‘நீ எதை வெச்சுத் தாக்குறியோ, அதுவே உன்னைத் திரும்பி வந்து தாக்கும்...’ - ‘பூமராங்’ சொல்லும் தத்துவம் இதுதான்.

சுமார் மூஞ்சியிலிருந்து, சூப்பர் மூஞ்சியாக மாறுகிறது, அதர்வாவின் கதாபாத்திரம். பிறகு அவருக்கு வரும் பிரச்னைகள், அதற்குப் பின்னணியிலிருக்கும் கார்ப்பரேட் நிறுவனம், இடையிடையே விவசாயம் அழிவதற்குப் பின்னாலிருக்கும் அரசியல், நதிநீர் இணைப்பு, தண்ணீர்ப் பிரச்னை, காதல் என எல்லாம் கலந்துகட்டிக் கொடுத்திருக்கிறார் ஆர்.கண்ணன்.

இரு நபர்களை ஒன்றாக்கி, மற்றொரு நபர் யாரென்றே காட்டாமல் கதையை நகர்த்திய விதம் புதுமை!

இதயம், கண்கள், கிட்னி என வரிசையாக மாற்று அறுவை சிகிச்சை செய்துவந்த தமிழ் சினிமாவுக்கு, முகமாற்று அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். `Face Off’ காலத்து விஷயம்தான் என்றாலும், பின்னிப் பெடலெடுத்திருக்க வேண்டிய திரைக்கதை. ஆனால், ஒரு கட்டத்திற்குமேல் கதைக்குள் செல்லாமல், பூமராங்போல திரும்பியும் வராமல், எங்கோ தொலைந்து போகிறது.

சிவா - சக்தி இரண்டு கேரக்டர்களுக்கும் ஸ்மார்ட்டாகப் பொருந்தியிருக்கிறார், அதர்வா. ஐடி ஊழியராக அப்ளாஸ் அள்ளுவதும், விவசாயப் பிரச்னைக்காகக் குரல் கொடுத்து அடிவாங்குவதுமாக அசத்தல். முறைக்கிறதை மட்டும் கொஞ்சம் குறைச்சிருக்கலாம் ப்ரோ!

மேகா ஆகாஷ், வழக்கமான கமர்ஷியல் படங்களில் வழக்கம்போல வந்துபோகும் கதாபாத்திரம். அவரைவிட அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார் இந்துஜா.

அளவாகப் பேசும் சதீஷ், முதல் பாதியில் ஒன்லைனர்களை டன் கணக்கில் இறக்கிவைக்க, இரண்டாம் பாதியில் அதிகமாகப் பேசும் ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்துகொள்கிறார். நகைச்சுவை ஓரளவு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. வில்லன் உபன் பட்டேலுக்கு உதிரி கேரக்டர். சுஹாசினிக்கும் பெரிதாய் ஸ்கோப் இல்லை.

ரதன் இசையில் பாடல்கள், 90-களின் ஏ.ஆர். ரஹ்மானையும், யுவனையும் நினைவுபடுத்துகின்றன. சில இடங்களில் பின்னணி இசை ஈர்க்கிறது. ஆர்.கே.செல்வாவின் எடிட்டிங் ஓகே. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு அத்தனை காட்சிகளுக்கும் பலம். ப்ரீத்திஷீல் சிங் (Preetisheel Singh) குழுவின் பிராஸ்தெடிக் ஒப்பனையைக் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டும். அத்தனை நேர்த்தி!

பேசாத விவசாயப் புரட்சியையெல்லாம் பேசி விட்டு, அதிலேயே குரூப் டான்ஸ் போடுவது ‘எல்லாம் நடிப்பா கோப்பால்...’ டோனில் இருக்கிறது.

நீட், 10,000 கோடி கடன், ஆதார், நதி நீர் இணைப்பு... எல்லாப் பிரச்னைகளையும் நுனிப்புல் மேய்ந்து வசனம் பேசுகிறார்கள். குறிப்பாக, நதி நீர் இணைப்பு, ஊழல் போன்றவற்றில் இணையப் போராளிகள் அளவுக்கான புரிதல்தான் படத்திலும்!

அவ்வபோது வருகிற அபாரமான ஒன்லைன் களும், நடிகர்களும் ஸ்கோர் செய்ததுபோல, காட்சி அமைப்பும் திரைக்கதையின் நேர்த்தியும் கைகூடி வந்திருந்தால் ‘பூமராங்’ கச்சிதமாகச் சுழன்றிருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு