Published:Updated:

சினிமா

சினிமா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா

சினிமா

சினிமா

சினிமா

Published:Updated:
சினிமா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா
சினிமா
சினிமா

023 -1933-ம் ஆண்டு வெளியான ‘கிங் காங்’ படத்தை அதே பெயரில் 2005-ம் ஆண்டு ரீ-மேக் செய்தார் பீட்டர் ஜாக்சன். யுனிவர்சல் பிக்சர்ஸ் முதலில் 150 மில்லியனில் முடிக்க நினைத்து, 207 மில்லியன் செலவாகி, அப்போதைய ‘காஸ்ட்லி சினிமா’ என்ற பெயர் எடுத்தது. படத்தின் ஓப்பனிங் வசூல் சுமார் என்றாலும், பின்னர், ‘பிளாக்பஸ்டர்’ ஆனது.

சினிமா

024 -நீண்ட முடியைக்கொண்ட ரபுன்ஸலின் கதையான, ‘டேங்கில்டு’ (Tangled) படம்தான் அதிக பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம். 260 மில்லியன் டாலர்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பழங்கால அனிமேஷன் முறை, பெயின்டிங்கைப் போன்ற பிரதிபலிப்பு எனப் பல தொழில்நுட்பங்களில் எடுக்கப்பட்டது. இதற்கு இரண்டாம் பாகம் எடுப்பதாக இருந்து, கைவிடப்பட்டது.

சினிமா

025 -மார்வெல் - DC காமிக்ஸ் மோதல் தற்போதும் தொடர்கிறது. ஆம், DC வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து DC Universe என்ற பெயரில் ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. DC டைட்டன்ஸ், டூம் பேட்ரோல் ஆகியவற்றை தொடர்களாகத் தயாரிக்க, மார்வெல்லும் டிஸ்னியுடன் இணைந்து டிஸ்னி ப்ளஸ் என்ற ஸ்ட்ரீமிங் தளத்தைத் தொடங்குகிறது.

சினிமா

026 -2005-ம் ஆண்டு வெளியான ‘கிங் காங்’ படத்தில், மோஷன் கேப்ச்சரிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காங்காக நடித்தார், ஆண்டி செர்கிஸ். 25 அடி கொரில்லாவாக இவர் முகப்பாவனைகள், உடல்மொழி எனக் கச்சிதமாக கொடுக்க, அது திரையில் கொரில்லாவாக மாறியது. அதே படத்தில் மனிதர் வேறு பல கதாபாத்திரங்களிலும் தோன்றி ஆச்சர்யப்பட வைத்தார்.

சினிமா

027 -ஸ்பைடர்மேன், தி ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ், தி ஃபென்டாஸ்டிக் ஃபோர், டேர்டெவில், ப்ளாக் பேந்தர், எக்ஸ் மென், ஏன்ட்மேன், அயர்ன்மேன், தோர் என அனைவரையும் உருவாக்கியவர், ஸ்டேன் லீ. இவர் சென்ற வருடம் நவம்பர் 12-ம் தேதி காலமானார். தன் 17 வயது முதல் 95 வயது வரை கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் காமிக்ஸ் உலகுக்காக உழைத்துள்ளார்.

சினிமா

028 -‘குங்ஃபூ பாண்டா’ படங்கள் நம் எல்லோரின் ஃபேவரைட். இதுவரை 3 திரைப்படங்கள், 5 குறும்படங்கள், 2 டிவி தொடர்கள் வந்திருக்கின்றன. இதன் முதல் பாகம் தயாராக மட்டும் 4 வருடங்களாகி இருக்கின்றன. அதுமட்டுமன்றி காட்சிகள் தத்ரூபமாக இருப்பதற்காக, இதில் பணியாற்றிய அனிமேட்டர்கள் அனைவருக்கும் 6 மணி நேர குங்ஃபூ பயிற்சி வகுப்பும் எடுக்கப்பட்டது.

சினிமா

029 -‘தி கராத்தே கிட்’ என்றதும், ஜாக்கி சான் மற்றும் ஜேடன் ஸ்மித்  நினைவுக்கு வரும். ஆனால், 1984-ல் இதே பெயரில் வெளியான படத்தின் ரீமேக் இது.  அந்தப் படம், கலிபோர்னியாவில் நடக்கும். இங்கே சீனாவின் பீஜிங். அந்தப் படத்தில் ஜப்பானிய கராத்தே தற்காப்புக் கலை என்றால், இங்கே ஜாக்கி சானின் ஃபேவரைட் குங்ஃபூ.

சினிமா

030 -ஹாரிபாட்டராக நடிப்பதற்கு சிறுவனைத் தேடும்போது,  ஒரு தியேட்டரில் தனக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவனைப் பார்த்த தயாரிப்பாளர், இவன்தான் ஹாரிபாட்டர் என முடிவுசெய்தார். ஹாரிபாட்டர் உருவம் நேரில் வந்துவிட்டதாகவே ரௌலிங்கும் அந்தச் சிறுவனை ஏற்றுகொண்டார். அந்தச் சிறுவன்தான், டேனியல் ரேட்க்ளிஃபே.

சினிமா

031 -விலங்குகள் காட்சியகத்திலிருந்து தப்பித்த விலங்குகளின் குழு ஒன்று நிகழ்த்தும் சாகசங்களே ‘மடகாஸ்கர்.’ அலெக்ஸ் என்ற சிங்கம், மார்ட்டி என்ற வரிக்குதிரை, மெல்மேன் என்ற ஒட்டகச்சிவிங்கி, க்ளோரியா என்ற நீர்யானை மற்றும் குட்டீஸ்களின் ஃபேவரைட்டான பெங்குயின்கள் கூட்டமும்தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள்.

சினிமா

032 -டேவிட் ஹேமேன் என்ற தயாரிப்பாளருக்கு ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதையின் முதல் புத்தகம் ஒரு காப்பி வந்து சேர்ந்தது, ஆனால், அதை அவர் உடனே படிக்கவில்லை. பின்பு ஒருநாள் படித்து, மலைத்துபோய், படமாக எடுக்க முன்வந்தார். அன்று அந்தச் சம்பவம் நடக்கவில்லை என்றால், இன்று நமக்கு ஹாரிபாட்டர் படங்கள் இல்லை.

சினிமா

033 -ஜே.கே.ரௌலிங் முதல் 4 ஹாரிபாட்டர் புத்தகங்களைப் படமாக எடுக்கும் உரிமையை வார்னர் பிரதர்ஸுக்குக் கொடுத்தார். அதற்கு ஒரே கண்டிஷன், கதையின் முக்கியப் பாத்திரங்கள் தன் சொந்த நாடான பிரிட்டிஷை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான். இதற்கு  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உடன்படாததால் அந்த வாய்ப்பு இயக்குநர் கிரிஸ் கொலம்பஸுக்குச் சென்றது.

சினிமா

034 -1982-லேயே பூமிக்குத் தவறுதலாக வரும் ஏலியனுக்கும் ஒரு சிறுவனுக்குமான நட்பைக் குறித்து பேசியது E.T.the Extra-Terrestrial. டெக்னாலஜி பெரிதாக இல்லாத அந்தக் காலகட்டத்தில் 2 அடி 10 இஞ்ச் உயரத்திலிருந்த ஒருவரை வைத்து, ஏலியன் காட்சிகளைப் படம் பிடித்தார் பிரமாண்ட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். இன்று வரை  அது, சயின்ஸ் ஃபிக்  ஷன் படங்களில் டாப் 10 வரிசையில் உள்ளது.

சினிமா

035 -ரு பெண் இயக்குநர் இயக்கிய முதல் முழு நீள அனிமேஷன் படம், ‘ஃப்ரோஸன்’ (Frozen). கிரிஸ் பக்குடன் இணைந்து  இயக்கினார், ஜெனிஃபர் லீ. அனிமேஷன் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இன்றுவரை தக்கவைத்துள்ளது இந்தப் படம். 150 மில்லியன் டாலர் செலவில் உருவான படம், 1.276 பில்லியன் டாலர்களை குவித்தது.

சினிமா

036 -பாப் கேன் மற்றும் பில் ஃபிங்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ‘பேட்மேன்’ கதாபாத்திரம், இதுவரை 13 முறை திரைப்படங்களில் தோன்றியிருக்கிறது. படத்தொடர்கள் மற்றும் வெளியாகவிருக்கும் படங்கள் என வரிசைகட்டி நிற்கின்றன. பேட்மேன் மற்றும் நிஜ கதாபாத்திரமான ப்ரூஸ் வெய்ன் பாத்திரப்படைப்பும்  தனிப்பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

சினிமா

037 -சூப்பர் ஹீரோ படங்கள் தொடர்ந்து சொதப்பிவந்த நிலையில், வசூல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவரின், ‘பேட்மேன் பிகின்ஸ்’ அசுர வெற்றியைப் பெற்றது. 2-ம் பாகத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

சினிமா

038 -ர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், அங்கே ஆங்கிலம் கற்று தர வரும் ஆசிரியருக்கும் இடையேயான நெகிழ்ச்சியான உறவைப் பேசிய படம், ‘டெட் போயட்ஸ் சொசைட்டி’. ‘மனம் விரும்பியதைச் செய்யுங்கள்’, ‘மாணவர்களின் கனவை கலைக்காதீர்கள்’ போன்ற கருத்துகளை முன்னிறுத்தியது இந்தப் படம். 2014-ல் ராபின் வில்லியம்ஸ் இறந்தபோது, அவரின் சிறந்த நடிப்பாக இந்தப் படத்தின் ஜான் கீட்டிங் கதாபாத்திரம் பேசப்பட்டது.

சினிமா

039 -னிமேஷன் படத்தொடர்களில் வசூல் மன்னன், ‘டெஸ்பிகபிள் மீ’ (Despicable Me) படத்தொடர்தான். ‘கியா முயா’ என விநோத மொழியில் பேசும் மினியன்ஸ் பற்றிய கதையான இந்தப் படம், இதுவரை 4 பாகங்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தச் செலவு 299 மில்லியன் டாலர்கள். மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? உலகளவில் $3,708,073,676 டாலர்கள்.

சினிமா

040 -வொண்டர் வுமனாக நடிக்க, 9 மாதங்கள் தீவிர உடற்பயிற்சி செய்து 10 கிலோ எடையைக் கூட்டினார், கேல் கடொட். ஆனால், படத்துக்காக சில காட்சிகள் ரீ-ஷூட் செய்யும்போது, கேல் கர்ப்பிணியாக இருந்தார். அதனால், வயிற்றின் மேல் பச்சைத் துணியை  ப்பயன்படுத்தி, க்ரீன் மேட் மூலம் அந்தக் காட்சியைச் சரிசெய்தனர்.

சினிமா

041 -‘Honey, I shrunk the Kids’ என்ற காமெடி சயின்ஸ் ஃபிக் ஷன் படம், விஞ்ஞானி அப்பா செய்யும் தவற்றால் உருவத்தில் சிறியதாக மாறிப்போகும் குழந்தைகளின் சாகசக் கதையை சொன்னது. படத்தைத் தயாரித்த வால்ட் டிஸ்னி உட்பட பலரும் இது ஓடாது என்றே நினைத்தனர். ஆனால், 222 மில்லியன் டாலர்களைக் குவித்து, அதிக வசூல் செய்த டிஸ்னி படம் என்ற சாதனையை 5 வருடங்களுக்கு தக்கவைத்திருந்தது.

சினிமா

042 -புகழ்பெற்ற காமெடி நடிகர் ஜிம் கேரி நடித்த ‘தி மாஸ்க்’ படம், குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது. ஆரம்பத்தில், பேய் படம் போன்று திகிலாக எடுக்கும் ஐடியா இருந்ததாம்.பின்னர்தான் குழந்தைகளையும் ஈர்க்கும் காமெடி கலாட்டா சேர்க்கப்பட்டன.

சினிமா

043 -‘பியூட்டி அண்டு தி பீஸ்ட்’ கதை... கார்ட்டூன், அனிமேஷன், லைவ் ஆக் ஷன் எனப் பல வடிவங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதில், பீஸ்ட்டாக (விலங்கு மனிதன்) வரும் கதாபாத்திரம், எருதின் தலை, கொரில்லாவின் புருவம், கரடியின் உடம்பு, சிங்கத்தின் பிடரி, காட்டுப் பன்றியின் பற்கள், நரியின் கால்கள் மற்றும் வால் எனப் பல்வேறு விலங்குகளின் கலவையாகப் படைக்கப்பட்டிருக்கும்.

சினிமா

044 -மார்வெல், DC காமிக்ஸ்களுக்குப் பிறகு ஹாலிவுட்டுக்குக் கணிசமான கதைகளை வழங்கிய காமிக்ஸ் நிறுவனம், டார்க் ஹார்ஸ் காமிக்ஸ். தி மாஸ்க், டைம்காப், ஹெல்பாய், ஏலியன் vs ப்ரீடேட்டர், தற்போது நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும் ‘தி அம்ப்ரெல்லா அகாடமி’ எனப் பல சுவாரஸ்யக் கதைகள், டார்க் ஹார்ஸிடமிருந்து வந்தன. ஹாரர் மற்றும் த்ரில்லருக்கு பெயர்போனது இந்த காமிக்ஸ்.

சினிமா

045 -கிறிஸ்துமஸ் விடுமுறையில் தொலைந்துபோன 8 வயது சிறுவனின் கலாட்டாகளை காமெடியாக சொன்ன படம், ‘ஹோம் அலோன்’. 1990-ல் வெளியாகி, அதிக வசூல் செய்த லைவ் ஆக்  ஷன் காமெடி படம் என்ற ரெக்கார்டை 21 வருடங்களும், அதிக வசூல் செய்த கிறிஸ்துமஸ் ரிலீஸ் படம் என்ற ரெக்கார்டை 28 வருடங்களும் தக்கவைத்திருந்தது.

சினிமா

046 -பிக்ஸார் அனிமேஷன் படங்கள் பல புது ட்ரெண்டுகளை உருவாக்கி இருக்கின்றன. உதாரணமாக, எலியை மையப்படுத்தி வந்த ‘ரேட்டடூலி’(Ratatouille) படம், பலரையும் எலிகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தூண்டியது. ‘பைண்டிங் நிமோ’ படம் வெளியானபோது, அதில் வந்த ‘க்ளவுன் ஃபிஷ்’ என்ற மீன் இனத்தை வளர்க்க சுட்டீஸ் ஆர்வம் காட்டினர்.

சினிமா

047 -கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக ஜானி டெப் தோன்றிய ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஆன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்’ படம்தான், இதுவரை வெளியானதிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் (379 மில்லியன் டாலர்கள்) அது, 1.046 பில்லியன் வசூலைக் குவித்தது. ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’, ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சினிமா

048 -புகழ்பெற்ற எழுத்தாளர் மைக்கேல் கிரிஸ்டன், ‘ஜுராசிக் பார்க்’ கதையை நாவலாக வெளியிடுவதற்கு முன்பே, படமாக்குவதற்கான உரிமையை யுனிவர்சல் பிக்சர்ஸும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஆம்ப்லின் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வாங்கிக்கொண்டன.

கிரிஸ்டன் இதுவரை 6 ஜுராசிக் பார்க் நாவல்களை எழுதியுள்ளார்.

சினிமா

049 -காமிக்ஸ் உலகில் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகள், DC மற்றும் மார்வெல் காமிக்ஸ். பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர்வுமன், தி ஃபிளாஷ் என DC கதாபாத்திரங்கள் ஸ்டார்கள். அயர்ன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர் போன்றவர்கள் மார்வெல் ஹீரோக்கள். தற்போது, DC காமிக்ஸ் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் கீழும்,  மார்வெல், வால்ட் டிஸ்னியின் கீழும் உள்ளன. அமெரிக்காவின் 70 சதவிகித காமிக்ஸ் மார்க்கெட் இவர்களிடமே.

சினிமா

050 -புத்தகங்கள், டிவி தொடர்கள், படங்கள் எனப் பல பரிமாணத்திலும் வந்தவர், துப்பறியும் புலி ஷெர்லாக் ஹோல்ம்ஸ். அவரின் கதாபாத்திரத்தைச் சிறுவனாக மாற்றி எடுக்கப்பட்ட ஒரே படம், ‘யங் ஷெர்லாக் ஹோல்ம்ஸ்’. 1985-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதிய கிரிஸ் கொலம்பஸ் என்பவரே ஹோம் அலோன், ஹாரிபாட்டரின் இரண்டு பாகங்கள், இயக்கியவர்.

சினிமா

051 -1995-ஆம் ஆண்டு, ‘ஜூமான்ஜி’ திரைப்படம் வெளியானபோது, இவ்வளவு பயமுறுத்தும் படத்தைக் குழந்தைகள் படமாக விளம்பரப்படுத்துவதா என விமர்சகர்கள் கொந்தளித்தனர். படத்தின் ஹீரோவான ராபின் வில்லியம்ஸே, தன் குழந்தைகளை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால், படத்தை குழந்தைகளும் கொண்டாடினர். காலத்தால் அழியாத குழந்தைகள் படமானது, ஜூமான்ஜி.

சினிமா

052 -சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஸ்பைடர்மேன்: இன்டூ தி ஸ்பைடர் வெர்ஸ்’ படம், 140 அனிமேட்டர்களின் அசகாய உழைப்பில் உருவானது. 90 மில்லியன் டாலரில் உருவான இந்தப் படம், 360 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஸ்பைடர்மேனுக்காக ஒரு தனி அனிமேஷன் படத்தொடர் ஆரம்பிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கி  வெற்றிபெற்றுள்ளது சோனி. 

சினிமா

053 -சூஸன் காலின்ஸ் எழுதிய ‘தி ஹங்கர் கேம்ஸ்’ முதல் நாவல், 2008-ல் வெளியானபோதே அதைப் படமாக எடுக்க பல நிறுவனங்கள் முன்வந்தன. நாவலுக்கான ரைட்ஸை ‘கலர் ஃபோர்ஸ்’ என்ற சிறு நிறுவனம் வாங்கியது. அதனுடன் இணைந்து ‘லயன்ஸ் கேட்’ நிறுவனம் படத்தைத் தயாரித்தது. நாவலின் 3-ம் பாகத்தை எழுதும்போதே, சூஸன் முதல் படத்துக்கான திரைக்கதைக்கும் பங்காற்றினார்.

சினிமா

054 -‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ வெற்றியைத் தொடர்ந்து, அதன் முந்தைய கதையான, ‘தி ஹாபிட்’ பல்வேறு மாற்றங்களுடன் தூசு தட்டப்பட்டது. இதுவும் 3 பாகங்களாக 2012 முதல் 2014 வரை அடுத்தடுத்த வருடங்களில் வெளியாகின. வசூலிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படத்தொடர் சாதனை படைத்தாலும், ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ போல விருதுகளைக் குவிக்கவில்லை.

சினிமா

055 -‘தி க்ரானிகல்ஸ் ஆஃப் நார்னியா’ என்ற படத்தொடர் 3 பாகங்கள் வெளியாகின. இந்தக் கதையைப் புத்தகமாக எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் சி.எஸ்.லீவிஸ், அதைப் படமாக எடுக்க அனுமதிக்கவில்லை. தன் கதையில் வரும் ஃபேன்டஸி விஷயங்களை திரையில் கொண்டுவருவது கடினம் என அவர் நம்பினார். அவர் இறந்த பிறகே, கதையின் உரிமை வாங்கி வெளியாகின.

சினிமா

056 -லகிலேயே ரிஸ்கான முயற்சியாக கருதப்பட்டது, ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ படத்தொடர்தான். 300 மில்லியனுக்கும் அதிகமான செலவில் 10 மணி நேரம் ஓடக்கூடிய படமாக அது  எடுக்கப்பட்டது. 2001, 2002, 2003 ஆகிய வருடங்களில் 3 பாகங்களாக வெளியாகின. 30 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படங்கள், 17 விருதுகளை வென்றன.

சினிமா

057 -1986-ல், ஜப்பானில் வெளியானது ‘The Adventures of Milo and Otis’ என்ற திரைப்படம். மைலோ என்ற பூனைக்கும், ஓட்டிஸ் என்ற பக் வகை நாய்க்கும் இடையேயான நட்பைப் பேசிய காமெடி படம். 3 வருடங்கள் கழித்து அமெரிக்காவில் வெளியானது. தமிழிலும் ‘சுட்டி பூனை’ என்ற பெயரில், வெளியானது.

சினிமா

058 -வியாபார ரீதியாக வெற்றிபெற்றும் அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களைக் குவித்த படத்தொடர், டிரான்ஸ்ஃபார்மர்ஸ். முதல் பாகமும், தற்போது வெளியான பம்பிள்பீயும் மட்டுமே நல்ல பெயர் வாங்கின. மற்ற படங்கள் கருத்தியல் ரீதியாகவும், இரண்டாம் மூன்றாம் தர திரைக்கதைக்காகவும் வசைப்பாடப்பட்டன. ஆனால், பாராமவுண்ட் நிறுவனம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சினிமா

059 -ம்மை உருகச்செய்த அனிமேஷன் படங்களில் ‘அப்’ (UP) படத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதில் மிகவும் புகழ்பெற்ற காட்சி, பலூன்கள் ஒரு வீட்டையே தூக்கிச் செல்வது. படத்தில் அந்தக் காட்சிக்காக, 20,622 தனி பலூன்களை உருவாக்கியது படக்குழு. நிஜமாகவே அப்படி வீட்டைத் தூக்க இயற்பியல் விதிப்படி 12 மில்லியன் பலூன்கள் தேவைப்படுமாம்.

சினிமா

060 -னிமேஷன் படங்கள் என்றாலே, டிஸ்னி மற்றும் பிக்ஸார் நிறுவனங்களே நினைவுக்கு வரும். ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சம்பந்தமில்லாத 5 படங்களும், சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளன. ஷ்ரெக், ஸ்பிரிடட் அவே, வாலஸ் & க்ரோமிட்: தி கர்ஸ் ஆஃப் தி வேர்-ரேபிட், ஹேப்பி ஃபீட், ரேங்கோ ஆகியவையே அவை.

சினிமா

061 -மார்வெல் காமிக்ஸுக்குத்  தைரியமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம் என்ற நம்பிக்கையை அளித்ததே, எக்ஸ்-மென் படங்கள்தாம். ஒடுக்கப்பட்ட சமூகமாக, நோயாளிகளாகப் பார்க்கும் மனிதர்களின் கதைகளைப் பேசியது படம். ஸ்டேன் லீ மற்றும் ஜாக் கிர்பியின் காமிக்ஸ்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இதில், வுல்வரின், மெக்னட்டோ, புரொபசர் சார்ல்ஸ் சேவியர், ஜீன் க்ரே போன்ற கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

சினிமா

062 -பிக்ஸார் படைப்பான ‘டாய் ஸ்டோரி 2’ படம், 90% முடிந்த நிலையில் மொத்தமாக டெலீட் ஆகிவிட்டதாம்.  எல்லாமே போய்விட்டது என்ற நேரத்தில் நல்லவேளையாக, படத்தின் டெக்னிக்கல் இயக்குநரான ஒரு பெண், தன் வீட்டில் படத்தின் வேலைகளைச் செய்ய ஒரு பேக்கப் காப்பி வைத்திருந்தாராம். அதுதான் பின்னர், படத்தின் மாஸ்டர் காப்பியானது.