‘சின்ன குஷ்பு’ ஹன்சிகா மோத்வானி, ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பாலிவுட்டில் நன்கு அறியப்பட்ட குழந்தை நட்சத்திரம். ஹன்சிகா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

90-களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ‘ஷக்கலக்க பூம் பூம்’ டி.வி தொடர்தான் ஹன்சிகா முதன்முதலில் நடித்தது. அப்போது அவருக்கு வயது 7.

ஹன்சிகாவையும் அவரது அண்ணன் பிரகாஷையும் தனி ஆளாக வளர்த்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் அவரது அம்மா மோனா மோத்வானி. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் தோல் நிபுணராக இருக்கிறார்.

ஹன்சிகாவின் ஸ்ட்ரெஸ் பஸ்டர், படம் வரைவது. ஒரு படத்தை வரைய ஆரம்பித்துவிட்டால், இரவு முழுவதும் தூங்காமல் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அதுவரை நோ சாப்பாடு, நோ கமிட்மென்ட்ஸ்!

குஷ்புவுக்குக் கோயில்கட்டிய ரசிகர்கள், ஹன்சிகாவை ‘சின்ன குஷ்பு’ என்று அழைக்கிறார்கள். 2013-ம் ஆண்டில் ஒருமுறை ஹன்சிகாவுக்கும் கோயில் கட்டலாம் என்று பேச்சு எழுந்தபோது, ‘ரசிகர்கள் என்னை உண்மையாக நேசித்தால், கோயில் கட்டும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்பிறகு அந்தப் பேச்சே எழவில்லை.

ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துக்கொண்டிருந்த ஹன்சிகா, தனது 25-வது பிறந்தநாள் அன்று அந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டார். காரணம், இவர் மும்பை புறநகர் பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றைக் கட்டிவருகிறாராம். அதன் வேலைகள் முடியும்வரை குழந்தைகளைத் தத்தெடுக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

சமூகச் சேவையில் அக்கறை கொண்ட ஹன்சிகா, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் ‘சென்னை டேர்ன்ஸ் பிங்க்’ என்னும் அமைப்பின் தூதுவராகச் செயல்பட்டுவருகிறார்.

தற்போது ஹன்சிகா, ‘மஹா’ என்னும் ஹாரர் திரில்லர் வுமன் சென்ட்ரிக் படத்தில் நடித்து வருகிறார்.

ம்யூட்

சமீபத்தில் இரண்டெழுத்து படத்தில் நடித்து, தோல்வியைச் சந்தித்த நடிகரை வைத்துப் படம் எடுத்து ஹிட்டடித்த இயக்குநர், தனது அடுத்த படத்தை விஸ்வாசமுள்ள நடிகரை வைத்து இயக்கிவருகிறார். இதற்கிடையே, அந்த நடிகரின் அடுத்த படமும் இந்த இயக்குநரையே வைத்து எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், இயக்குநருக்கும் நடிகருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக அடுத்த படம் டிராப் ஆகிறாதாம்.

கருப்பு கண்ணாடி இயக்குநர் தனது அடுத்த படத்தில் ஒரு புதுமுக ஹீரோவை நடிக்க வைப்பதற்காக 50 லட்ச ரூபாயை வங்கியிருந்தாராம். பிறகு, இவரது கதையைக் கேட்ட சூரியவம்சத்து நடிகர், ‘இக்கதையில் நான் நடிக்கிறேன்’ என்று சொல்ல, புதுமுக நடிகரைக் கதையிலிருந்து நீக்கிவிட்டாராம் இயக்குநர்.

சினிமா துறையில் நேர்மையாக உழைக்கும் ஊதா கலர் ரிப்பன் கட்டிய நடிகைக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அப்போதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர், தனது சம்பளத்திலிருந்து பத்து லட்சம் ரூபாயைக் குறைத்திருக்கிறாராம். மேலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு கேட்டுவருகிறாராம்.