Published:Updated:

கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

Published:Updated:
கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லி காம்பினேஷனில் ஹாட்ரிக்காக அடுத்த படம் தயாராகிவருகிறது. நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

* படத்தின் களம், கால்பந்து விளையாட்டு. பொதுவாகவே சமீபத்திய விஜய் படங்கள் அரசியல் பேசுவதைப்போலவே, இந்தப் படமும் விளையாட்டுத்துறைக்குள் உள்ள அரசியலைப் பேசும் என்கிறார்கள்.

ஏற்கெனவே வந்த விஜய்-அட்லி படங்களைப்போல் பழிவாங்கல் கதைதான். தன் நண்பனின் இழப்புக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவதும் நண்பனின் கனவை நிறைவேற்றுவதும்தான் கதை.

விஜய், கதிர் இருவரும் கல்லூரி நண்பர்கள். கால்பந்து விளையாட்டு வீரர்கள். கால்பந்தில் உலக அளவில் புகழ்பெற்ற வீரராக வருவதே இருவரின் லட்சியம். பிறகு, இருவரும் கால்பந்துப் பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். இரு அணிகளுக்கிடையேயான போட்டியில் ஏற்பட்ட மோதலில் கதிர் கூலிப்படையால் கொல்லப்படுகிறார். அது சாதாரணக் கொலை எனப் பலரும் நினைத்திருக்க, அதன் பின்னால் மாபெரும் சதி இருக்கிறது என விஜய்க்குத் தெரியவருகிறது. நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும், கதிர் பயிற்றுவித்த அணியை வெற்றிபெறவைக்க வேண்டும் என்ற இரண்டு சவால்கள் விஜய் முன் நிற்கின்றன. அதை விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.

கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

முன்னதாக விஜய்-நயன்தாரா காதல், யோகிபாபுவின் போர்ஷன்கள், விஜய்யின் ஆக்ஷன் ஏரியாக்கள் எல்லாம் கமர்ஷியல் பக்கங்கள். ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில் விஜய்க்கு இரண்டு நாயகிகள். ஆனால், இதில் நயன்தாரா மட்டுமே! வெகுநாளைக்குப் பிறகு விஜய்யைக் கலாய்த்துக் காதலிக்கும் ஒரு க்யூட் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டு விமர்சித்திருந்தார் ஹெச்.ராஜா. இந்தப் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல்.

தமிழில் விஜய்யைத் தவிர எந்தவொரு மாஸ் ஹீரோவும் விளையாட்டை மையப்படுத்திய படத்தில் கதாநாயகனாக நடித்ததில்லை. முன்பு ‘கில்லி’, இப்போது இந்தப்படம். இதில், விஜய் பங்குபெறும் கால்பந்துக் காட்சிகளை வெளிநாட்டுக் கால்பந்து வீரர் குழு வடிவமைக்கிறது. கால்பந்து விளையாட்டில்  நடிப்பதற்காகக் கடுமையான ஹோம் வொர்க் செய்து அதிர வைக்கப்போகிறாராம் விஜய்.

லோக்கல், பாரீன் என்று இரண்டு வகையான வில்லன்களை உருவாக்கியிருக்கின்றனர். ஏற்கெனவே ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி இந்தப் படத்தில் கதிரைக் கொலை செய்யும் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியை விஜய் விரட்டி விரட்டிப் பழிவாங்கும் சண்டைக் காட்சியைப் பரபரப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். வெளிநாட்டில் தன்னுடன் வரும் விளையாட்டு வீரர்களைத் தாக்கும் வெள்ளைக்கார வில்லன்களுக்கு, அவர் பாணியிலேயே பதிலடி கொடுக்கிறார் விஜய். டேனியல் பாலாஜியுடன் நடிக்கும் இன்னொரு பவர்புல் வில்லன் கேரக்டருக்கான தேர்வு தீவிரமாக நடந்துவருகிறது.

வடசென்னையில் நடக்கும் காட்சிகளைப் படம்பிடிக்க சென்னை பிரசாத், எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகம் போன்ற இடங்களில் அரங்குகள் அமைத்துள்ளனர். தவிர, வடசென்னையின் காசிமேட்டுப் பகுதி உள்ளிட்ட ரியல் லொக்கேஷன்களிலும் இரவுநேரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சென்னையில் உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் ஆறு கோடி செலவில் பிரமாண்டமான செட் போட்டு வருகின்றனர். இங்கேதான் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என்பதால், ஜூலைக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்த முடிவுசெய்துள்ளனர்.

முக்கியத் திருப்பம் கொண்ட காட்சிகளை வெளிநாடுகளில் படம்பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் அட்லி. அதற்காக, சில மாதங்களுக்கு முன்பே வெளிநாடுகளுக்குச் சென்று ஷூட் செய்யும் லொகேஷன்களைத் தேர்வு செய்து வந்திருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பல்கேரியா போன்ற ஏழு நாடுகளில் படப்பிடிப்பு நடக்கப்போகிறதாம். மேலும், வெளிநாட்டவருடன் விஜய் அதிரடியாக மோதும் சண்டைக்காட்சியும் படத்தில் இருக்குமாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே ஒரு பாடலை கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். இதை நூற்றுக்கும் மேற்பட்ட  குழந்தைகளுடன் விஜய் பாடி நடிக்கும் வகையில் ஷூட் செய்துள்ளார் அட்லி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- எம்.குணா, அலாவுதின் ஹுசைன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism