Published:Updated:

``நம்பிய, விரும்பிய சினிமாவைத் தமிழுக்குக் கொடுத்திருக்கார், செழியன்!" - `டுலெட்’ ஷீலா ராஜ்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``நம்பிய, விரும்பிய சினிமாவைத் தமிழுக்குக் கொடுத்திருக்கார், செழியன்!" - `டுலெட்’ ஷீலா ராஜ்குமார்
``நம்பிய, விரும்பிய சினிமாவைத் தமிழுக்குக் கொடுத்திருக்கார், செழியன்!" - `டுலெட்’ ஷீலா ராஜ்குமார்

``சீரியலுக்கு வருவதற்கு முன்பே, செழியன் தயாரிப்பில் `டுலெட்' படத்தில் நடித்து முடித்திருந்தேன். சினிமா எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது." - ஷீலா ராஜ்குமார்

ஷீலா ராஜ்குமார்... ஜி தமிழ் சேனலில் `அழகிய தமிழ் மகள்' சீரியல், 'மனுஷங்கடா' படம் எனக் கவனம் ஈர்த்தவர், தற்போது `டுலெட்' படத்தின் ரீலிஸுக்காக வெயிட்டிங். தற்போது, `கும்பலங்கி நைட்ஸ்' என்கிற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். `டுலெட்' படம் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஷீலா ராஜ்குமார், தன் சினிமாப் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். 

``நம்பிய, விரும்பிய சினிமாவைத் தமிழுக்குக் கொடுத்திருக்கார், செழியன்!" - `டுலெட்’ ஷீலா ராஜ்குமார்

`` `டுலெட்' படம் தேசிய விருது பெற்றது பற்றி?''

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் வீடு வாடகைக்குத் தேடி அலைபவனின் அவலம் பற்றிப் பேசியிருக்கிறது. சாதி, மத பேதங்கள் நம் சமூகத்தை எப்படிக் கவ்விச் செழித்திருக்கிறது என்பதை மிக வலிமையாகச் சொல்லியிருக்கிறது. ஒரு சினிமாக்காரனுக்கு வீடு தர மறுக்கும் சமூகம் 50 ஆண்டுகள் நாட்டைத் தூக்கிக் கொடுத்த அவலத்தைப் பொடனியில் அடித்து விமர்சிக்கிறது. உலக சினிமா என்ற தொடரின் மூலம் பட்டி தொட்டி எங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் மாஸ்டர் பீஸ் படைப்புகளைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்தார், ஒளிப்பதிவாளர் செழியன். தான் ஒளிப்பதிவு செய்த படங்களில் உலக சினிமா தரத்தைக் கொண்டுவர பாடுபட்டார். கோடிக்கணக்கில் முதலீடு தந்து வணிக சினிமாவை உருவாக்கச் சொன்னபோது மறுத்து, சொந்த முதலீட்டில் தான் நம்பிய, தான் விரும்பிய உலக சினிமாவைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். வருங்காலம் செழியனை சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், ஜி.அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் வரிசையில் வைத்துக் கொண்டாடும்.'' 

``உங்களுக்கு நடிப்பு என்கிற விஷயம் எங்கிருந்து ஆரம்பித்தது?"

``நான் ஸ்கூல்ல படிக்கும்போதே பரிசு, பாராட்டுகளுக்காகவே நிறைய நடித்திருக்கிறேன். அப்படி வீட்டை சின்னச் சின்ன பரிசுப் பொருள்களால் நிரப்பினேன். இப்போது என் நடிப்பிற்கான அங்கீகாரத்தை மக்கள் தந்திருக்கிறார்கள். `அழகிய தமிழ் மகள்' சீரியலிலிருந்து விலகிய பிறகும் மக்கள் அந்தப் `பூங்கொடி' கேரக்டருக்குக் கொடுக்கும் அங்கீகாரத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கும்போது ஒரு பெண்கள் வட்டாரம் என்னைச் சுற்றிக் கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது சில காரணங்களால் `அழகிய தமிழ்மகள்' சீரியலிலிருந்து விலகியிருந்தாலும், அதன் தாக்கம் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. சீரியலுக்கு வருவதற்கு முன்பே, செழியன் தயாரிப்பில் `டுலெட்' படத்தில் நடித்து முடித்திருந்தேன். சினிமா எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது." 

``நம்பிய, விரும்பிய சினிமாவைத் தமிழுக்குக் கொடுத்திருக்கார், செழியன்!" - `டுலெட்’ ஷீலா ராஜ்குமார்

``அந்த சீரியலில் கபடி விளையாட்டு வீராங்கனை, டான்ஸர் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தீர்களே?''

`` `அழகிய தமிழ் மகள்' சீரியலுக்கான கதையைக் கேட்டதும் நான் வியந்தது இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றித்தான். என் நிஜ வாழ்க்கையில் எனக்குப் பிடித்த விஷயத்தையே சீரியலிலும் செய்யச் சொல்லியிருக்கிறார்களே என சந்தோஷமாக இருந்தது. எனக்குக் கபடி மீது தீராக் காதல். அப்படி ஒரு முறை கபடி விளையாடும்போது என் கையின் மணிக்கட்டுப் பிசகிவிட்டது. அதிலிருந்து கபடி விளையாடுவதே இல்லை. ஆனால், டான்ஸ் ஆடுவதை ஒருபோதும் விட்டது இல்லை."

``இனியும் கபடி போன்ற விளையாட்டுச் சார்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா?"

``அது என்னுள் ஊறிப்போன விஷயம். எனக்கு இரண்டு விஷயம் ரொம்பப் பிடிக்கும் ஒன்று டான்ஸ் மற்றொன்று கபடி விளையாட்டு. இந்த இரண்டுமே எனக்குப் பிடித்த விஷயம் என்பதால், `அழகிய தமிழ்மகள்' சீரியலில் கிடைத்த கேரக்டர்போல மீண்டும் கிடைத்தால் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்." 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு