அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

து தேர்தல் சீஸன். பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது. ‘மிஸ்டர் மியாவ்’வும் தன் வழக்கத்திலிருந்து மாறி, பிரபலங்களைப் பற்றிய எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள், கிசு கிசுக்கள், ஷூட்டிங் ஸ்பாட் கவரேஜ்... என்று பரபரப்பாக புதுக்களம் புகுகிறார். வாராவாரம் கலகலப்பு, விறுவிறுப்பு என வலம் வரப்போகும் மியாவ்வை வரவேற்போம்.

இந்த வாரம் மிஸ்டர் மியாவ் ரவுண்ட்ஸ் சென்றது நயன்தாரா குடியிருக்கும் எழும்பூர் பகுதி. நயன் பற்றி மியாவ் சொன்ன ‘நயன்’ நியூஸ்...

மிஸ்டர் மியாவ்

• தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க நயனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. சம்பளம் ஆறு ‘சி’ கேட்கிறாராம்! 

• தமிழில் அறிமுகப் படமான  ‘ஐயா’-வில் நயன்தாரா வாங்கிய சம்பளம் ஆறு லட்சம் ரூபாய்!

• தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, ‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் - ஷங்கர் படம் என்பதற்காகவே ஒரு பாடலுக்கு ஆடினார்.

• சிம்பு நடித்த ‘வல்லவன்’ படத்தில், படம் ஆரம்பித்த போது, அதுவரை கோலிவுட்டின் ஹீரோயின்களில் ஒருவராகப் பார்க்கப்பட்ட நயன், அந்தப் படத்தின் போஸ்டர் வெளியான பிறகு டாக் ஆஃப் தி ஹீரோயின் ஆனார். சிம்பு - நயன்தாரா போஸ்டர் கிளப்பிய சர்ச்சை நீதிமன்றம்வரை சென்றது.

மிஸ்டர் மியாவ்

• இன்றைக்கு விமானத்தில் பறக்கும் நயன்தாரா, தனது முதல் பட ஆடிஷனுக்காக கொச்சினிலிருந்து சென்னைக்கு ரயிலில்தான் வந்து சென்றார். அந்த ஆடிஷன், ‘தொட்டி ஜெயா’ படத்திற்காக எடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் நயனுக்கு கிடைக்கவில்லை.

• லிங்குசாமியின் ‘பையா’-வில் நயனின் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் உறுதிசெய்யப்பட்டது. தமிழ் சினிமா மொத்தமும் ‘இவருக்கு இவ்வளவு சம்பளமா?’ என்று கலாய்க்க,  அந்த ரோலில் நயனுக்குப் பதிலாக தமன்னா நடித்தார்.   

• ‘இந்தியன் 2’-க்காக தாராளமாகத் தேதிகளை வழங்கியிருந்தும், படம் தொடங்க தாமதமானதால் அந்தத் தேதிகளை விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் படத்துக்குக் கொடுத்திருக்கிறார், நயன்.

• கடலென அன்பைப் பொழிவார். ஏமாற்றினால் அனலெனச் சுடுவார். இது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்கு தெரியும்.

மிஸ்டர் மியாவ்

• தனக்கு  வர வேண்டிய சம்பளப் பாக்கியான ரூ.40 லட்சத்தைக் கொடுக்காததால், ஒரு படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடலுக்கு இவர் ஆடவில்லை. அந்தச் சம்பளப் பாக்கியையும் திரும்பக் கேட்கவில்லை.

ம்யூட்

• பிரமாண்ட இயக்குநரின் பட்ஜெட், லிமிட்டை மீறிச்செல்கிறதாம். அதனால், உச்ச நாயகனின் அடுத்தப் பட ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் சிக்கல். இதுபோக, ரிலீஸ் தேதியையும் சொல்லாமல் மவுனம் காக்கிறாராம் இயக்குநர்.

•   20 ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முதலாக ஜோடிபோட்ட இரு ஹீரோயின்களும் இந்த ஆண்டு இணைந்து பெரிய நடிகருக்கு ஒரே படத்தில் ஜோடியானார்கள். இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கின்றனர். டைட்டில் கார்டில் யார் பெயரை முன்னால் போட வேண்டும் என்பதில் பஞ்சாயத்து தீயாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறதாம்!

• மணம் முடித்த கையோடு தன் புதிய மணாளனை நாயகன் ஆக்குவதற்கு ஸ்க்ரிப்ட் கேட்கிறாராம், புதல்வி. சரியான கதை அமைந்தால், தானே தயாரிக்கவும் தயாராம்.

• பாலிவுட் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கும் டாப் நடிகர், 25 நாள் கால்ஷீட்டுக்கு 40 ‘சி’ வாங்கியிருக்கிறாராம்.