அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ம்யூட்

* திருமணத்துக்காக மதம் மாறிய வாரிசு நடிகருக்கு அடுத்த மாதம் டும் டும் டும். திருமணத்தை

மிஸ்டர் மியாவ்

எளிமையாக வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார்களாம்!

* பெண் பேய் பெயர் கொண்ட படத்தின் மூன்றாவது பாகம், ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. காரணம், படத்தின் இயக்குநரும் நடிகருமான மாஸ்டர்தானாம். திரும்பவும் ஷூட்டிங் போவதாக அவர் சொல்ல... தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளதாம்!

* வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்த இயக்குநரின் கதையிலிருந்து, அடுத்தது ஹீரோக்கள் விலகிக்கொள்ள, தற்போது அந்த லிஸ்ட்டில் வம்பு நடிகரும் சேர்ந்துகொண்டராம். காரணம், சிவக்கச் சிவந்த சிவமானவராம்.

* சமீபத்தில் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார், வரம் நாயகி. பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு ஆசையாக ஒரு பட்டம் வழங்கியது, ஒரு குரூப். ‘அந்தப் பட்டம் எங்கள் நாயகிக்குச் சொந்தமானதாக்கும்...’ என்று பொங்கிவிட்டார்கள், இன்னொரு முன்னணி நாயகியின் ரசிகர்கள்.

அறிமுகமான காலம் தொட்டு அதே இளமையுடன் இன்றைக்கும் சினிமாவில் ஜொலித்துவருபவர், நடிகை த்ரிஷா. அவர் வசித்துவரும் ஆழ்வார்பேட்டை ஏரியாவில் இந்த வாரம் வலம்வந்தார் மிஸ்டர் மியாவ்.

* வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனது த்ரிஷாதானாம். ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக, அதில் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டது.

மிஸ்டர் மியாவ்

* ‘மிஸ் சென்னை’ பட்டம் வென்றவுடன், ‘காதல் வைரஸ்’ படத்தில் த்ரிஷாவை நடிக்கவைக்க, அவரின் அம்மாவிடம் கேட்டிருக்கிறார் இயக்குநர் கதிர். அப்போது த்ரிஷா படித்துக்கொண்டிருந்ததால், மகளுக்கு வந்த அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டராம் தாயார்.

* ‘நல்லா டான்ஸ் பண்ணுவாங்க’ என்ற பெயர் த்ரிஷாவுக்கு உண்டு. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில், ‘பாடல் காட்சிக்கு நடனம் ஆட வாங்க’ என்று கூப்பிட்டாலே அவரது மனதுக்குள் உதறல் எடுக்கத் தொடங்கிவிடுமாம்.

மிஸ்டர் மியாவ்

* சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து இப்போது வரைக்கும், த்ரிஷாவின் உடல்வாகில் எந்த வித்தியாசமும் இல்லை. உணவில் எந்தவொரு டயட்டையும் அவர் கடைப்பிடிப்பதில்லையாம். சாக்லேட் என்றால் இவருக்கு அதிகம் பிடிக்குமாம்.

* ஜிம் வொர்க்அவுட்டுக்கு அதிக நேரம் செலவிடும் த்ரிஷா... யோகா, தியானப் பயிற்சிகளைத் தவறாமல் கடைபிடிக்கிறாராம்.

* உணவுப் பிரியையான த்ரிஷாவுக்கு, அட்டகாசமான ஓர் உணவகம் ஆரம்பிக்க வேண்டுமென்று ஆசையாம்.

* நாய்கள் என்றால் த்ரிஷாவுக்கு அதிகப் பிரியம்.

மிஸ்டர் மியாவ்

* யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கான நல்லெண்ணத் தூதர் பொறுப்பை வகித்துள்ளார், த்ரிஷா.

* ‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்று த்ரிஷாவிடம் கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார் என்று தெரியவில்லை. ஆனால், இவருக்குப் பேய் நம்பிக்கை உண்டாம்.

* ஒரு படத்தின் கதையைக் கேட்கும்போது, அதில் குழப்பம் ஏற்பட்டால் தன் அம்மாவிடம்தான் இவர் தீர்வுகேட்பாராம். அவரின் அம்மா கதையைக் கேட்டு விட்டு ஓகே சொன்னால் உடனே நடித்து விடுவாராம்.