Published:Updated:

ஆக்ரோஷ அப்பா பாரதிராஜா...அதிரடி மகன் விஷால்: ‘பாண்டியநாடு’ படக்கதை!

ஆக்ரோஷ அப்பா பாரதிராஜா...அதிரடி மகன் விஷால்: ‘பாண்டியநாடு’ படக்கதை!
ஆக்ரோஷ அப்பா பாரதிராஜா...அதிரடி மகன் விஷால்: ‘பாண்டியநாடு’ படக்கதை!
ஆக்ரோஷ அப்பா பாரதிராஜா...அதிரடி மகன் விஷால்: ‘பாண்டியநாடு’ படக்கதை!

விஷால் - வரலட்சுமி பிரச்னை ஆரம்பித்த காலத்தில் இருந்தே விஷாலுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் ஏழாம் பொருத்தம் ஸ்டார்ட். இதுமாதிரியான சூழ்நிலையில் தனியாக களம் இறங்கி இருக்கிறார், விஷால்! அப்பா ஜி.கே ரெட்டி பழம்பெரும் தயாரிப்பாளர், அண்ணன் அஜய் ‘திமிரு’ போன்ற படங்களின் வெற்றி தயாரிப்பாளர்.

இரண்டுபேர் இருந்தும் விஷால் தனியாக ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார்! முதல் தயாரிப்பாக சுசீந்திரன் இயக்கும் ‘பாண்டியநாடு’ படத்தை எடுக்கிறார். அப்பா, அண்ணனை தவிர்த்து தனியாக படம் எடுக்க என்ன காரணம்?

‘‘ அப்பாவுக்கு வயசாயிடுச்சு அதனால சினிமா தயாரிப்பு வேலைகளை பார்த்துக்கிட்டு இருந்த அண்ணன் இப்போ அப்பா பிசினஸை பார்த்துட்டு பிஸியா இருக்கிறார். அதனால நான் தனியா என்பேர்ல சினிமா கம்பெனி ஆரம்பிச்சு இருக்கேன்...’ என்று சுயவிளக்கம் சொன்னார், விஷால்!

‘ராஜபாட்டை’ ஆக் ஷன் படத்தால் கையைச்சுட்டுக் கொண்ட சுசீந்திரன், ‘என்னை ‘வெண்ணிலா கபடிக்குழு:, ‘அழகர்சாமியின் குதிரை’ மாதிரி படங்கள் டைரக் ஷன் பண்றதுக்கு மட்டுமே லாயக்குனு நிறையபேர் நினைச்சுட்டு இருக்காங்க. நான் இயக்குன ‘நான் மகான் அல்ல’ ஆக் ஷன் படம் சூப்பர்ஹிட்ங்கறத மறந்துடாதீங்க. அதுபோல ‘பாண்டியநாடு’ படமும் பட்டையை கிளப்பும். அதோட ஆக்ரோஷமான அப்பா வேஷத்துல நடிக்கப்போற பாரதிராஜாவை பார்த்து எல்லோரும் அசந்து போகபோறீங்க...’ என்று இயக்க விளக்கம் கொடுத்தார் சுசி!

சசிக்குமார் வீட்டுக் கொல்லையில் துளசி மாடத்தைச் சுற்றிக்கொண்டு இருந்த லட்சுமி மேனனை, ‘பாண்டியநாடு’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக்கி இருக்கிறார்கள்!

- எம். குணா