Published:Updated:

சத்ரு - சினிமா விமர்சனம்

சத்ரு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சத்ரு - சினிமா விமர்சனம்

சத்ரு - சினிமா விமர்சனம்

சத்ரு - சினிமா விமர்சனம்

சத்ரு - சினிமா விமர்சனம்

Published:Updated:
சத்ரு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சத்ரு - சினிமா விமர்சனம்

டமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்க, கயவர்களை வேட்டையாடி விளையாடும் காவல்துறை அதிகாரியின் அதே பழைய காலத்துக் கதை!

மீசை, புல்லட், கூலிங் க்ளாஸ் என  நேர்மையான அதிகாரிக்கான பத்துப் பொருத்தங்களும் கொண்டவர் எஸ்.ஐ கதிரேசன். ஒரு வழக்கில் குழந்தைக் கடத்தல் கும்பலுக்கும் அவருக்கும் பகை உண்டாகிறது. அந்தக் கும்பல், கதிரின் குடும்பத்துக்குக் குறி வைக்கிறது. அதிலிருந்து கதிர் தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, இல்லையா என்பதே சத்ருவின் கதை.

சத்ரு - சினிமா விமர்சனம்

எஸ்.ஐ கதிரேசனாக, கதிர். மிடுக்காக இருக்கிறார், துடுக்காக நடித்திருக்கிறார்; மெனக்கெடல்கள் பெரிதாய் இல்லாமல் போகிறபோக்கில் எக்ஸ்பிரஷன்களை அள்ளித் தெளித்திருக்கிறார். வில்லன் பிரபாகரனாக, லகுபரன்.  அயர்ன் பண்ணாத சொக்காய், ஷேவ் பண்ணாத முகத்தோடு ஆம்னியில் ஆட்களைக் கடத்தும் வில்லன். பாத்திரப் படைப்பு ஓல்டாக இருந்தாலும் நடிப்பில் கோல்டு மெடல் வாங்குகிறார்.

கதிரின் காதலியாக வருவதைப் பார்க்கும்போது, சிருஷ்டி டாங்கேதான் படத்தின் நாயகியோ எனத் தோன்றுகிறது.  மருத்துவமனை ஒன்றில் சும்மா உட்கார்ந்து போனை நோண்டும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் கதிருக்கு டார்ச்சர் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மாரிமுத்து. பொன்வண்ணன், நீலிமா, பவன், சுஜா வருணி ஆகியோரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

விறுவிறுப்பான போலீஸ் த்ரில்லர் படம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார், நவீன் நஞ்சுண்டான். படம் பார்க்கும்போது ஆங்கிலப்படங்கள் நினைவுக்கு வந்தால்கூடப் பரவாயில்லை, நம் ஊர் போலீஸ் படங்களே நினைவில் வந்து போவதுதான் கொடுமை. நேர்மையான காவல் ஹீரோ, `டார்ச்சர்’ மேலதிகாரி, அரைக்கை டி-ஷர்ட் போட்டுக்கொண்டு துப்பாக்கியோடு அலைந்து செத்துப்போகும் போலீஸ் நண்பர்கள், போன் மிரட்டல்கள் என,  சலித்துப்போன கதை `லத்தி சார்ஜ்’ என்றால்,  நாம் நினைப்பதைப் போலவே நகரும் காட்சிகள் `ஷூட்டிங் ஆர்டர்.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்ரு - சினிமா விமர்சனம்

இரண்டு நாள் இரவில் நடக்கும் கதை எனும்போது, லாஜிக் துல்லியமாய் இருக்க வேண்டாமா... எந்தப் பிரச்னை நடந்தாலும், எங்கிருந்தாலும் புல்லட்டை ஸ்டார்ட் செய்து ஜியாகிராபிக்கே சவால்விடுகிறார் கதிர். யாரையும் போகிற போக்கில் போட்டுத்தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார் ஹீரோ.

படத்தில் ஈர்க்கக்கூடிய விஷயங்கள், இடை இடையே பரபரக்கும் சில சேஸிங் காட்சிகள் மட்டுமே. வண்ணங்களை அள்ளிக் கொட்டி யிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. சில கோணங்கள் ‘அட’ சொல்ல வைக்கின்றன. படத் தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, சத்ருவை இன்னும் கொஞ்சம் `சரக் சரக்’ என வெட்டியிருக்கலாம். அம்ரீஷ் இசையில் `பேட்ட’ தீம் எல்லாம் உள்ளே வந்துபோகிறது.

பழகிய கதையும் பழகிய காட்சிகளும் படத்துக்கு ‘சத்ரு.’

- விகடன் விமர்சனக் குழு