Published:Updated:

''செளந்தர்யாவும் விசாகனும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்'' - வாழ்த்தும் கண்ணதாசன் மருமகள் ஜெயந்தி

''செளந்தர்யாவும் விசாகனும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்'' - வாழ்த்தும் கண்ணதாசன் மருமகள் ஜெயந்தி
''செளந்தர்யாவும் விசாகனும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்'' - வாழ்த்தும் கண்ணதாசன் மருமகள் ஜெயந்தி

டிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகனுக்கும் நாளை மறுதினம் ( பிப்ரவரி 10-ம் தேதி) ரஜினியின்  போயஸ் கார்டன் வீட்டிலேயே நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் திருமணம் நடக்க உள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், இன்று எளிமையான ஒரு கெட் டு கெதருக்கு ஏற்பாடு செய்திருந்தார், அப்பா ரஜினிகாந்த். இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு வந்த கண்ணதாசனின் மருமகள் ஏ.எல். ஜெயந்தியிடம் பேசினோம். 

''ரொம்ப எளிமையா, அழகா நடந்துச்சு அந்த ஃபங்ஷன். இதுல அதிகமா சினிமா பிரபலங்களை நான் பார்க்கலை. சினிமாவைத் தாண்டி ரஜினியுடன் பழகுகிற நல்லி செட்டியார், வாசன், அப்புறம் ரஜினி சாருடைய ஆடிட்டர், பேங்கர்ஸ், சொந்தக்காரங்கன்னு  நான்-சினிமாட்டிக் பீப்பிள் முகங்களாகத்தான் விழா முழுக்க இருந்துச்சு. ஃபங்ஷன் முழுக்க ரஜினி, மணமகன் பக்கத்திலேயே நின்னுக்கிட்டிருந்தார். 

என்னுடைய கணவர் கண்ணப்பனும் ரஜினியும் ஒரே நேரத்துல சபரிமலைக்குப் போகணும்னு முடிவெடுத்து,  குருசாமி எம்.என். நம்பியார்கிட்ட மாலை போட்டாங்க. அதனால், என் வீட்டுக்காரர் எப்பவுமே ரஜினியை 'ரஜினி சாமி'ன்னும், அவர் என் வீட்டுக்காரரை 'கண்ணப்பன் சாமி'ன்னும்தான்  பரஸ்பரம் கூப்பிட்டுப்பாங்க. நான், இன்னிக்கு ஃபங்ஷனுக்குப் போனதும், 'நான் கண்ணப்பன் சாமி ஒய்ஃப்... ரஜினி சாமி எப்படியிருக்கீங்க'ன்னு ஜாலியாகக் கேட்டதும், உற்சாகமா சிரிக்க ஆரம்பிச்சிட்டார். 

விழாவுக்கு வந்தவங்க அத்தனை பேரையும் பேச்சு சுவாரஸ்யத்திலேயும்,  ஒருத்தரை கவனிக்கும்போது இன்னொருத்தரை மிஸ் பண்ணிடக் கூடாது அப்படிங்கிறதுலேயும் ரஜினி ரொம்ப பதற்றமா இருந்தார். லதா ரஜினியோ, 'கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்'னு அன்பு வேண்டுகோள்  வச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்ககிட்ட எப்பவுமே, தான் ஒரு  ஸ்டாரோட மனைவிங்கிற தோரணை இருக்காது. அதுவும் இன்னிக்கு, மணமகளுக்கு அம்மாவாக எங்களை மாதிரி விருந்தினர்களை எல்லாம் டைனிங் டேபிள் வரைக்கும் அழைச்சுக்கிட்டு போய் கவனிச்சது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ரிட்டர்ன் கிஃப்ட்டில் வேப்ப விதை அடங்கின உருண்டை கொடுத்திருந்தாங்க'' என்றவர், நாளை நடக்க இருக்கிற செளந்தர்யாவின் திருமணம் குறித்தும் பேசினார். 

'''நாளைக்கு, வீட்டிலேயே ராதா கல்யாண வைபவம் நடக்க இருக்குது. ஞாயிற்றுக்கிழமை இருபக்கத்து நெருக்கமான சொந்தக்காரங்களை மட்டும் அழைச்சு, வீட்டிலேயே எளிமையா திருமணம் பண்ணப்போறாங்க. அப்புறம், ரிசப்ஷன் திங்கள்கிழமை காலையில லீலா பேலஸில் நடக்க இருக்குது. என்னைப் பொறுத்தவரை, இன்னிக்கு செளந்தர்யாவும் விசாகனும் எப்படி சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு தம்பதி சமேதரராக நின்னாங்களோ, அதேமாதிரி அவங்களோட வாழ்நாள் முழுக்க சந்தோஷமா இருக்கணும்'' என்று மனம் நிறைந்து பேசி முடித்தார் ஜெயந்தி கண்ணப்பன்.