Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

மார்வெல் ஸ்டுடியோஸ் படங்களில் ஏஜென்ட் ஃபியூரியாக நடித்திருப்பவர் சாமுவெல் எல் ஜாக்ஸன். தற்போது, கேப்டன் மார்வெல் படத்தின் புரொமோஷனல் நிகழ்ச்சியில் பேசிய இவர். தான் பாகுபலி படத்தின் பெரிய ரசிகர் என்றும், ராஜமௌலியின் பெரிய விசிறி என்றும் தெரிவித்திருக்கிறார். ‘பாகுபலி 3’ படம் எடுக்கப்பட்டால் அதில் நடிக்கவும் ஆசைப்படுவதாகப் பேசியுள்ளார். ஹாலிவுட் கட்டப்பா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘ஐரா’, `மிஸ்டர் லோக்கல்’ படங்களைத் தொடர்ந்து மலையாளத்தில்  நயன்தாரா நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’  படத்தில் நடித்துவருகிறார். முடித்தவுடன் ‘சந்திரமுகி’ படத்துக்குப் பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்கிறார். அதன் பிறகு விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒரு படத்தைத் தயாரித்து நடிக்கவிருக்கிறாராம். நயன் ரொம்ப பிஸி!

இன்பாக்ஸ்

17 ஆண்டுகளுக்குப் பிறகு சல்மான்கானும் ஷாருக்கானும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். 2002-ல் வெளியான ‘ஹம் துமாரே ஹே(ன்) சனம்’ என்ற படத்தில்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்திருந்தினர். அதற்குப் பிறகு இருவரும் மற்றவர்களுடைய படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருந்தாலும், இப்போது சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்கப்போகும் படத்தில்தான் முழுமையாக இணையப் போகிறார்கள் என்று பரபரப்பாகி யிருக்கிறது பாலிவுட். கிசுகிசுவாக இந்தத் தகவல் பரவிக்கொண்டிருக்க, `தபாங்’ படத்தின் மூன்றாம் பாகம் முடித்ததும் இந்தப் பட ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது என்று சொல்லியிருக்கிறது சல்மான் தரப்பு! இதும் டபிள் தமாக்காதான்!

‘அசுரன்’ படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துக்கொண்டிப்பதாகத் தகவல் வருகிறது. அதற்கடுத்து துரை.செந்தில்குமார் படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். டபுள் தமாக்கா!

இன்பாக்ஸ்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார். இந்தியா முழுக்கச் சுற்றி, பெண்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் என, சந்தித்துப் பேசிவருகிறார். இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக மும்பையைச் சேர்ந்த பள்ளிக்குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கு கூகுளின் `போலோ' என்கிற செயலியை அறிமுகப்படுத்தி, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அவரே அருகில் அமர்ந்து கற்றுக்கொடுத்திருக்கிறார். ஸ்பீச் ரெகக்னிஷன் மற்றும் டெக்ஸ்ட் டு ஸ்பீச் தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் இந்தச் செயலியின் உதவியோடு படிப்பறிவே இல்லாதவர்கள்கூட (இந்தி வழி) ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் வாசிக்கவும் இயலும் என்கிறார்கள். மிஸ்டர் கூல் கூகுள்!

இன்பாக்ஸ்

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், DP ஹப் ஸ்டைல் எனும் ஸ்டைலிங் நிறுவனம் செய்தித்தாள்களை வைத்து வித்தியாச உடையைத் தயாரித்து, மறுசுழற்சி மற்றும் மக்கும் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த Ruffled ஸ்கர்ட் கவுனை வடிவமைக்க, ஐந்து கிலோ செய்தித்தாள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வித்தியாச போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்தவர் நடிகை நயனா. செய்திகள் உடுத்துவது...

இன்பாக்ஸ்

‘நேர்கொண்ட பார்வை’  படத்துக்குப் பிறகு  சிவா இயக்கும் திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அதற்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் அதிரடி அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார் அஜித். ‘விஸ்வாசம்’ படத்தில் ஹிட்டடித்த தயாரிப்பாளர் - நடிகர் கூட்டணி என்பதால் வினோத் இன்னும் ஷார்ப்பாகத் திரைக்கதையைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கிறாராம். விவகாரம்னு டைட்டில் வைங்க ஜி!    

இன்பாக்ஸ்

PINK ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் வித்யாபாலனுக்குத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு
ஏ.எல். விஜய் இயக்கவிருக்கும் ‘தலைவி’ படத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல். குட்டி ராதிகா நடிப்பில் கன்னடத்தில் வெளியாகவுள்ள ‘தமயந்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. வெல்கம் வித்யா!

இன்பாக்ஸ்

போர்க்களத்தில் உயிர்துறந்த வீரர்களுக்கு கிரிக்கெட் களத்தில் மரியாதை செய்திருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியு டனான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, புல்வாமா தாக்குதலில் மறைந்த ரிசர்வ் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக,  நீல நிறத் தொப்பிக்குப் பதிலாக, ராணுவத் தொப்பியுடன் களமிறங்கியது இந்திய அணி, அதோடு ராஞ்சி ஒருநாள் போட்டியின் ஊதியத்தையும், ராணுவ வீரர்களின் குடும்பங் களுக்காக தேசியப் பாதுகாப்பு நிதிக்கு அளித்துள்ளது மென் இன் புளூ!  போடு சல்யூட்