Published:Updated:

கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவரின் கதை! - பயோபிக் வரிசையில் இணைந்த ராகுல்காந்தி

கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவரின் கதை! - பயோபிக் வரிசையில் இணைந்த ராகுல்காந்தி
கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவரின் கதை! - பயோபிக் வரிசையில் இணைந்த ராகுல்காந்தி

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு புது ட்ரெண்ட் உருவாகி வருகிறது, முன்பெல்லாம் அதிரடி திரைப்படங்கள் அதிகம் வெளியாகின, பின்னர் நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆக்கிரமித்தன, இதையடுத்து குறைந்த பட்ஜெட் படங்கள், ஹாரர் படங்கள் என லிஸ்ட் தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது பயோபிக் படங்கள். 

கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவரின் கதை! - பயோபிக் வரிசையில் இணைந்த ராகுல்காந்தி

முன்னதாக  ‘மகாநடி’ என்ற பெயரில் உருவான நடிகை சாவித்ரியின் பயோபிக் இந்திய அளவில் செம ஹிட் அடித்தது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரிலேயே அவரின் வாழ்க்கை வரலாறு வெளியாகி அதுவும் பெரும் வெற்றி பெற்றது. என்.டி.ஆர், பால் தாக்ரே, மன்மோகன் சிங் போன்றவர்களின் கதைகள் சமீபத்தில் வெளிவந்தன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா, சாய்னா நேவால், சசிகலா ஆகியோர் படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவரின் கதை! - பயோபிக் வரிசையில் இணைந்த ராகுல்காந்தி

இந்த வரிசையில் தற்போது ராகுல்காந்தியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகவுள்ளது. `செயிட் ட்ராகுலா’ போன்ற 3டி படங்களை இயக்கிய ருபேஷ் பால்தான் ராகுல் காந்தி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் ’என் பெயர் ராகா’ எனத் தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகவுள்ளது.

இது பற்றி இயக்குநர் ரூபேஷ் கூறும்போது, ``இந்தப் படம் ராகுல் காந்தியை மிகைப்படுத்தி எடுக்கப்பட்டது இல்லை. கடுமையான, தொடர் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த ஒருவரின் கதைதான் இது.  இதைக் கஷ்டப்பட்டு முன்னேறிய எந்த ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையோடும் ஒப்பிடலாம். அதனால் இதை வாழ்க்கை வரலாறு என்று கூறுவதைவிட சாதாரண மனிதனின் கதை என்றே சொல்லலாம். 

கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவரின் கதை! - பயோபிக் வரிசையில் இணைந்த ராகுல்காந்தி

ராகா படத்தின் டீசர் முன்னரே வெளியாகிவிட்டது. இருந்தும் இந்தப் படத்தில் இன்னும் சில காட்சிகளைச் சேர்க்கவுள்ளோம். அமெரிக்காவில் தன் பெயரை மாற்றி ராகுல் படித்த கல்லூரி, அவர் படித்த பள்ளி மற்றும் ராகுலின் தாத்தா, பாட்டி உள்ள இத்தாலி போன்ற பல இடங்களில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாகவே படம் திரையிடப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.