தலைவனைப் பிரிந்து வாடைக்காலத்தில் வாடும் தலைவியின் துயரே ‘நெடுநல்வாடை.’

உறவுகளுக்கு இடையிலான உணர்வுப் போராட்டமும், கனவு களுடனான உழைப்பின் போராட்டமுமே படத்தின் மையக்கரு. ஒவ்வொரு பிரிவுக்கும் தோல்விக்கும் காத்திருப்புக்கும் பின்னே ஒரு நேர்மையான காரணம் உண்டு என்பதை அழகியலோடு பதிவுசெய்திருக்கிறது நெடுநல்வாடை.

தந்தையின் ஊதாரித்தனத்தால் தன் தாய், தங்கையுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் இளங்கோ, தாத்தா கருவாத்தேவரின் கட்டுப்பாட்டில் வளர்கிறான். அவன் வாழ்வில் நேரும் காதல், தியாகம், பிரிவு, போராட்டம், ஏக்கம் என விரிகிறது படம். தாத்தா - பேரன் உறவு மிக அசலாகப் பதிவாகியிருக்கிறது. ஒரே சாதிக்குள்ளும்கூட காதலுக்கான தடையாய்ப் பொருளாதாரம் ஒரு முக்கிய காரணியாய் இருப்பதைப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர். கரும்பு விவசாயத்தை வாழ்வாதார மாகக்கொண்ட கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிது. ஒரு புதிய களத்தையும் மக்களையும் அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநர் செல்வக்கண்ணனைப் பாராட்டலாம்.

அறிமுக நாயகன் எல்விஸ் அலெக்ஸாண்டர், நாயகி அஞ்சலி நாயர், இருவருமே பாத்திரங்களுக்கான கச்சிதமான தேர்வு. குறிப்பாக, அஞ்சலி நாயர் எமோஷனல் காட்சிகளில் ஈஸியாக ஸ்கோர் செய்துவிடுகிறார். நாயகியின் அண்ணனாக வரும் அஜய் நட்ராஜ், உறவினராக ஐந்துகோவிலான், குழந்தை நட்சத்திரங்கள் ஜோஷ்வா, ஹரிணி ஆகியோர் நடிப்பில் கவர்கிறார்கள்.

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கூட கடிதம் மூலமாகக் காதலிப்பதாகக் காட்டும் காட்சிகள் செயற்கைத்தனம். ‘பூ’ ராமு பாத்திரத்தின் வசனங்கள் கூர்மையானவை. சாதாரண வட்டார வழக்கு வார்த்தைகளைக்கூட மியூட் செய்துள்ள சென்சார் போர்டு, சாதி இழிவு வசனத்தை எப்படி படத்தில் அனுமதித்ததோ?!

‘பூ’ ராமுவுக்கு இது முக்கியமான படம். படத்தை அவ்வளவு உணர்ச்சிபூர்வமாகத் தாங்கிப் பிடிக்கிறார். வசனங்களைக் காட்டிலும் மௌனத்தால் காட்சிகளுக்குக் கனம் கூட்டியிருக்கிறார். பாடல்களில் ‘பழைய’ வைரமுத்துவைக் காணவில்லை. வசனங்களிலும் பாடல் வரிகளிலும் சாதிப் பெருமை நெடியடிக்கிறது. ஜோஸ் ஃப்ராங்க்ளினின் இசை, 80களின் இளையராஜவை நினைவுபடுத்திச் செல்கிறது. முதல் படத்தின் சமரசங்கள் எங்கும் வெளிப்படாத வண்ணம் படம் எடுத்ததற்காகவே செல்வக்கண்ணனுக்கு வாழ்த்துகள். மைம் கோபி கதாபாத்திரத்துக்கு என்ன ஆனது, தங்கையின் திருமணம் என்ன ஆனது, எனப் பல கேள்விகளுக்கு விடை சொல்லாமலே படத்தை முடித்துவிட்டீரே இயக்குநரே?!

எதார்த்த வாழ்வியலைப் பதிவுசெய்தவகையிலும் பொருத்தமான நடிகர் தேர்வும் ‘நெடுநல்வாடை’யின் பலம் என்றால் படத்தில் இடம்பெறும் பிற்போக்கு சாதிய வசனம், நாயகன் தந்தை பாத்திரம் குறித்த குழப்பமான சித்திரிப்பு போன்ற அம்சங்கள் படத்தின் பலவீனம்.

- விகடன் விமர்சனக் குழு