Published:Updated:

மீண்டும் செல்போனைத் தட்டிவிட்ட சிவகுமார்! - வைரலாகும் வீடியோ

தார்மிக் லீ
மீண்டும் செல்போனைத் தட்டிவிட்ட சிவகுமார்! - வைரலாகும் வீடியோ
மீண்டும் செல்போனைத் தட்டிவிட்ட சிவகுமார்! - வைரலாகும் வீடியோ

நடிகரும் இயக்குநருமான இ.ராம்தாஸ் வீட்டின் இல்லத் திருமண விழாவில் ஏராளமான திரைப் பிரபலங்களுடன் நடிகர் சிவகுமாரும் கலந்துகொண்டார். அப்போது வாசலுக்கு அருகே நடந்து வந்துகொண்டிருந்த சிவகுமாரின் அருகே நின்று ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். கடும் கோபத்தோடு செல்போனைத் தட்டிவிட்டுச் சென்றார் சிவகுமார். ட்விட்டர், ஃபேஸ்புக் என நேற்றில் இருந்து இந்த வீடியோதான் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

கடந்த ஆண்டு மதுரையில் நடந்த தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டார். அந்தச் சமயத்தில் அவருக்கு அருகே வந்ததும் அவரின் ரசிகர் ஒருவர் அவருடன் நின்று செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். கோபமடைந்த சிவகுமார் போட்டா எடுப்பதற்கு முன்பே அவரின் செல்போனைத் தட்டிவிட்டார்.  2018 வைரல் வீடியோக்கள் லிஸ்டில் இதுதான் டாப் இடத்தைப் பிடித்திருந்தது.

மேலும், அது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட ராகுலுக்கு, புதிதாக ஒரு செல்போனையும் வாங்கிக்கொடுத்தார். இதைத் தொடர்ந்து நேற்று இ.ராம்தாஸ் வீட்டின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள சிவகுமாரும் வந்திருந்தார். நுழைவு வாயிலுக்கு அருகே வந்துகொண்டிருந்த சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது கோபமடைந்த அவர், அந்த இளைஞரின் செல்போனை மீண்டும் ஒரு முறை தட்டிவிட்டார். நேற்றிலிருந்து இந்த வீடியோதான் வைரலாகிக்கொண்டிருக்கிறது.