Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ஹைடெக் சிட்டியான ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் வலம்வந்தார் மிஸ்டர் மியாவ். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங்கின் கனவு இல்லம் இங்குதான் அமைந்துள்ளது. அங்கிருந்து அவரைப் பற்றி அள்ளிவந்த தகவல்கள்...

மிஸ்டர் மியாவ்

• மகிழ்திருமேனி இயக்கிய ‘தடையற தாக்க’ படம்தான் இவரின் முதல் தமிழ் படம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே, ‘யுவன்’ என்ற தமிழ் படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ரகுல் கல்லூரியில் படித்த காலத்தில், பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்துவந்தார். இவர் நடித்த முதல் படம், கன்னடத்தில் வெளியான ‘கில்லி’. செல்வராகவன் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் ரீமேக் அது.

• பிட்னஸில் ரகுலுக்கு ஆர்வம் அதிகம். ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் பிரபல உடற்பயிற்சி நிறுவனத்தை ஃப்ரான்சைஸ்-ஆக எடுத்து நடத்திவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

• படப்பிடிப்புக்கு பெரும்பாலும் பெற்றோரை அழைத்துச்செல்கிறார். சமீபத்தில் ‘தேவ்’ பட ஷூட்டிங்காக குடும்பத்துடன் உக்ரைன் சென்று ஊர்சுற்றி வந்திருக்கிறார்.

• ரகுல் கோல்ஃப் விளையாட்டு ரசிகர். மாதத்துக்கு ஒருமுறையாவது கோல்ஃப் கிரவுண்ட்டுக்கு சென்றுவிடுவார்.

மிஸ்டர் மியாவ்

• சினிமாவுக்கு வந்த நான்கு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 20 மொழிப் படங்களில் நடித்துள்ளார், ரகுல். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகவும் வலம்வருகிறார்.

• எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் சரி... தினமும் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்க வேண்டும் என்பதே ரகுலின் டார்க்கெட்!

ம்யூட்

• விவசாயக் கதையைவைத்து படம் எடுத்து ஹிட் அடித்த இயக்குநரின் அடுத்த படத்துக்கு முருகன் பெயர்கொண்டவர்தான் ஹீரோ. இதைக் கண்டு, ‘காண்டு’ ஆனார் ஒளி நடிகர். காரணம், அந்த இயக்குநர் ஒளி நடிகரை இயக்குவதாகத்தான் பேச்சாம். ஆனால், பெரிய கம்பெனி என்றதும் முருகன் பெயர் கொண்டவரை இயக்கப்போய்விட்டார் என்று ஒளி நடிகர் கொந்தளிக்கிறாராம்.

• தமிழில் கடந்த ஆண்டு வெளியான நம்பர் படம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. ‘ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் பள்ளிக்கூட மாணவியாகவும்
நானே நடிப்பேன்’ என்று அடம் பிடித்துள்ளார், சமர்த்து நடிகை. இயக்குநருக்கும் சமர்த்துக்கும் பயங்கர வாக்குவாதமாம்.
 

• சர்ச்சைக்குரிய சாமியாரின் பெயர் கொண்ட நடிகை, ஒருவரைக் கட்டியணைத்திருப்பது போன்ற படத்தை இணையத்தில் பதிந்திருந்தார். இவரின் காதலர் இவர்தான் என்று ரசிகர்கள் கிசுகிசுத்தனர். அதற்கு நடிகையிடமிருந்து மறுப்பு எதுவும் வரவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism