கு. தோல்வியில இருந்து ஏதாச்சும் கத்துக்கிறேன். ஆனா, தனிப்பட்ட முறையில எனக்கு ஆக்‌ஷன்தான் வசதியா... இயல்பா இருக்கறதா தோணுது!”

“அப்பா சொல்லி இன்னும் கடைப்பிடிக்கும் விஷயம், கடைப்பிடிக்கத் தவறிய விஷயம்?”

“காலையில அவர் சீக்கிரமா எழுந்துட்டா, எல்லோரும் எழுந்திடணும்னு நினைப்பார். ஆனா, நான் ரொம்ப சோம்பேறி. அதை என்கிட்ட அடிக்கடி சொல்வார். ஜிம், வொர்க்கவுட்னு போனா சீக்கிரம் எழுந்த மாதிரியும் இருக்கும்; அப்பா பேச்சைக் கேட்ட மாதிரியும் இருக்கும்னு, இப்போ வரைக்கும் ஜிம்முக்குப் போறேன். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்துல வர்ற பிரகாஷ் ராஜ் சார் மாதிரிதான், என் அப்பா. அவருக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்தா அது எங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, எங்களையும் பின்பற்றச் சொல்லுவாரு! அப்போ அது கடுப்பா இருந்தது. இப்போதான், அதோட மதிப்பெல்லாம் புரியுது. 

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

அப்பா இருந்தப்போ நான் இருந்ததுக்கும், இப்போ இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அவர் இருந்தவரை எல்லாத்தையும் அவரே பார்த்துக்குவார். அவரோட இழப்பை உணரவே எனக்கு ரெண்டு வருடம் தேவைப்பட்டுச்சு. இப்போ, அம்மா, அக்கா, தம்பி எல்லோரையும் பாதுகாப்பா வெச்சுக்கணும்னு நினைக்கிறேன், பொறுப்பு அதிகமாகியிருக்கு. ‘ஈட்டி’ படத்துக்கு நான் கொடுத்த உழைப்பு; ‘பரதேசி’ படத்துக்காக எனக்குக் கிடைச்ச மக்களோட அங்கீகாரம்... இதெல்லாம் பார்க்க அப்பா இல்லையேன்னு வருத்தப்பட்டிருக்கேன்.”

“மறக்கமுடியாத மொமன்ட் ஏதாவது?”

“பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ரசிகன் நான். ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலமா முதல்முறையா அவரைச் சந்திக்கும்போது செம எக்ஸைட்டிங்கா இருந்தது. அப்பா இருந்தப்போ, கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சாரை மீட் பண்ணதும் மறக்க முடியாத அனுபவம். பேமிலியோட ஒரு டிரிப் போயிருந்தப்போ, நாங்க தங்கியிருந்த ஹோட்டல்லதான் அவரும் தங்கியிருந்தார். அப்பாகிட்ட அடம்பிடிச்சு, கபில்தேவைச் சந்திச்சேன். அப்போ, எல்லோருக்கும் கபில்தேவ் சாக்லேட் கொடுத்தார். கடைசியா ஒண்ணு இருந்தது. ‘சரி, நீயும் நானும் பாதிப் பாதி சாப்பிடலாம்’னு ஊட்டி விட்டார், கபில். அந்தச் சாக்லேட் கரைஞ்சிடக் கூடாதுன்னு ரொம்பப் பொறுமையா சாப்பிட்டேன்.”

“படப்பிடிப்பு இல்லாத நேரங்கள்ல அதர்வா எப்படி?”

“பள்ளிக்கூட நண்பர்கள்கூட கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவேன். பல நாடுகளைப் பற்றிப் படிச்சுத் தெரிஞ்சுக்கிறதுல எனக்கு ஆர்வம் அதிகம். எந்த நாடு என்னை இம்ப்ரஸ் பண்ணுதோ, அங்கே டூர் போயிடுவேன். இப்போ அன்டார்ட்டிகா கண்டம் பற்றி அதிகமா படிச்சுக்கிட்டிருக்கேன். அது அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு. அங்கே போகமுடியுமான்னு தெரியலை. பார்ப்போம்!”

உ.சுதர்சன் காந்தி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism