Published:Updated:

இந்தியாவின் முதல் ஒட்டகப் படம் `பக்ரீத்’ டீசர் ரிலீசானது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியாவின் முதல் ஒட்டகப் படம் `பக்ரீத்’ டீசர் ரிலீசானது
இந்தியாவின் முதல் ஒட்டகப் படம் `பக்ரீத்’ டீசர் ரிலீசானது

இந்தியாவின் முதல் ஒட்டகப் படம் `பக்ரீத்’ டீசர் ரிலீசானது

கோலிவுட்டில் அடுத்த சீசன் அனிமல் ஜானர் படங்கள்தாம். கொரில்லா, மான்ஸ்டர், வாட்ச்மேன் எனப் படையெடுக்க ஆரம்பித்துள்ளன  படங்கள். அந்த வகையில் இயக்குநர் ஜக்தீச சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒட்டகம் `சாலா’ நடித்திருக்கும் திரைப்படம் `பக்ரீத்'. இப்படத்தின் டீசரை அட்லீ, ஆர்யா, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படம் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வசுந்த்ரா காஷ்யப் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்கிறார். திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். ஒரு நிலப்பரப்பில் வாழும் ஒட்டகத்தை அதனுடைய இடத்தை விட்டு வேறு இடத்தில் வளர்க்க ஆசைப்படும் ஹீரோ விக்ராந்த். அந்த ஒட்டகத்தை ராஜஸ்தானுக்குத் திரும்பக் கொண்டு செல்ல முற்பட்டு என்னென்ன தடைகள் எதிர்கொள்கிறார் என்பதை பக்ரீத் டீசர் காட்டுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு