Published:Updated:

`ஹீரோயின் இல்லை; கதைக்குத்தான் முக்கியத்துவம்’ - கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்!

தார்மிக் லீ
`ஹீரோயின் இல்லை; கதைக்குத்தான் முக்கியத்துவம்’ - கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்!
`ஹீரோயின் இல்லை; கதைக்குத்தான் முக்கியத்துவம்’ - கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்!

சந்தோஷ் ஜெயக்குமார், `இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ஹர ஹர மஹாதேவகி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் கௌதம் கார்த்தியுடன் இணைகிறார். இந்தப் படத்துக்கு 'தீமைதான் வெல்லும்' என்று டைட்டில் வைத்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு விமான நிலையத்தில் இருந்தவரை தொடர்புகொண்டு பேசினேன். 

``மூனாவது முறையா நானும் கௌதமும் சேர்ந்து படம் பண்றோம். படத்துல ஹீரோயின் இல்லை. படம் ஆரம்பிச்ச முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர்ல ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கேன். படத்துடைய முதல் போர்ஷன் கோவால ஷூட் பண்றோம். வெளிநாடுகள்லேயும் சில நாள்கள் ஷூட்டிங் இருக்கும்.

மார்ச் 20 சமயத்துல படத்துடைய ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். படத்துடைய பெயர் 'தீமைதான் வெல்லும்'. இந்தக் கதைக்கு கௌதம்தான் கரெக்ட்டா இருப்பார்னு அவரை தேர்ந்தெடுத்தேன். ஒளிப்பதிவாளர் பல்லு, இசையமைப்பாளர் இமான், எடிட்டிங் பிரசன்னா ஜி.கே இந்தப் படத்துக்காக வொர்க் பண்றாங்க. ஒட்டுமொத்த படமுமே ரொம்ப ராவா இருக்கும்." என்று பேசி முடித்தார்.