தமிழ்த் திரையுலகில் நாயகியாக ஜொலித்துவரும் ‘மில்க் பியூட்டி’ தமன்னா, ஒரு வைர வியாபாரியின் மகள். மும்பைவாசி. மும்பைக்கும் சென்னைக்கு பறந்துகொண்டிருக்கும் தமன்னா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இதோ...

‘கண்ணே கலைமானே’ படம் வரையிலும் ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார், தமன்னா. ‘தேவி-2’ படத்திலிருந்து சம்பளத்தை ரூ.2 கோடியாக மாற்றியிருக்கிறாராம்.

‘கேடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா, த்ரிஷா ஹீரோயினாக நடித்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அதில் இவருக்குச் சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை.

‘ராஜ்மஹால்’ ஜவுளி விளம்பரத்தில் முதன்முதலில் நடித்தபோது, தமன்னாவுக்கு 14 வயது. அதில் இவருக்கு ஜோடியாக சாயா சிங்கின் கணவர் கிருஷ்ணா நடித்திருந்தார்.

அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய மூவரிடமும் நெருங்கிப் பழகுகிறார், தமன்னா. இவர் சினிமாவுக்கு வந்தபோது, தனியாக காஸ்ட்யூம் டிசைனர் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இவருக்குத் தெரியாதாம். அதை அவருக்குச் சொல்லிக்கொடுத்தவர், அனுஷ்கா.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், சிந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகள் பரிச்சயமாக இருப்பது, தமன்னாவின் ப்ளஸ்.

‘சாந்த் சா ரோஷன் சேரா’ என்ற இந்தி படம் மூலம் தமன்னா அறிமுகமாகியிருந்தாலும், தமிழ் படங்களில் நடிக்கவே அவர் விரும்பினார். 2013-ல், அஜய் தேவ்கனுடன் நடித்து வெளியான ‘ஹிம்மத்வாலா’ திரைப்படம், 1983-ல் அதே டைட்டிலில் வெளிவந்த படத்தின் ரீமேக். அதில் ஸ்ரீதேவி நடித்த ரோலில் இவரை நடிக்கும்படிக் கேட்டதால், தனது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் பெற்றுக்கொண்டு நடித்துக்கொடுத்தாராம் தமன்னா.

கமர்ஷியல் படங்களில் அதிகம் நடித்துவிட்ட தமன்னாவுக்கு, கதை சார்ந்த படங்களில்தான் தற்போது அதிக நாட்டம் இருக்கிறதாம். ராதாமோகன், சசிகுமார், கெளதம் மேனன் ஆகிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க தமன்னா விருப்பப்படுகிறாராம்.

யோகா, நடனம் இரண்டிலும் அதிக நாட்டம் கொண்டவர், தமன்னா. தினமும் காலையில் யோகா செய்வதும், மாலையில் நடனம் ஆடுவதும்தான் இவரது அழகின் ரகசியம்.

போயஸ் கார்டன் பக்கமாகச் சென்ற ‘வெற்றி’ நாயகனுக்கு, அங்குள்ள ஒரு வீட்டைப் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டது. அது ஒரு தயாரிப்பாளரின் வீடாம். உடனே, அந்தத் தயாரிப்பாளரைத் தொடர்புகொண்ட நாயகன், மூன்று படங்கள் நடித்துக்கொடுப்பதாகவும், அவற்றுக்குச் சம்பளத்துக்குப் பதிலாக அந்த வீட்டைத் தருமாறும் கேட்டிருக்கிறார்.

பசுமைத் தயாரிப்பிடம் கதை சொல்ல வருபவர்கள், அந்த மொத்தக் குடும்பத்தினருக்கும் கதை சொல்ல வேண்டுமாம். அப்படியொரு நிபந்தனை இதுவரை சகோதரர்களின் படங்களுக்கு மட்டுமே இருந்தது. இதனால், பசுமையிடம் கதை சொல்வதற்குப் போகவே இயக்குநர்கள் யோசிக்கிறார்கள்.

வெற்றி நடிகருடன் ஜோடி சேர்ந்த நாயகியை, வம்பு நடிகரின் அடுத்த படத்தில் கமிட் செய்யலாம் என்றது, இயக்குநர் தரப்பு. வம்பு நடிகரோ, மூன்றெழுத்து மூத்த நாயகிக்கு மவுசு அதிகரித்திருப்பதால், அவரையே கமிட் செய்ய விரும்புகிறாராம்.

அரசியல் நாயகனின் அடுத்தப் படம் தாமதமாவது, பிரமாண்ட இயக்குநருக்குக் கவலையை அதிகரித்துள்ளது. வேறு நாயகனை நாடலாமா என்று படக்குழு யோசித்துவருகிறதாம்.

சொந்தத் தயாரிப்பில் லாபம் வருவதில்லை என்று கவலையில் இருக்கும் ஒல்லி நாயகன், இனி சொந்தப் படங்களைத் தயாரிக்கப்போ வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.