Published:Updated:

100 படவிழாக்கள்; 84 நாமினேஷன்கள்; 32 விருதுகள்! - செழியனின் `டூ லெட்’ டிரெய்லர்

100 படவிழாக்கள்; 84 நாமினேஷன்கள்; 32 விருதுகள்! - செழியனின் `டூ லெட்’ டிரெய்லர்
100 படவிழாக்கள்; 84 நாமினேஷன்கள்; 32 விருதுகள்! - செழியனின் `டூ லெட்’ டிரெய்லர்

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்குநராக அறிமுகமாகும் டூ லெட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

100 படவிழாக்கள்; 84 நாமினேஷன்கள்; 32 விருதுகள்! - செழியனின் `டூ லெட்’ டிரெய்லர்

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல், 65-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில், தமிழின் சிறந்த திரைப்படமாகவும் `டூ லெட்' தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வ தேசிய திரைப்பட விழாவிலும் சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. `டூ லெட்' பட இயக்குநர் செழியன், தமிழ்த் திரை உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர். பல விருதுகளைப் பெற்றவர்.

கடந்த 2007-ம் ஆண்டில் மென்பொருள் துறை தாக்கத்தால் சென்னையில ஏற்பட்ட மாற்றங்களை மையமா வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் ஐ.டி துறையால் சென்னையில் ஏற்பட்ட மாற்றங்கள், எளிய மக்கள் சந்தித்த பொருளாதாரப் பிரச்னைகள் போன்றவற்றை டூ லெட் படம் பேசியிருக்கிறது.  

100 படவிழாக்கள்; 84 நாமினேஷன்கள்; 32 விருதுகள்! - செழியனின் `டூ லெட்’ டிரெய்லர்

இந்தப் படம் மூலம் கவிஞர் விக்கிரமாதித்தனுடைய மகன் சந்தோஷ் நம்பிராஜன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அதேபோல் ஜீ தமிழின் `அழகிய தமிழ் மகள்’ சீரியல் பிரபலம் ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. டூ லெட் படம் இதுவரை 100 திரைப்பட விழாக்களில் 84 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக டிரெய்லரில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், 32 விருதுகளையும் படம் வென்றிருக்கிறது.