Published:Updated:

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

Published:Updated:
நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

சுற்றிலும் தமிழ், ஆங்கில நூல்கள் பரவிக் கிடக்கின்றன இயக்குநர் சர்ஜுனின் அறையில்... ‘லக்ஷ்மி’, ‘மா’ குறும்படங்களின் வழி பரவலாக அறியப்பட்டவர். இப்போது நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ என்கிற படத்தை முடித்துவிட்டார். அவரின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

“ ‘லக்‌ஷ்மி’, ‘மா’ குறும்படங்களுக்கு முன், சர்ஜுன் யார்?”

“சென்னை திருவல்லிக்கேணியில பிறந்து, வளர்ந்த பையன் நான். கிரசண்ட் யுனிவர்சிட்டியில இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, ‘விப்ரோ’வுல மூணு வருடம் வேலை பார்த்தேன். அந்த வேலை பிடிக்காம, ராஜிவ் மேனன் சார் இன்ஸ்டிட்யூட்ல ஒளிப்பதிவு படிச்சேன். அப்போ, மணிரத்னம் சார் ‘பொன்னியின் செல்வன்’ பட வேலைகளில் இருந்தார். நல்லா தமிழ் எழுதப்படிக்கத் தெரிஞ்ச ஆள் வேணும்னு கேட்டிருந்தப்போ, அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ‘பொன்னியின் செல்வன்’ பாதியிலேயே நிற்க, மணி சார் ‘கடல்’ எடுத்தார். அந்தப் படத்துலயும், அவரோட ‘ஒகே கண்மணி’யிலயும் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். இதுக்கிடையில முருகதாஸ் சாரின் ‘கத்தி’யில வொர்க் பண்ணினேன். ஆனா, என்னை  ‘லக்‌ஷ்மி’, ‘மா’ குறும்படங்களின் இயக்குநராகத்தான் மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு. நான் மணி சார், முருகதாஸ் சார்கிட்ட வொர்க் பண்ணுனதுதான், என் சினிமா அறிவுக்கான அடிப்படை.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

“சரி, `ஐரா’ பத்திச் சொல்லுங்க, ஐராவதம் கேள்விப்பட்டிருக்கோம்... அதென்ன ஐரா?”

“ஐராவதத்துல இருந்து எடுத்ததுதான், ‘ஐரா.’ இது ஒரு ரிவெஞ்ச் டிராமா. படத்துக்கு ‘ஐராவதம்’னுதான் டைட்டில் வைக்கிறதா இருந்தது. தேவேந்திரனோட சேனையில் சாகா வரம் பெற்ற வெள்ளை யானைதான் ஐராவதம். யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம். எத்தனை வருடம் ஆனாலும், அது தனக்கு நடந்த விஷயத்தை ஞாபகம் வெச்சிருக்கும். யானையின் இந்தக் குணங்கள் படத்தின் மெயின் கேரக்டருக்குப் பொருந்திப்போனதுனால, ‘ஐராவதம்’னு வைக்கலாம்னு இருந்தோம். அந்த டைட்டில்  ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டதால், ‘ஐரா’ன்னு மாத்திட்டோம்.”

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

“என்ன கதை?”

“ரொம்பத் துடிப்பான ஒரு பொண்ணு பண்ற ஒரு விஷயம், ஏதோ ஒரு மூலையில இருக்கிற இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில என்ன விளைவுகளைக் கொண்டு வருதுங்கிறதுதான் கதை. இதை ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லரா சொல்லியிருக்கோம். பெண்கள் பல இடங்களில் சந்திக்கிற பிரச்னை உருவ கேலி. அதையும் இந்தப் படம் பேசும்.” 

“நயன்தாரா இதில் என்ன ஸ்பெஷல்?”


“முதல் முறையா இந்தப் படத்துல டபுள் ஆக்‌ஷன் பண்றாங்க. யமுனா, எல்லாத்தையும் பயமே இல்லாம எதிர்கொள்ளும் கேரக்டர், பத்திரிகையாளர். ரெண்டாவது கேரக்டர், பவானி. வெள்ளந்தியான, பயந்த சுபாவம் உடைய பெண். இந்தக் கதையை நயன்தாரா மேடம்கிட்ட சொல்லும்போது, பவானி கேரக்டர்ல அவங்க நடிக்கிறதா இல்லை. ஏன்னா, ப்ளாஷ்பேக்ல வர்ற சின்ன கேரக்டர் அது. வேற ஒரு நடிகைதான் நடிக்கிறதா இருந்தது. 63 படங்கள் பண்ணியிருக்காங்க, நயன்தாரா. இதுல ஏதாச்சும் ஸ்பெஷலா இருக்கட்டும்னு, ‘நீங்களே பவானி கேரக்டரையும் பண்ணுனா நல்லா இருக்கும்’னு சொன்னேன். கொஞ்சம் யோசிச்சிட்டு சம்மதிச்சாங்க. பவானி பெரிய அளவுல பேசப்படுற கேரக்டரா இருக்கும்!”

நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...

“இந்த வாய்ப்பு எப்படி உங்களுக்குக் கிடைத்தது?”

“என் முதல் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ‘ஐரா’ வாய்ப்பு கிடைச்சதுதான், ட்விஸ்ட். ‘மா’ குறும்படத்தைப் பார்த்துட்டு தயாரிப்பாளர் ராஜேஷ் எனக்கு போன் பண்ணினார்.  நயன்தாரா மேடத்துக்கும் அந்தப்படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘நயன்தாரா மேடத்துக்கு ஏதாச்சும் கதை இருக்கா, ஒரு ஹாரர் படமா இருந்தா நல்லா இருக்கும்’னு ராஜேஷ் சார் சொன்னார். கதையை ரெடி பண்ணி, நயன்தாராவிடம் சொல்லி, அன்னைக்கு சாயங்காலமே அட்வான்ஸோட திரும்பினேன். இது ஏதோ மேஜிக் மாதிரி தெரியலாம். ஆனா, நிஜமா எனக்கு அப்படித்தான் நடந்தது.” 

“படத்தின் பாடல்களும், வரிகளில் இடம்பெற்ற சில வார்த்தைகளும் வித்தியாசமா இருக்கே?”

“இசை, சுந்தரமூர்த்தி. என் முந்தைய படங்கள்ல இருந்து கூடவே இருக்கார். இசையில் வெரைட்டி காட்டியிருக்கார். பாடல் வரிகளில் புதுசா வார்த்தைகள் வேணும்னு தாமரை மேடம்கிட்ட சொன்னேன். கவிஞர் காளிதாசன் எழுதிய வார்த்தை செட் ஆகும்னு அவங்க சேர்த்ததுதான், ‘மேக தூதம்’. ‘காரிகா’ வார்த்தையைப் பாடல்ல கொண்டு வந்தது, மதன் கார்க்கி.”

“ ‘லக்‌ஷ்மி’, ‘மா’ குறும்படங்களும் சரி, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ஐரா’ படங்களும் சரி... எல்லாமே பெண்களை மையப்படுத்திய கதைகளாவே இருக்கே?!”

“அதுக்குக் காரணம், என் வாழ்க்கையில நான் கடந்து வந்த பெண்கள்தான். அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி, காதலினு நான் சந்திச்ச பெண்கள் எனக்குக் கொடுத்த விஷயம், அந்த உணர்வுகள் என் கதையில பிரதிபலிக்குதுன்னு நினைக்கிறேன்.”

- அலாவுதின் ஹூசைன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism