Published:Updated:

"ப்ரியா பவானி சங்கரை உருகவைத்த ராஜ்வேல் யார்?!"

"ப்ரியா பவானி சங்கரை உருகவைத்த ராஜ்வேல் யார்?!"

ப்ரியா பவானி சங்கரின் பாய் ஃப்ரெண்ட் ராஜ்வேல் யார்?

"ப்ரியா பவானி சங்கரை உருகவைத்த ராஜ்வேல் யார்?!"

ப்ரியா பவானி சங்கரின் பாய் ஃப்ரெண்ட் ராஜ்வேல் யார்?

Published:Updated:
"ப்ரியா பவானி சங்கரை உருகவைத்த ராஜ்வேல் யார்?!"

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்களுக்கு அறிமுகமானவர், ப்ரியா பவானி சங்கர். வசீகரமான இவரது முகம் சீரியலுக்குக் கொண்டு வந்தது. 'சீரியலா, சான்ஸே இல்ல' என முதலில் தயங்கியவர், கடைசியில் 'ஒரேயொரு சீரியல் ட்ரை பண்ணலாமே' எனச் சம்மதித்தார். இவர் ஹீரோயினாக அறிமுகமாகி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடருக்கு சீரியல் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த சீரியல் கொடுத்த புகழில் விளம்பரப் பட வாய்ப்புகளும் வரிசை கட்டின. தொடர்ந்து சினிமா வாய்ப்புகளும் வர, ஒரே சீரியலுடன் டிவி-க்கு டாட்டா சொன்னார்.

அப்போதுதான் முதன் முதலாகக் கிளம்பியது அந்த டாக். 'ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார்; எனவேதான் சீரியலிலிருந்து வெளியேறினார்' எனக் கிளம்பிய அந்தப் பேச்சுக்குப் பிள்ளையார் சுழி போட்டவை, இணையத்தில் உலாவிய சில புகைப்படங்கள். கல்லூரியில் தன்னுடன் படித்த ராஜவேல் என்பவருடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவை.

'இருவரும் காதலிக்கிறார்களா?' எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ப்ரியா தரப்பில் 'ஆமாம்' என்றோ 'இல்லை' என்றோ எந்தப் பதிலும் இல்லை. நெருக்கிக் கேட்டால், 'அது பர்சனல் விஷயம்' என முடித்துக் கொள்வார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூட இன்னொரு பேச்சும் உலா வந்தது.

ஆனால், டிவி-யில் இருந்து வெளியேறியவருக்குச் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்தது. 'மேயாத மான்', 'கடைக்குட்டி சிங்கம்' உள்பட சில படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இவர் நடித்திருக்கும் இன்னும் சில படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்த நிலையில்தான், தற்போது முதன் முறையாக, காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி நெருங்குகிற இந்த வேளையில், ராஜ்வேலுடனான தனது உறவு குறித்து முதன் முறையாகப் பொதுவெளியில் மனம் திறந்திருக்கிறார். சில நாள்களுக்கு முன் கடந்து போன ராஜ்வேலுவின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து சொன்ன ப்ரியா, 'எல்லோரும் என்னை விட்டுப் போகும்போது நீ மட்டும் எல்லாவற்றையும் எனக்காக அளவின்றிக் கொடுக்கிறாய், நேர்மையான உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' என உருகியிருக்கிறார்.

பதிலுக்கு ராஜ்வேலுவும், 'நீ எனக்கு பெஸ்ட் மா' எனக் கூறியுள்ளார்.

செய்தி வாசிப்பாளர், சீரியல், விளம்பரப் படங்கள், சினிமா என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கிற ப்ரியாவை இப்படி உருக வைத்திருக்கும் ராஜ்வேல் யார்? விசாரித்தோம்.

சென்னை வண்டலூரில் உள்ள கிரெசண்ட் கல்லூரியில் ப்ரியாவுடன் படித்தவர், ராஜ்வேல். அப்போது தொடங்கியது இருவருக்கிடையேயான நட்பு. ஒருகட்டத்தில் ப்ரியாவின் வீட்டிலுள்ளவர்களுக்குமே ராஜ்வேலைப் பிடித்துப் போனது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ப்ரியா தனக்குப் பிடித்த மீடியா பக்கம் வந்துவிட, ஐ.டி துறைப் பணியில் சேர்ந்தார், ராஜ்வேல். தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் பணி புரிந்து வருகிறவரின் ஃபேஸ்புக் பக்கங்களுக்குச் சென்றால், ஜனவரி முதல் தேதியன்று ப்ரியாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன பதிவு பளிச்சிடுகிறது.

'சரி, ரெண்டு பேரும் சேர்ந்து எப்போ பேட்டி தருவாங்க' என்கிறீர்கள்தானே? ப்ரியாவிடமே பேசினோம். "சீக்கிரத்துல பேசுறேன்!" என எப்போதும் போல ஷார்ட்டான அந்தப் பதிலையே தந்தார்.